தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Pak Vs Afg: பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம்! தோனியின் 18 ஆண்டு சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான் வீரர்

Pak vs Afg: பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம்! தோனியின் 18 ஆண்டு சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான் வீரர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 26, 2023 11:56 AM IST

பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த தொடரை இழந்தபோதிலும் கடும் சவாலை அளித்தது ஆப்கானிஸ்தான். இந்த தொடரில் தோனியின் 18 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ள ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் ரஹமனுல்லா குர்பாஸ் மேலும் சில சாதனைகளை புரிந்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதமடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்ற ரஹமனுல்ல குர்பாஸ்
பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதமடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்ற ரஹமனுல்ல குர்பாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் போட்டியில் 201 ரன்கள் எடுத்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணியை 59 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் 300 ரன்கள் எடுத்த நிலையில், ஒரு விக்கெட், ஒரு பந்து மீதமிருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரஹமனுல்லா குர்பாஸ் சதமடித்ததுடன், 151 ரன்கள் குவித்தார். ஆப்கானிஸ்தான் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய குர்பாஸ் - இப்ராஹிம் ஸாட்ரன் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் சேர்த்தனர். இது பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஓபனிங் ஜோடி சேர்த்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.

இந்த போட்டியில் 151 ரன்கள் எடுத்ததன் மூலம், பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனை புரிந்தார். இதற்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் கேப்டன், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எம்எஸ் தோனி, எதிராக 2005இல் விசாகபட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் அடித்த 148 ரன்களே பாகிஸ்தான் அணிக்கு எதிராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. 18 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த சாதனையை ஆப்கான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரஹமனுல்ல குர்பாஸ் முறியடித்துள்ளார்.

அத்துடன் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் இந்த போட்டியில் தனது 5வது சர்வதேச சதத்தை அடித்தார். இதன் மூலம் மிக குறைவான போட்டிகளில் 5 சதமடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். ஏற்கனவே மூன்றாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சாதனையை முறியடித்தார்.

மிக குறைவான போட்டியில் 5 சதத்தை அடித்தவர்களில் தென்ஆப்பரிக்காவின் குவைன்டைன் டி காக் 19 போட்டிகளிலும், பாகிஸ்தானின் இமாம் உல ஹக் 19 போட்டிகளிலும் சதமடித்த முதல் இடத்தில் உள்ளார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக மற்றொரு பாகிஸ்தான் பேட்ஸ்மேனான பாபர் அசாம் 25 போட்டிகளில் 5 சதங்களை அடித்திருந்தார்.

தற்போது இந்த சாதனையை 23 போட்டிகளே விளையாடியிருக்கும் ரஹமனுல்ல குர்பாஸ் முறியடித்துள்ளார். அதேபோல் பாகிஸ்தான் அணிக்க எதிராக சதமடித்த முதல் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point