PM Modi: 'திமுகவின் ஊழல்களை அம்பலப்படுத்துவேன்' - கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Pm Modi: 'திமுகவின் ஊழல்களை அம்பலப்படுத்துவேன்' - கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி!

PM Modi: 'திமுகவின் ஊழல்களை அம்பலப்படுத்துவேன்' - கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி!

Published Apr 10, 2024 01:22 PM IST Karthikeyan S
Published Apr 10, 2024 01:22 PM IST

  • வேலூரில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "திமுக, காங்கிரஸ் கட்சிகள் தங்கள் குடும்பத்திற்குதான் முக்கியத்துவம் தருகின்றன. திமுக என்பது குடும்ப நிறுவனத்தைப் போன்றது. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழ்நாட்டில் இளைஞர்கள் முன்னேற முடியாத நிலை உள்ளது. தமிழக கலாச்சாரத்திற்கு எதிராக திமுக செயல்படுகிறது. வளர்ந்த இந்தியாவை தமிழ்நாடு வழி நடத்தும் நேரம் இது. மக்களை மொழியால், மதத்தால், சாதியால் பிரித்தாளும் வேலையை திமுக செய்கிறது. திமுகவின் செயல்களை மக்கள் உணரும் போது அந்த கட்சி செல்லாக்காசாகிவிடும். திமுகவின் 50 ஆண்டுகால ஊழல்களை நான் வெளிச்சம் போட்டு காட்டுவேன்." என்றார்.

More