Mitchell Starc: ஒரே ஓவரில் 28 ரன்கள் வாரி வழங்கிய ஸ்டார்க்..பிரித்தெடுத்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்! அதிரடி விடியோ-starc crushed by livingstone 28 run assault 5 most expensive overs by aussies - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Mitchell Starc: ஒரே ஓவரில் 28 ரன்கள் வாரி வழங்கிய ஸ்டார்க்..பிரித்தெடுத்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்! அதிரடி விடியோ

Mitchell Starc: ஒரே ஓவரில் 28 ரன்கள் வாரி வழங்கிய ஸ்டார்க்..பிரித்தெடுத்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்! அதிரடி விடியோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 28, 2024 01:52 PM IST

Mitchell Starc: ஒரே ஓவரில் 28 ரன்கள் வாரி வழங்கிய ஸ்டார்க், ஆஸ்திரேலியா பவுலர்களில் மோசமான சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார். ஸ்டார்க் தனது அதிரடியால் பிரித்தெடுத்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் லிவிங்ஸ்டன் சிக்ஸர்கள் பறக்க விட்ட அதிரடி விடியோ வைரலாகி வருகிறது.

Mitchell Starc: ஒரே ஓவரில் 28 ரன்கள் வாரி வழங்கிய ஸ்டார்க்..பிரித்தெடுத்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்! அதிரடி விடியோ
Mitchell Starc: ஒரே ஓவரில் 28 ரன்கள் வாரி வழங்கிய ஸ்டார்க்..பிரித்தெடுத்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்! அதிரடி விடியோ (AFP)

இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா 2, இங்கிலாந்து ஒரு போட்டியில் வெற்றியை பெற்றுள்ளது.

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 39 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்தது.

இதன்பின்னர் சேஸ் செய்த ஆஸ்திரேலியா 126 ரன்களில் ஆல்அவுட்டானது. இதனால் இங்கிலாந்து 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது.

லிவிங்ஸ்டன் அதிரடி

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களில் கடைசி நேரத்தில் அதிரடியாக பேட் செய்த லியாம் லிவிங்ஸ்டன் 27 பந்துகளில் 62 ரன்கள் விளாசி தள்ளினார். தனது இன்னிங்ஸில் 7 சிக்ஸர், 3 பவுண்டரிகளை வெளுத்தார்.

இவருக்கு முன்னர் இங்கிலாந்து கேப்டனும், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனுமான ஹாரி ப்ரூக் 58 பந்துகளில் 87 ரன்கள் என அதிரடி காட்டினார்.

ஸ்டார் ஓவரில் 28 ரன்கள்

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து பேட் செய்த போது கடைசி ஓவர் ஆஸ்திரேலியா ஸ்டிரைக் பவுலர் மிட்செல் ஸ்டார் பவுலிங் செய்தார். அப்போது ஸ்டிரைக்கில் இருந்த லிவங்ஸ்தான், அனல் பறக்கும் வேகத்தில் வந்த ஸ்டார்க்கின் பந்துகளை நாலாபுறமும் சிக்சர் பறக்க விட்டார். அந்த ஓவரில் மட்டும் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 28 ரன்கள் அடித்தார்.

ஸ்டார்க் மோசமான சாதனை

உலக அளவில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்து வரும் மிட்செல் ஸ்டார்க், லிவிங்ஸ்டன் இந்த அதிரடி பேட்டிங்கால் மோசமான ரெக்கார்டை பதிவு செய்துள்ளார். சர்வதேச அளவில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த ஆஸ்திரேலியா பவுலர் மோசமான சாதனை நிகழ்த்தியுள்ளார்.

ஒரே ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த லிஸ்டில் இருக்கும் டாப் 5 ஆஸ்திரேலியா பவுலர்கள்:

கிளென் மேக்ஸ்வெல் - 30 vs இந்தியா (டி20ஐ, 2023)

மிட்செல் ஸ்டார்க் - 29 vs இந்தியா (டி20ஐ, 2024)

மிட்செல் ஸ்டார்க் - 28 vs இங்கிலாந்து (ஒரு நாள் போட்டி, 2024)

ஆடம் ஜம்பா - 28 vs வெஸ்ட் இண்டீஸ் (டி20ஐ, 2024)

பிரட் லீ - 27 vs வெஸ்ட் இண்டீஸ் (டி20ஐ, 2009)

இந்த லிஸ்டில் இருக்கும் மற்ற பவுலர்கள் டி20 போட்டிகளில் அதிக ரன்களை வாரி வழங்கியுள்ளனர். ஆனால் ஸ்டிரைக் பவுலரான ஸ்டார்க் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்களை வாரி வழங்கியிருக்கும் ஆஸ்திரேலியா பவுலராக மாறியுள்ளார்.

இரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஒரு நாள் போட்டி பிரிஸ்டோலில் நாளை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.