Aamir Khan: மகிழ்ச்சியான விவாகரத்து.. அமீர் கானுடனான பிரிவை என்ஜாய் செய்யும் கிரண் ராவ்
Aamir Khan: கிரண் ராவ் தனது முன்னாள் கணவர் அமீர் கானுடனான தனது நட்புறவை வெளிப்படையாக விவாதித்தார். பிரிந்தாலும், அவர்கள் நண்பர்களாகவே இருக்கிறார்கள்

மகிழ்ச்சியான விவாகரத்து.. அமீர் கானுடனான பிரிவை என்ஜாய் செய்யும் கிரண் ராவ்
Aamir Khan: பாலிவுட் நடிகர் அமீர் கான் மற்றும் கிரண் ராவ் விவாகரத்து செய்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. இருவரும் 16 வருட நீண்ட பயணத்திற்குப் பிறகு 2021 ஆம் ஆண்டில் தங்கள் திருமண உறவை முடிக்க முடிவு செய்தனர்.
விவாகரத்துக்குப் பிறகும், அவர்களுக்கு இடையே நிறைய நல்ல பிணைப்பு உள்ளது. இருவரும் அடிக்கடி குடும்பத்துடனும் மகனுடனும் நேரத்தை செலவிடுவதை பார்க்க முடிந்தது.
விவாகரத்துக்கு பிறகு மகிழ்ச்சி
சமீபத்தில் 'மிஸ்ஸிங் லேடீஸ்' படத்தில் அமீர் கான் மற்றும் கிரண் இணைந்து நடித்தனர். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில், அமீருடனான விவாகரத்து குறித்து கிரண் கூறியதைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விவாகரத்துக்குப் பிறகு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறினார். கிரண் ராவ் ஏன் இப்படி சொன்னார் தெரியுமா?