Mayank Yadav: தனது முந்தைய சாதனையை தானே முறியடித்த லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ்!
Mayank Yadav: பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த மேட்ச்சில் ஆர்சிபி அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டாவது போட்டியில் வெற்றி பெற உதவினார் மயங்க் யாதவ். எல்.எஸ்.ஜியின் போட்டியில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக அறிமுகமான 21 வயதான அவர், தான் ஒரே ஒரு போட்டியில் மட்டும் அசத்துபவர் அல்ல; மாறாக அனைத்து போட்டிகளிலும் கலக்குவேன் என்பதை நிரூபித்து தொடர்ச்சியாக ஆட்டநாயகன் விருதை வென்றார்.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் எல்.எஸ்.ஜி அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது. செவ்வாய்க்கிழமை மணிக்கு 156.7 கிமீ வேகத்தில் பந்து வீசி தனது முந்தைய சாதனையை முறியடித்தார். முந்தைய போட்டியில் மணிக்கு 155.8 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி அசத்தினார்.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபியின், கிளென் மேக்ஸ்வெல் (0), கேமரூன் கிரீன் (9), ரஜத் படிதார் (29) ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலிய ஜோடியை தனது வேகமான பந்துவீச்சு தாக்குதலால் வீழ்த்தினார், அவரது வேகத்தை அவர்கள் கையாளத் தவறிவிட்டனர்.
மேக்ஸ்வெல் வீசிய ஷார்ட் பந்தில் ஆஸ்திரேலிய வீரர் சரியாக டைம் செய்யத் தவறியதால் இரண்டாவது பந்தில் நிக்கோலஸ் பூரன் டக் அவுட்டானார்.
பெங்களூருவின் எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் அவரது அற்புதமான பந்துவீச்சு காட்சிக்காக கிரிக்கெட் உலகம் இளம் வேகப்பந்து வீச்சாளரைப் பாராட்டியது.
இந்திய பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இளம் மயங்கின் அசுர வேகத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டனர்.
விளையாட்டின் ஜாம்பவான்கள் மயங்க் யாதவை பாராட்டினர்
"என்ன வேகம் #MayankYadav" என்று சூர்யகுமார் எக்ஸ் இல் எழுதினார்.
"அது ஒரு சீரியஸ் பால்! #PACE" என்று ஸ்டெயின் பதிவிட்டுள்ளார்.
புகழ்பெற்ற மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் இயன் பிஷப்பும் எல்.எஸ்.ஜி வேகப்பந்து வீச்சாளரைப் பாராட்டியதோடு, "இந்த மயங்க் யாதவ் காற்றின் குழந்தை போல பந்து வீசுகிறார்,,,pphoofff" என்று எழுதினார்.
தொடர்ச்சியாக ஆட்டநாயகன் விருதை வென்ற மயங்க், இந்தியாவுக்காக விளையாடுவதே தனது முதன்மை குறிக்கோள் என்று வலியுறுத்தினார்.
"மிகவும் நன்றாக உணர்கிறேன், இரண்டு போட்டிகளில் இரண்டு ஆட்டநாயகன் விருதுகள். இரண்டு போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டுக்காக விளையாடுவதே எனது லட்சியம். இது ஒரு தொடக்கம் மட்டுமே என்று நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறினார்.
மூன்று விக்கெட்டுகளில் - கிரீன் விக்கெட்டை தான் மிகவும் ரசித்தேன் என்றும் எல்.எஸ்.ஜி பவுலர் மயங்க் வெளிப்படுத்தினார்.
"கேமரூன் கிரீனின் விக்கெட்டை நான் மிகவும் ரசித்தேன். விரைவாக பந்து வீச நிறைய காரணிகள் உள்ளன - உணவு, தூக்கம், பயிற்சி. எனது உணவு மற்றும் மீட்பு - ஐஸ் குளியல் ஆகியவற்றில் நான் அதிக கவனம் செலுத்துகிறேன், "என்று அவர் மேலும் கூறினார்.
மயங்க் யாதவ் உள்நாட்டு கிரிக்கெட்டில் டெல்லிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீக்கில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார். அவர் ஒரு பந்து வீச்சாளர் ஆவார், அவர் வலது கை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் வலது கையால் பேட் செய்கிறார்.