RCB vs RR: பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி - ஓய்வு அறிவித்த தினேஷ் கார்த்திக்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு   /  Rcb Vs Rr: பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி - ஓய்வு அறிவித்த தினேஷ் கார்த்திக்

RCB vs RR: பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி - ஓய்வு அறிவித்த தினேஷ் கார்த்திக்

Marimuthu M HT Tamil
May 23, 2024 09:34 AM IST

RCB vs RR: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது. இப்போட்டியின்மூலம் ஐ.பி.எல் போட்டியில் இருந்து ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார்.

RCB vs RR: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
RCB vs RR: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (PTI)

எனவே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி:

அதன்படி, அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலியும், பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளெஸிஸும் களமிறங்கினர். அதில் கோலி 33 ரன்கள் எடுத்திருந்தபோது, சாஹல் பந்தில், அவுட்டானார். அதேபோல், டூ பிளெஸிஸும் போல்ட்டின் பந்தில் 17 ரன்கள் எடுத்தபோது பவுலிடம் கேட்ச் கொடுத்து மைதானத்தைவிட்டு வெளியேறினார். பின், கேமரூன் கிரீன் 3ஆவது வீரராக களமிறங்கி 27 ரன்கள் எடுத்தபோது, அஸ்வினின் சுழலில் பவுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பின் ரஜட் படிடர், 4ஆவதாக களமிறங்கி நிதானமாக ஆடி 34 ரன்கள் எடுத்தார். அப்போது துரதிர்ஷ்டவசமாக, ஆவேஷ் கான் பந்தில்,பாரக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

பின், கிளென் மேக்ஸ்வெல், ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வினின் பந்தில் அவுட்டானார். அடுத்து இறங்கிய மஹிபால் லம்ரோர், நிதானித்து ஆடி 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தபோது, ஆவேஷ் கானின் பந்தில் பவுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

மேலும், தினேஷ் கார்த்திக் வந்து 11 ரன்களும், கரண் சர்மா 5 ரன்களும் எடுத்தனர். இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு, 172 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் ஆவேஷ்கான் 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

சேஸிங்கில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

அதன்பின் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள், ஆரம்பம் முதலே அதிரடியாகவும் நிதானமாகவும் ஆடினர்.

முதல் இரண்டு வீரர்களாக களமிறங்கிய யஷஷ்வி ஜெய்ஸ்வாலும், டம் கோலர் கட்மோரும் நல்ல தொடக்கத்தைத் தந்தனர். ஜெய்ஸ்வால் 30 பந்துகளுக்கு 45 ரன்கள் எடுத்தபோது, கிரீனின் பந்தில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்துவிட்டு வெளியேறினார்.

அடுத்து பெர்குஷனின் பந்தில் கட்மோர் 20 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், சர்மாவின் பந்தில் 17 ரன்கள் எடுத்தபோது, தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்துவிட்டு பெவிலியன் திரும்பினார். அதன்பின் வந்த ரியான் பராக் 36 ரன்கள் எடுத்தபோது, சிராஜின் பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து வந்த ஜூரெல் 8 ரன்கள் எடுத்தபோது ரன் அவுட் ஆனார். பின் களம் தொட்ட ஹெட்மெயர் 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தபோது சிராஜின் பந்தில் அவுட்டானார்.

அடுத்து களமிறங்கிய ரோவ்மன் பவுலும், அஸ்வினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பவுல் 16 ரன்கள் எடுத்தபோது அணி, வென்றது.

இறுதியாக 19ஆவது ஓவரில் வெற்றி இலக்கைத் தாண்டி, 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆர்.சி.பியை வென்றது. இதன் மூலம் ஆர்.சி.பி அணியின் கோப்பை கனவு தகர்ந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கோப்பைக் கனவு பிரகாசமாகியுள்ளது.

ஆர்சிபி அணியின் சார்பில் முகமது சிராஜ், அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஐ.பி.எல்லில் இருந்து ஓய்வுபெற்ற தினேஷ் கார்த்திக்:

இப்போட்டியின் தோல்விக்குப் பின், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தனது ஐ.பி.எல் ரிட்டையர்மென்டினை அறிவித்தார். அந்த மொமென்ட் எமோஷனலாக மாறியது.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள், மற்றும் உடல்நலம் சார்ந்த பிற அரிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்தப் புகைப்படங்கள் பிரிவைப் பார்க்கவும்.