Fact Check: முத்தையா முரளிதரன் Tauba Tauba பாடலுக்கு நடனமாடுவதாக பரவி வரும் வீடியோ உண்மையா?-is the viral video of muthiah muralitharan dancing to tauba tauba song true fact check story - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Fact Check: முத்தையா முரளிதரன் Tauba Tauba பாடலுக்கு நடனமாடுவதாக பரவி வரும் வீடியோ உண்மையா?

Fact Check: முத்தையா முரளிதரன் Tauba Tauba பாடலுக்கு நடனமாடுவதாக பரவி வரும் வீடியோ உண்மையா?

News checker HT Tamil
Aug 05, 2024 05:51 PM IST

Muttiah Muralitharan dance: முத்தையா முரளிதரனின் நளினமான நடனம் என்பதாக இந்த வீடியோ பரவி வருகிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

Fact Check: முத்தையா முரளிதரன் Tauba Tauba பாடலுக்கு நடனமாடுவதாக பரவி வரும் வீடியோ உண்மையா?
Fact Check: முத்தையா முரளிதரன் Tauba Tauba பாடலுக்கு நடனமாடுவதாக பரவி வரும் வீடியோ உண்மையா?

முத்தையா முரளிதரனின் நளினமான நடனம் என்பதாக இந்த வீடியோ பரவி வருகிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

உண்மை என்ன?

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் Tauba Tauba பாடலுக்கு நடனமாடுவதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் நியூஸ் செக்கர் தமிழ் குழு ஈடுபட்டது.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்தபோது பல்வேறு நபர்கள் இவரது பெயர் கிரண் என்பதாகப் பகிர்ந்திருந்தனர்.

அதனை அடிப்படையாகக் கொண்டு நடனக்கலைஞர் கிரண் என்பதாகத் தேடியபோது Mr.KiranJ என்கிற அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் நமக்குக் கிடைத்தது. அதில் கடந்த ஜூலை 25 , 2024 ஆம் தேதியன்று குறிப்பிட்ட வைரல் வீடியோ பதிவிடப்பட்டிருந்தது.

“CAN’T GET OVER WITH THIS VIBETHANK SO MUCH BANGALORE @dance.inn.bangalore FOR SUCH A MEMORABLE DAY LOTS OF LOVE,” என்கிற வாசகத்துடன் இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளப்பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் கிரண்.

அவரது வீடியோவே முத்தையா முரளிதரன் என்று தவறாகப் பரவி வருகிறது.

முடிவு என்ன?

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் Tauba Tauba பாடலுக்கு நடனமாடுவதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நியூஸ் செக்கர் தமிழ் குழுவுக்கு கிடைத்த ஆதாரங்களின்படி வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

பொறுப்புத் துறப்பு

இந்தச் செய்தி முதலில் News checker Tamil-இல் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

முத்தையா முரளிதரன் (பிறப்பு 17 ஏப்ரல் 1972) ஒரு இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர், தொழிலதிபர் மற்றும் முன்னாள் தொழில்முறை கிரிக்கெட் வீரர் ஆவார். ஒரு டெஸ்ட் போட்டிக்கு சராசரியாக ஆறு விக்கெட்டுகளுக்கு மேல், அவர் விளையாட்டு வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார். 800 டெஸ்ட் விக்கெட்டுகள் மற்றும் 530 ஒரு நாள் சர்வதேச (ODI) விக்கெட்டுகளை எடுத்த ஒரே பந்து வீச்சாளர். 2024 ஆம் ஆண்டு வரை, அவர் சர்வதேச கிரிக்கெட்டில் மற்ற பந்துவீச்சாளர்களை விட அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 1996 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியில் முரளிதரன் ஒரு அங்கமாக இருந்தார்.

முரளிதரனின் சர்வதேச வாழ்க்கை அவரது பந்துவீச்சு நடவடிக்கையால் சர்ச்சைகளால் சூழப்பட்டது. பந்து வீசும் போது அவரது பிறவியிலேயே வளைந்த கையின் அசாதாரண நீட்சி காரணமாக, அவரது பந்துவீச்சு நடவடிக்கை பல சந்தர்ப்பங்களில் நடுவர்கள் மற்றும் கிரிக்கெட் சமூகத்தின் பிரிவுகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. உருவகப்படுத்தப்பட்ட விளையாட்டு நிலைமைகளின் கீழ் பயோமெக்கானிக்கல் பகுப்பாய்வுக்குப் பிறகு, முரளிதரனின் நடவடிக்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டது.

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.