சதமடித்த சர்பராஸ்..அதிரடியில் மிரட்டும் பண்ட்! மழை குறுக்கீடுக்கு பின் மீண்டும் ஆட்டம் ஆரம்பம் - இந்திய முன்னிலை
நான்காம் நாள் ஆட்டத்தை 125 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா தொடர்ந்த நிலையில் களத்தில் இருந்த சர்பராஸ் கான் சதமடித்துள்ளார். அதிரடியில் மிரட்டும் பண்ட் அரைசதமடித்து விளையாடி வருகிறார்.மழை குறுக்கீடுக்கு பின் மீண்டும் ஆட்டம் ஆரம்பம் ஆகியுள்ள நிலையில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

சதமடித்த சர்பராஸ், அதிரடியில் மிரட்டும் பண்ட் - மழை குறுக்கீடுக்கு பின் மீண்டும் ஆட்டம் ஆரம்பம் (PTI)
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல்அவுட்டான இந்தியா, இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டெழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதை கருத்தில் கொண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் பேட் செய்தனர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது.
அந்த நாளின் கடைசி பந்தில் கோலி 70 ரன்களில் அவுட்டாக, களத்தில் சர்பராஸ் கான் 70 ரன்களுடன் நாட்அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.
சர்பராஸ் சதம்
நான்காம் நாள் ஆட்டத்தை ரிஷப் பண்ட் உடன் தொடர்ந்த சர்பராஸ் கான், சிறப்பாக பேட் செய்து சதமடித்தார். அவர் 110 பந்துகளில் 100 ரன்கள் அடித்து தனது இன்னிங்ஸில் 13 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.