தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Rohit Sharma: எல்லோரும் வாங்க..! Always Welcomes You - வெற்றி நடை பயணத்துக்கு ரசிகர்களை அழைத்த ரோகித் ஷர்மா

Rohit Sharma: எல்லோரும் வாங்க..! Always welcomes you - வெற்றி நடை பயணத்துக்கு ரசிகர்களை அழைத்த ரோகித் ஷர்மா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 03, 2024 05:48 PM IST

டி20 உலகக் கோப்பை 2024 வென்ற இந்திய அணி நாடு திரும்பியிருக்கும் நிலையில் மும்பையில் நடைபெற இருக்கும் வெற்றி நடை பயணத்துக்கு ரசிகர்களை அழைத்துள்ளார் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா.

வெற்றி நடை பயணத்துக்கு ரசிகர்களை அழைத்த ரோகித் ஷர்மா
வெற்றி நடை பயணத்துக்கு ரசிகர்களை அழைத்த ரோகித் ஷர்மா (ANI)

டி20 உலகக் கோப்பை 2024 தொடர் வெஸ்ட் இண்டீஸ், யுஎஸ்ஏ ஆகிய நாடுகளில் நடைபெற்றது. ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை தொடரான இதை ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வென்று சாம்பியன் ஆனது. இது இந்தியா வென்ற இரண்டாவது டி20 உலகக் கோப்பை தொடராகும்.

2007ஆம் ஆண்டில் முதன்முதலில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. அதன் பிறகு 17 ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக டி20 உலக சாம்பியன் ஆகியுள்ளது. அத்துடன் 2013இல் தோனி தலைமையில் வென்ற சாம்பியன் டிராபி கோப்பைக்கு பின்னர் 11 ஆண்டு கால கோப்பை வறட்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.