WPL 2024: பேட்டிங்கில் மிரட்டல்! மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு டாட் வைத்த யுபி வாரியர்ஸ்
மும்பை பேட்டர்களுக்கு பெரிதாக சான்ஸ் கொடுக்காமல் துல்லியமாக பவுலிங் செய்த யுபி வாரியர்ஸ், பேட்டிங்கிலும் கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் 6வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மகளிர் - யுபி வாரியர்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையே பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தது. இன்றைய போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் விளையாடவில்லை.
பவுலர்கள் அசத்தல்
மும்பை பேட்டர்களை அதிரடியாக ரன் குவிக்க விடாமல் மிகவும் துல்லியமாக யுபி வாரியர்ஸ் பவுலிங் செய்தனர். இதனால் மும்பை பேட்டர்கள் பெரிய ஸ்கோர் குவிக்க முடியாமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.
ஓபனிங் பேட்டர் ஹேலி மேத்யூஸ் மட்டும் நிலைத்து நின்று பேட் செய்து அரைசதம் விளாசினார். 55 ரன்கள் எடுத்து மேத்யூஸ் அவுட்டானார். இவருக்கு அடுத்தபடியாக யஸ்திகா பாட்யா 26, அமெலியா கெர் 23 ரன்களை எடுத்தனர்.
20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. யுபி வாரியர்ஸ் பவுலர்களில் பவுலிங் செய்த 5 பேரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
யுபி வாரியர்ஸ் சேஸிங்
இதையடுத்து சேஸிங்கில் களமிறங்கிய யுபி வாரியர்ஸ் விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டு 16.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 1632 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் தொடர் வெற்றி பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அத்துடன் இந்த சீசனில் முதல் வெற்றியை யுபி வாரியர்ஸ் பதிவு செய்துள்ளது. அந்த அணியின் ஓபனிங் பேட்டர் கிரண் நவ்கிரே, அதிரடியாக பேட் செய்து அரைசதம் அடித்ததோடு 57 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இவருக்கு அடுத்தபடியாக கிரேஸ் ஹாரிஸ் 38, அலிசா ஹீலி 33 ரன்கள் எடுத்தனர். இதுவரை விளையாடியிருக்கும் மூன்று போட்டிகளில் மும்பை 2 வெற்றி, ஒரு தோல்வியும் பெற்றுள்ளது. யுபி வாரியர்ஸ் அணிஒரு வெற்றி, இரண்டு தோல்வியை பெற்றுள்ளது.
நாளை நடைபெற இருக்கும் போட்டியில் ஆர்சிபி மகளிர் - டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணிகள் மோதவுள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9