Double Super Over rules: சூப்பராக முடிந்த இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி! சூப்பர் ஓவர் விதிமுறையில் இத்தனை விஷயங்களா?
The winner of the 3rd T20I between India and Afghanistan was determined through two Super Overs. Here's everything you need to know about the deal-breaker.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே பெங்களுருவில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி டையில் முடிவுற்ற நிலையில், இரண்டு சூப்பர் ஓவருக்கு பிறகு இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்ட முதல் முறையாக இரண்டு சூப்பர் ஓவர்கள் வீசப்பட்ட போட்டியாக இந்த ஆட்டம் அமைந்தது.
முதலில் பேட் செய்த இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுக்க, அதை சேஸ் செய்த ஆப்கானிஸ்தானும் 212 ரன்கள் அடித்து போட்டியை டை செய்தது. இதைத்தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 16 ரன்கள் குவித்தது. இதை சேஸ் செய்ய களமிறங்கிய இந்தியாவும் 16 ரன்கள் எடுக்க சூப்பர் ஓவரும் டை ஆனது.
இதனால் இரண்டாவது சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் இந்தியா 11 ரன்கள் எடுக்க, சேஸ் செய்ய களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 1 ரன்னில் சூப்பர் ஓவருக்கு விதிக்கப்பட்டிருக்கும் இரண்டு விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது. ஒரு வழியாகவே இந்தியா இந்த போட்டியை வென்றது என்றே கூறலாம்.
2019 ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி டை ஆன நிலையில், பவுண்டரி எண்ணிக்கை மூலம் இங்கிலாந்து சாம்பியன் ஆனது. அது சர்ச்சையை கிளப்பிய நிலையில் சூப்பர் ஓவர் டை ஆனால், முடிவு தெரியும் வரை தொடர்ந்து சூப்பர் ஓவர் வீசப்பட்டு வெற்றியாளார் தீர்மானிக்கப்படுவர் என்ற புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டது.
இந்த சூழ்நிலையில், ஒன்றுக்கு மேற்பட்ட சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டால் அதன் முக்கிய விதிமுறைகள் பற்றி பார்க்கலாம்
முதல் சூப்பர் ஓவரில் வீசிய பவுலர் இரண்டாவது சூப்பர் ஓவரை வீசக்கூடாது
முதல் சூப்பர் ஓவரை ஒரு பவுலர் வீசிய பிறகு அவருக்கு அடுத்த சூப்பர் ஓவர் வீச வாய்ப்பு கிடையாது. இந்தியாவுக்கு முதல் சூப்பர் ஓவரை முகேஷ் குமாரும், ஆப்கானிஸ்தானுக்கு முதல் சூப்பர் ஓவரை அஸ்மதுல்லா உமர்சாய் வீசினார்கள். இருவரும் 16 ரன்களை விட்டுக்கொடுத்தனர்.
இரண்டாவது சூப்பர் ஓவரை ஆப்கானிஸ்தானுக்காக பந்து வீசிய பரீத் அகமது 11 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இந்தியாவுக்கு பந்து வீசிய ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் ஒரு ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பேட்டிங் ஸ்விட்ச் செய்யலாமா?
சூப்பர் ஓவரை பொறுத்தவரை முதலில் பேட் செய்த அணி சேஸிங்கில் களமிறங்க வேண்டும். அதேபோல் சேஸிங் செய்து டை செய்த அணி முதலில் பேட் செய்ய வேண்டும். இதன் காரணமாகவே ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது. அதாவது முதலில் பேட் செய்த அணி சூப்பர் ஓவரிலும் முதலில் பேட் செய்ய கூடாது. சேஸிங் செய்த அணியும் சேஸிங்கில் இறங்க கூடாது
பவுலரால் முடியாது, பேட்ஸ்மேன் மட்டும் முடியும்
எம்சிசி விதிமுறைப்படி, முதல் சூப்பர் ஓவரில் அவுட்டான பேட்ஸ்மேன் இரண்டாவது சூப்பர் ஓவரில் பேட் செய்ய கூடாது. சூப்பர் ஓவர் தொடங்கும் முன்னரே யார் பேட்ஸ்மேன், பவுலர் என்பதை அணிகள் தீர்மானிக்க வேண்டும். முதல் சூப்பர் ஓவரில் பேட் செய்த பேட்ஸ்மேன் அவுட்டாகமல் இருந்தாலோ அல்லது முதல் சூப்பர் ஓவரில் களமிறங்க தேர்வு செய்யப்பட்ட பேட்ஸ்மேன் களமிறங்காமல் இருந்தாலோ அவர் இரண்டாவது சூப்பர் ஓவரிலும் பேட் செய்யலாம். அதேபோல் ரிட்டயர்ட் ஹர்ட் அல்லது அவுட் ஆனால் விதிமுறைப்படி மீண்டும் பேட் செய்யலாம்
அந்த வகையில் இரண்டாவது சூப்பர் ஓவரில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் பேட் செய்ய அழைக்கப்பட்டது தந்திரமான செயலாகவே அமைந்தது. யஷஸ்வி ஜெயஸ்வால் முதல் சூப்பர் ோவரில் அவுட்டாகமல் இருந்தார். ரிங்கு சிங் முதல் சூப்பர் ஓவரில் பேட் செய்யததால் இரண்டாவது சூப்பர் ஓவரில் களமிறக்கப்பட்டார்.
அதேபோல் ரோஹித் ஷர்மா முதல் சூப்பர் ஓவரில் கடைசி பந்தில் வெளியேறி ரிங்குவை அனுப்பியது பற்றி பலருக்கும் கேள்வி எழுந்தது. ரிட்டயர்ட் ஹர்ட், ரிட்டயர்ட் அவுட் ஆகிய இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. ரிட்டயர்ட் ஹர்ட் ஆக இருந்தால் பேட்ஸ்மேன் மீண்டும் பேட் செய்யலாம். ஆனால் ரிட்டயர்ட் அவுட் ஆனால் பேட் செய்ய முடியாது. இந்த சூழ்நிலையில் தன்னை விட வேகமாக ஓடக்கூடிய ரிங்கு சிங்கை களமிறக்கினார்.
இரண்டாவது சூப்பர் ஓவர் டை ஆனால் என்ன நடக்கும்?
ஒரு வேலை இரண்டாவதாக வீசப்பட்ட சூப்பர் ஓவரும் டை ஆனால், வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் அடுத்தடுத்து சூப்பர் ஓவர்கள் வீசப்படும்.
இதற்கு முன்னர் ஐபிஎல் 2020 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இரண்டு சூப்பர் ஓவர்களில் முடிவு தெரியவந்தது. இதையடுத்து இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது போட்டி இரண்டு சூப்பர் ஓவர்கள் நடைபெற்ற முதல் சர்வதேச போட்டியாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்