தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Mohammed Shami Record: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகள்..! ஷமி முறியடித்த சாதனைகள் என்னென்ன தெரியுமா?

Mohammed Shami Record: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகள்..! ஷமி முறியடித்த சாதனைகள் என்னென்ன தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 23, 2023 11:19 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பல்வேறு சாதனைகளை நிகழ்த்துயுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 276 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து சேஸ் செய்த இந்திய அணி 281 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் திணறடித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். தனது கிரிக்கெட் கேரியரில் இரண்டாவது முறையாக ஷமி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அத்துடன் முகமது ஷமி பல்வேறு சாதனைகளையும் புரிந்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னர் கபில் தேவ், அஜித் அகர்கர் ஆகியோர் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை எடுத்த நிலையில், தற்போது மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக முகமது ஷமியும் இணைந்துள்ளார்.

2007ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய மண்ணில் இந்திய பவுலர் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல் முறையாக உள்ளது.

ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற லிஸ்டில் அனில் கும்ப்ளேவை முறியடித்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ஷமி. இந்த பட்டியலில் அஜித் அகர்கர், 12 முறை நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்திலும், முகமது ஷமி 11 முறை வீழ்த்தி இரண்டாவது இடத்திலும் உள்ளார்.

மூன்றாவது இடத்தில் அனில் கும்ப்ளே 10 முறை, ஜவாகல் ஸ்ரீநாத் 10 முறை ஆகியோர் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய 7வது வீரர் என்ற பெருமைய பெற்றுள்ளார் முகமது ஷமி, இந்த லிஸ்டில் இந்திய பவுலர்களான முரளி கார்த்திக், அஜித் அகர்கர், யஸ்வேந்திர சாஹல், ரவிசாஸ்த்ரி, சச்சின் டென்டுல்கர், கபில் தேவ் ஆகியோருக்கு அடுத்தப்படியாக தற்போது ஷமியும் இணைந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும், நான்கு ஸ்பின்னர்களும் இதுவரை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

முகமது ஷமி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 23 போட்டிகளில் 37 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் கபில் தேவ் 45 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

கடைசியாக 2004இல் மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஜித் அகர்கர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் பின்னர் 19 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஷமி.

IPL_Entry_Point