தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ipl 2023 Most Sixers By Indians: கடந்த சீசன் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் யார்?

IPL 2023 Most Sixers by Indians: கடந்த சீசன் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் யார்?

Manigandan K T HT Tamil
Mar 18, 2024 06:00 AM IST

IPL 2023 Most Sixers by Indians: இந்த லிஸ்ட்டில் அடுத்து வரும் இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.இவர் 14 மேட்ச்களில் விளையாடிய 26 சிக்ஸர்களை விளாசினார். மொத்தம் 82 ஃபோர்ஸை அடித்திருக்கிறார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி, மொத்தம் 625 ரன்களை எடுத்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ரிங்கு சிங்
மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ரிங்கு சிங் (HT)

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த சீசனில் செய்யப்பட்ட ரெக்கார்டுகளை நினைவுப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக நமது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் தளத்தில் கடந்த சில நாட்களாக எழுதி வருகிறோம்.

அந்த வரிசையில் கடந்த சீசனில் அதிக சிக்ஸர்களை விளாசிய இந்திய பிளேயர்களை பார்ப்போம்.

ஷிவம் துபே

சிஎஸ்கே வீரரான ஷிவம் துபே 16 மேட்ச்களில் விளையாடி 418 ரன்களை பதிவு செய்தார். அவரது அதிகபட்சம் 52 ரன்களாக இருந்தது. மொத்தம் 264 பந்துகளை எதிர்கொண்டார். ஸ்டிரைக் ரேட் 158.33. இவர் 12 பவுண்டரிகளையும், 35 சிக்ஸர்களை விளாசினார். அதிக சிக்ஸர்களை கடந்த சீசனில் விளாசிய இந்திய பிளேயர்களில் இவர்தான் முதலிடத்தில் உள்ளார்.

சுப்மன் கில்

இந்த லிஸ்ட்டில் அடுத்த இடத்தில் சுப்மன் கில் உள்ளார். இவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடியவர். 17 மேட்ச்களில் விளையாடி 890 ரன்களை எடுத்தார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 129. மொத்தம் 564 பந்துகளை எதிர்கொண்டு இத்தனை ஸ்கோரை பதிவு செய்துள்ளார். இவர் மொத்தம் 85 பவுண்டரிகளையும், 33 சிக்ஸர்களை விளாசினார்.

ருதுராஜ் கெய்க்வாட்

கடந்த 2023 சீசனில் சிஎஸ்கே வீரரான ருதுராஜ் கெய்க்வாட், மொத்தம் 16 மேட்ச்களில் விளையாடினார். அவர் 590 ரன்களை விளாசினார். மொத்தம் 400 பந்துகளை எதிர்கொண்டு இந்த ஸ்கோரை பதிவு செய்தார். 4 அரை சதங்கள் விளாசிய அவர், 46 பவுண்டரிகள், 30 சிக்ஸர்களை பதிவு செய்திருக்கிறார்.

ரிங்கு சிங்

மொத்தம் 14 மேட்ச்களில் விளையாடியுள்ள ரிங்கு சிங், 474 ரன்களை குவித்துள்ளார். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி அசத்தினார். இவரது அதிகபட்சம் 67 நாட்அவுட். இவர் மொத்தம் 29 சிக்ஸர்களை விளாசி அசத்தினார்.

சூர்யகுமார் யாதவ்

இந்த லிஸ்ட்டில் அடுத்து இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இவர் மொத்தம் 16 மேட்ச்களில் விளையாடி 605 ரன்களை எடுத்திருக்கிறார். இவரது அதிகபட்சம் 103 நாட் அவுட். இவர் மொத்தம் 28 சிக்ஸர்களை பதிவு செய்திருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடினார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இந்த லிஸ்ட்டில் அடுத்து வரும் இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.இவர் 14 மேட்ச்களில் விளையாடிய 26 சிக்ஸர்களை விளாசினார். மொத்தம் 82 ஃபோர்ஸை அடித்திருக்கிறார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி, மொத்தம் 625 ரன்களை எடுத்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) (ஸ்பான்சர்ஷிப் காரணங்களுக்காக டாடா ஐபிஎல் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆண்கள் டுவென்டி 20 (டி20) கிரிக்கெட் லீக் ஆகும். 2007 இல் BCCI ஆல் நிறுவப்பட்ட IPL லீக், 10 நகரங்களின் அடிப்படையிலான உரிமையுடைய அணிகளால் போட்டியிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட கோடை காலத்தில் ஐபிஎல் நடத்தப்படுவது வழக்கம். இது ஐசிசி ஃபியூச்சர் டூர்ஸ் திட்டத்தில் ஒரு பிரத்யேக சாளரத்தைக் கொண்டுள்ளது, அதாவது ஐபிஎல் சீசன்களில் குறைவான சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்.

IPL_Entry_Point