India vs Sri Lanka: அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை..இந்தியா வெற்றிக்கு 241 ரன்கள் தேவை!
India vs Sri Lanka: கொழும்பில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி டை ஆனது. இரு அணிகளும் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவின் பிரேமதாச மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து இலங்கை அணி முதலில் களமிறங்கியது. முகமது சிராஜ் வீசிய முதல் பந்தில் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா டக் அவுட்டாகி இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதற்கு முன்பும் இதே போல இலங்கை வீரர்கள் இந்தியாவிற்கு எதிராக முதல் பந்தியிலேயே அவுட் ஆகி உள்ளனர்.
அடுத்து வந்த குசால் மெண்டிஸ், அவிஷ்கா பெர்னாண்டோவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். 2ஆவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த நிலையில் அவிஷ்கா 5 புவண்டரிகள் உள்பட 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து குசால் மெண்டிஸ் 42 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
சமரவிக்ரமா 14 ரன்னும், சரித் அசலங்கா 25 ரன்னும், ஜனித் லியாங்கே 12 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். இதனால் இலங்கை அணி திணறியது. 7வது விக்கெட்டுக்கு வெலாலகேவுடன் ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினரார். அவர் 72 ரன்கள் சேர்த்த நிலையில் வெலாலகே 39 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.
241 ரன்கள் இலக்கு
இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் அக்ஷர் படேல் தலை ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.
முன்னதாக, இந்திய பிளேயிங் லெவனில் மாற்றமில்லை என ரோகித் அறிவித்தார். அதேநேரம், இலங்கை அணியின் முன்னணி வீரரான ஹசரங்கா காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஜெப்ரி வாண்டர்சே அணியில் இடம்பிடித்துள்ளார்.
சமனில் முடிந்த இந்தியா - இலங்கை முதல் ஒருநாள் போட்டி
இந்தியா - இலங்கை இடையிலான ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களைச் சேர்த்தது. 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது. மேலும், இந்தியா - இலங்கை இடையிலான முந்தைய போட்டியும் சமனில் முடிந்ததால், அடுத்தடுத்து சமன் காரணமாக சூப்பர் ஓவர் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா - இலங்கை இடையிலான ஆட்டம் சமனில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 58 ரன்களை குவித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்