HT Sports Special: லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக டெஸ்ட் போட்டியில் அற்புதம் நிகழ்த்திய கங்குலி - ஒரு பிளாஷ்பேக்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ht Sports Special: லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக டெஸ்ட் போட்டியில் அற்புதம் நிகழ்த்திய கங்குலி - ஒரு பிளாஷ்பேக்

HT Sports Special: லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக டெஸ்ட் போட்டியில் அற்புதம் நிகழ்த்திய கங்குலி - ஒரு பிளாஷ்பேக்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 22, 2023 07:10 AM IST

அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த 10வது வீரர் என்ற பெருமையை பெற்ற செளரவ் கங்குலி தனது அற்புத ஆட்டத்தால் இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டார். இந்த போட்டி டிரா ஆவதற்கு கங்குலி, டிராவிட் ஆகியோரின் ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.

லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த கங்குலி
லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த கங்குலி

இந்த தொடரில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தான், பின்னாளில் இந்திய கிரிக்கெட்டில் ஜாம்பவான் வீரர்களாக உருவெடுத்த செளரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோரின் அறிமுக போட்டியாகும்.

இந்த போட்டிக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னரே செளரவ் கங்குலி இந்தியாவுக்காக ஒரு நாள் போட்டியில் அறிமுகமானார். ஆனால் அதன் பின்னரே அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு கிடைத்து.

கிரிக்கெட் உலகின் மெக்காவான லார்சில் வைத்து ஜூன் 20 முதல் 24 வரை இந்த போட்டி நடைபெற்றது.

இங்கிலாந்து முதலில் பேட் செய்து முதல் இன்னிங்ஸில் 344 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. முதல் இன்னிங்ஸிலேயே அற்புதமாக பவுலிங் செய்து கவனத்தை ஈர்த்தார் கங்குலி.

தான் பவுலிங் செய்த 7வது பந்தில் இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் நாசர் ஹுசைன் விக்கெட்டை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து மற்றொரு முக்கிய பேட்ஸ்மேனான கிக் விக்கெட்டையும் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்தது. மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய கங்குலி ஆரம்பத்தில் இருந்தே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் மூன்றாவது நாள், அதாவது ஜூன் 22ஆம் தேதி இந்தியாவை சரிவிலிருந்து மீட்கும் விதமாக விளையாடிய கங்குலி தனது முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸிலேயே சதமடித்து அசத்தினார்.

இதன்மூலம் முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்த 10வது இந்தியர், முதல் இன்னிங்ஸில் சதமடித்த 7வது வீரர் என்ற சாதனையை புரிந்தார். உலக அளவில் ஒட்டுமொத்தமாக இந்த சாதனையை நிகழ்த்திய 61வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

கங்குலி அவுட்டுக்கு பிறகு இந்திய அணியை மீட்கும் பணியை மற்றொரு அறிமுக வீரரான ராகுல் டிராவிட் மேற்கொண்டார். அவரும் 95 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி, சதத்தை கோட்டைவிட்டார். கங்குலியின் சதம், டிராவிட் அரைசதம் என இரண்டு சிறந்த இன்னிங்ஸால் இந்தியா முதல் இன்னிங்ஸில் 429 ரன்கள் குவித்தது. இறுதியில் இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிவுற்றது.

லார்ட்ஸ் மைதானம் என்றாலே கங்குலி, நாத்வெஸ்ட் தொடர் வெற்றிக்கு பின்னர் தனது டி சர்ட்டை கழட்டி சுழற்றிய சம்பவம்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். அந்த சம்வத்துக்கு 6 ஆண்டுகளுக்கு முன்னர் லார்ட்ஸில் இப்படியொரு அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார் கங்குலி.

பேட்டிங், பவுலிங் என கங்குலியின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸாக இந்த போட்டி அமைந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.