India vs Sri Lanka: வாண்டர்சே சுழலில் சிக்கி தடுமாறிய இந்தியா.. பொறுமையாக சம்பவம் செய்த இலங்கை வெற்றி!-india vs sri lanka match results sri lanka beat india y 32 runs in 2nd odi - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  India Vs Sri Lanka: வாண்டர்சே சுழலில் சிக்கி தடுமாறிய இந்தியா.. பொறுமையாக சம்பவம் செய்த இலங்கை வெற்றி!

India vs Sri Lanka: வாண்டர்சே சுழலில் சிக்கி தடுமாறிய இந்தியா.. பொறுமையாக சம்பவம் செய்த இலங்கை வெற்றி!

Karthikeyan S HT Tamil
Aug 04, 2024 10:26 PM IST

India vs Sri Lanka 2nd ODI: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக பந்துவீசிய இலங்கை பவுலர் ஜெஃப்ரி வாண்டர்சே 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

India vs Sri Lanka: வாண்டர்சே சுழலில் சிக்கி தடுமாறிய இந்தியா.. பொறுமையாக சம்பவம் செய்த இலங்கை வெற்றி!
India vs Sri Lanka: வாண்டர்சே சுழலில் சிக்கி தடுமாறிய இந்தியா.. பொறுமையாக சம்பவம் செய்த இலங்கை வெற்றி!

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இலங்கை அணியின் அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் கமிண்டோ மெண்டிஸ் ஆகியோர் தலா 40 ரன்கள் எடுத்தனர். கடைசி கட்டத்தில் வெலாலகே 35 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

241 ரன்கள் இலக்கு

241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். சுப்மன் கில் பொறுமையாக ரன்கள் சேர்க்க அதிரடியாக ஆடிய ரோகித் ரன் வேட்டையில் ஈடுபட்டார்.

அரைசதம் கடந்த ரோகித்

முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் அபாரமாக விளையாடினார். வழக்கம்போல் பவுண்டரி, சிக்சர் என விரட்டிய ரோகித் இலங்கையின் பந்துவீச்சை மைதானத்தின் நாலா பக்கமும் பறக்கவிட்டார். ரோகித் சர்மாவின் ரன் வேட்டையை கட்டுப்படுத்த இலங்கை அணி தடுமாறியது.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்து ஜெஃப்ரி வாண்டர்சே பந்தில் அவுட்டானார். இதில் ஐந்து பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும்.

முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் குவிப்பு

மறுமுனையில் பொறுமையாக விளையாடிய சுப்மன் கில் 44 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில் 3 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும். ரோகித் சர்மா, கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13.3 ஓவர்களில் 97 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி 14 ரன்களில் நடையை கட்ட இந்திய அணியின் ஆட்டத்தின் போக்கு மாறியது. இருப்பினும் அக்சர் படேல் சிறப்பாக விளையாடி 44 ரன்கள் எடுத்தார்.

இலங்கை அணி வெற்றி

இலங்கை பவுலர் ஜெஃப்ரி வாண்டர்சே சுழலை தாக்குப் பிடிக்க முடியாமல் மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகினர். இதனால் இறுதியில் இந்திய அணி 42.2 ஓவர்களில் பத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 208 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கையின் வாண்டர்சே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக, இந்திய பிளேயிங் லெவனில் மாற்றமில்லை என ரோகித் அறிவித்தார். அதேநேரம், இலங்கை அணியின் முன்னணி வீரரான ஹசரங்கா காயம் காரணமாக விலகி இருந்தார். அவருக்கு பதிலாக ஜெப்ரி வாண்டர்சே அணியில் இடம்பிடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.