IPL Throwback: ஐபிஎல் போட்டிகளில் இதுவரை நடந்த சூப்பர் ஓவர் போட்டிகள்! எந்த அணி அதிகமாக விளையாடியுள்ளது?
ஐபிஎல் போட்டிகளில் உச்சகட்ட திருப்புமுனையாக சூப்பர் ஓவரில் நடக்கும் போட்டிகள் அமைந்திருக்கும். அந்த வகையில் 2008 - 2023 வரை ஐபிஎல் போட்டிகளில் நடந்த சூப்பர் ஓவர் போட்டிகள் எவை என்பதை பார்க்கலாம்
ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டிகளும் த்ரில்லர் சினிமாவை பார்க்கும் அனுபவத்தை தரும் விதமாக பல்வேறு டுவிஸ்ட்களும், பரபரப்புகளும் அமைந்திருக்கும். இது சில சமயங்களில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாகவும், சில நேரங்களில் பவுலிங் அணிக்கும் சாதகமாகவும் மாறி மாறி ஊசலாடிக்கொண்டே இருக்கும்.
இரு அணிகளுக்கு வெற்றி தோல்வியின்றி சமனில் முடியும் போட்டிக்கு சூப்பர் ஓவர் மூலம் முடிவு எடுக்கப்படும். அந்த வகையில் ஐபிஎல் போட்டியில் இதுவரை 2008 முதல் 2023 வரை 14 போட்டிகள் சூப்பர் ஓவர் வரை சென்று முடிவு காணப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஐபிஎல் தொடரில் நடைபெற்ற சூப்பர் ஓவர் போட்டிகளும், அதன் வெற்றியாளர்களும் யார் என்பதை பார்க்கலாம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட்டில் நடந்த முதல் சூப்பர் ஓவர் போட்டியான இது 2009 சீசனில் கேப்டவுனில் நடந்தது. 150 ரன்கள் அடித்து ஸ்கோர் டை ஆன நிலையில் சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது
சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்
2010 சீசனில் இந்த போட்டி நடைபெற்றது. காயம் காரணமாக தோனி விளையாடாத நிலையில் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக சுரேஷ் ரெய்னா செயல்பட்டார். இரு அணிகளுக்கும் 136 ரன்கள் எடுத்த நிலையில், சூப்பர் ஓவரில் பஞ்சாப் வெற்றி பெற்றது. இதுதான் சிஎஸ்கே அணியை முதல் முறையாக பஞ்சாப் வீழ்த்திய போட்டியாக உள்ளது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு vs டெல்லி கேபிடல்ஸ்
2011,2012 ஆகிய சீசன்களில் சூப்பர் ஓவர் போட்டிகள் நடைபெறாத நிலையில், 2013 சீசனில் இந்த போட்டி பெங்களுருவில் நடந்ததது. இரு அணிகளும் 152 ரன்கள் அடிக்க, சூப்பர் ஓவரில் ஆர்சிபி வெற்றி பெற்றது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இதே சீசனில் இராண்டாவது சூப்பர் ஓவர் போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு மோதியது. ஹைதராபாத்தில் நடந்த இந்த போட்டியில் இரு அணிகளும் 130 ரன்கள் எடுக்க, சூப்பர் ஓவரில் சன் ரைசர்ஸ் வெற்றி பெற்றது
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
இந்த இரு அணிகளும் இரண்டாவது முறையாக சூப்பர் ஓவரில் 2014 சீசனின் போது மோதின. அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் 152 ரன்கள் எடுத்தது. ஆனால் ராஜஸ்தான் அணி சூப்பர் ஓவரில் வென்றது
பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
2015 சீசனில் அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் இரு அணிகளும் 191 ரன்கள் எடுத்தன. பஞ்சாப் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது
குஜராத் லயன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
2016 சீசனில் சூப்பர் ஓவர் போட்டிகள் நடைபெறாத நிலையில், 2017 சீசனில் ராஜ்கோட்டில் நடந்த இந்த போட்டி மும்பை இந்தியன்ஸ் வென்றது. முன்னதாக இந்த போட்டியில் இரு அணிகளும் 153 ரன்கள் எடுத்திருந்தன.
டெல்லி கேபிடஸ்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2019 சீசினில் டெல்லியில் நடந்த இந்த போட்டியில் இரு அணிகளும் 185 ரன்கள் எடுத்தன. இறுதியில் டெல்லி அணி சூப்பர் ஓவரில் வென்றது
மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ்
2019 சீசனில் நடந்த இரண்டாவது சூப்பர் ஓவர் போட்டியான இது மும்பையில் நடக்க, இரு அணிகளும் 162 ரன்கள் எடுக்க, மும்பை அணி வெற்றி பெற்று.
டெல்லி கேபிடல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
2020 சீசனில் துபாயில் நடந்த இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது. இரண்டு அணிகளும் 157 ரன்கள் எடுத்திருந்தது. இந்த சீசனில் மட்டும் நான்கு சூப்பர் ஓவர் போட்டிகள் நடைபெற்றன
ராயல்சேலஞ்ர்ஸ் பெங்களுரு vs மும்பை இந்தியன்ஸ்
2020 சீசனில் துபாயில் நடந்த மற்றொரு சூப்பர் ஓவர் போட்டியான இதில் இரண்டு அணிகளும் 201 ரன்கள் எடுத்தது கடைசியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு வென்றது
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2020 சீசன் மூன்றாவது சூப்பர் ஓவர் போட்டியாக அபுதாபியில் நடந்த இதில் இரு அணிகளும் 163 ரன்கள் எடுக்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது
மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
2020 சீசனில் நான்காவது சூப்பர் ஓவர் போட்டியாகவும், இந்த இரு அணிகளுக்கும் இரண்டாவது சூப்பர் ஓவர் போட்டியாகவும் அமைந்தது. துபாயில் நடந்த இந்த போட்டியில் இரு அணிகளும் 176 ரன்கள் எடுக்கப்பட்டது. சூப்பர் ஓவரையும் இரு அணிகளும் சமன் செய்ய, இரண்டாவது முறை நடந்தது. அதி்ல் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது
சன்ரைசர்ஸ் ஹைதாபாத் vs டெல்லி கேபிடல்ஸ்
கடைசியாக நடந்த சூப்பர் ஓவர் போட்டியாக இது உள்ளது. 2021 சீசனில் சென்னையில் நடந்த இந்த போட்டியில் 159 ரன்களை இரு அணிகளும் எடுக்க, சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி பெற்றது
2022,2023 ஆகிய இரு சீசன்களிலும் சூப்பர் ஓவர் நடைபெறவில்லை. சூப்பர் ஓவர் போட்டிகளை சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தலா 4 முறை வென்றுள்ளன.
டாபிக்ஸ்