தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  World Cup 2023: உலகக் கோப்பை போட்டியில் இரண்டு நாடுகளுக்கு விளையாடி பட்டையை கிளப்பிய வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா?

World Cup 2023: உலகக் கோப்பை போட்டியில் இரண்டு நாடுகளுக்கு விளையாடி பட்டையை கிளப்பிய வீரர்கள் யாரெல்லாம் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 28, 2023 10:41 AM IST

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் இதுவரை 12 முறை நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு நாடுகளுக்காக விளையாடி வீரர்கள் பற்றி பார்க்கலாம்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இரண்டு நாடுகளுக்கு விளையாடிய வீரர்கள்
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இரண்டு நாடுகளுக்கு விளையாடிய வீரர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதவிர ஆசிய அணிகளான பாகிஸ்தான், இலங்கை மற்றும் கிரிக்கெட் விளையாட்டை கண்டுபிடித்ததாக கூறப்படும் இங்கிலாந்து ஆகிய அணிகள் உலகக் கோப்பையை வென்றுள்ளன.

கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரை வேறொரு நாட்டை சேர்ந்த வீரர்கள் இன்னொரு நாட்டுக்காக விளையாடி பல்வேறு வெற்றிகளை குவிப்பதற்கு காரணமாக இருந்த நிகழ்வுகள் ஏராளமான உள்ளன. அந்த வகையில் உலகக் கோப்பை போட்டிகளில் இரு வேறு முறை இரண்டு வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் பற்றி பார்க்கலாம்

இந்த லிஸ்டில் முதலில் இருப்பவர் இங்கிலாந்துக்காக உலகக் கோப்பை பெற்று தந்த இயான் மோர்கன். அயர்லாந்தை பூர்வீகமாக கொண்ட மோர்கன் முதல் முறையாக 2007 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்காக களமிறங்கினார்.

இதன் பின்னர் 2009இல் இங்கிலாந்து அணிக்காக விளையாட தொடங்கிய அவர், அப்போது முதல் அந்த அணிக்காக மட்டுமே விளையாடினார். 2011, 2015, 2019 ஆகிய மூன்று உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்றார் மோர்கன்.

2019 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி கேப்டனாகவும் செயல்பட்ட மோர்கன், அந்த அணிக்காக முதல் ஒரு நாள் உலகக் கோப்பை பெற்று தந்த கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.

இந்த லிஸ்டில் இரண்டாவது வீரராக இருப்பவர் ஈடி ஜாய்ஸ். மோர்கன் போல் இடது கை பேட்ஸ்மேனானவும், அயர்லாந்து நாட்டை சேர்ந்தவராகவும் இருந்த இவர் ஆரம்பத்திலேயே இங்கிலாந்து அணியில் 2007 உலகக் கோப்பை தொடரில் விளையாடினார். ஓபனராக பேட் செய்த இவர் இரண்டு அரை சதங்களும் விளாசினார்.

இதன் பின்னர் 2011, 2015 ஆகிய உலகக் கோப்பை தொடர்களில் சொந்த நாடான அயர்லாந்துக்கு களமிறங்கினார். அயர்லாந்து அணி சர்வதேச அளிவில் சவால் மிக்க அணியாக உருவெடுக்க ஜாய்சின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

2015 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 84 ரன்கள் அடித்து 300 ப்ளஸ் ரன்களை சேஸ் செய்ய உதவினார். அத்துடன் அயர்லாந்து அணிக்காக முதல் உலகக் கோப்பை சதமடித்த வீரர் என்ற பெருமையும் இவர் வசம் உள்ளது.

இந்த லிஸ்டில் மூன்றாவது வீரராக இருப்பவர் ஆண்டர்சன் கம்மின்ஸ். 1992 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி இவர், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் வென்றார். அந்த தொடரில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன் பின்னர் 2007 உலகக் கோப்பை தொடரில் சர்ப்ரைசாக கனடா அணிக்காக தனது 40வது வயதில் களமிறங்கினார். இந்த தொடரில் கனடாவுக்காக 3 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த லிஸ்டில் நான்காவது இடத்தில் இருப்பவர் கெப்லர் வெசல்ஸ். தென்ஆப்பரிக்கரான இவர் கிரிக்கெட் விளையாட அறிமுகமானதே ஆஸ்திரேலியா அணிக்காக. 1983 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடினார் வெசல்ஸ்.

இதன் பின்னர் 1980களின் இறுதியில் தாய்நாடான தென்ஆப்பரிக்காவுக்கு விளையாடி ஆரம்பித்த பிறகு 1992 உலகக் கோப்பை தொடரில் கேப்டனாகவும் களமிறங்கனார். அந்த தொடர் முழுவதும் அணியை சிறப்பாக வழிநடத்திய இவர், முதல் உலகக் கோப்பை தொடரிலேயே தென் ஆப்பரிக்கா அணியை அரையிறுதி வரை அழைத்து சென்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point