தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Ind Vs Pak Asia Cup 2023 Live: வெற்றியை நோக்கி இந்தியா - பாகிஸ்தான் பேட்டிங் திணறல்

IND vs PAK Asia Cup 2023 live: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் சூப்பர் 4 ஆசியக் கோப்பை போட்டியின் அப்டேட்

IND vs PAK Asia Cup 2023 live: வெற்றியை நோக்கி இந்தியா - பாகிஸ்தான் பேட்டிங் திணறல்

05:18 PM ISTSep 11, 2023 10:48 PM HT Tamil Desk
  • Share on Facebook
05:18 PM IST

IND vs PAK Asia Cup 2023 live: இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டி நடைபெற உள்ளது. போட்டி தொடர்பான அனைத்து அப்டேட் விபரங்களும் உடனுக்குடன் இந்த தளத்தில் காணலாம். கிரிக்கெட் போட்டியை நேரலையில் காண்பதைப் போன்ற உணர்வை பெறுவீர்கள்.

Mon, 11 Sep 202305:18 PM IST

அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்த குல்தீப்

இடது கை ஸ்பின்னரான குல்தீப் யாதவ் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்த நிலையில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து பேட்டிங்கில் தடுமாறி வருகிறது.

Mon, 11 Sep 202303:58 PM IST

மழைக்கு பின் தொடங்கிய போட்டி - மூன்றாவது விக்கெட் காலி

மழைக்கு பின் ஆட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில் முகமது ரிஸ்வான் விக்கெட்டை தூக்கினார் ஷர்துல் தாக்கூர்

Mon, 11 Sep 202303:00 PM IST

மழையால் ஆட்டம் தடை

பாபர் அசாம் அவுட்டான பின்னர் அணியின் ஸ்கோர் 11 ஓவர் முடிவில் 11 ரன்கள் என இருந்தபோது மழை குறுக்கிட்ட நிலையில், ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

Mon, 11 Sep 202302:45 PM IST

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அவுட்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நிதனமாக பேட் செய்து ரன்களை குவித்து  வந்த நிலையில் அவரது விக்கெட்டை தூக்கினார் ஹர்திக் பாண்ட்யா. 10 ரன்கள் எடுத்திருந்த அசாம் கிளீன் போல்டானார்.

Mon, 11 Sep 202302:45 PM IST

பாகிஸ்தான் பேட்டிங் தொடக்கம் - திருப்புமுனை தந்த பும்ரா

இந்தியா அணி பாகிஸ்தான் அணிக்கு 357 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது. பாகிஸ்தான் அணி  சேஸிங்கை தொடங்கியுள்ளது. 

ஆட்டத்தின் 4.2 ஓவரில் அணியின் முதல் விக்கெட்டாக இமாம் உல் ஹக் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனை தந்துள்ளார் ஜஸ்ப்ரீத் பும்ரா.

Mon, 11 Sep 202301:12 PM IST

கோலி, ராகுல் சதத்தால் இந்த பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு

பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோரின் சதத்தால் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Mon, 11 Sep 202312:59 PM IST

விராட் கோலி அதிரடி சதம்

கேஎல் ராகுலை தொடர்ந்து விராட் கோலியும் சதமடித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் தனது 47வது சதத்தை அடித்துள்ளார்.

Mon, 11 Sep 202312:56 PM IST

கேஎல் ராகுல் சதம்

பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக பேட் செய்த கேஎல் ராகுல் சதமடித்தார். இவரது தனது இன்னிங்ஸில் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

Mon, 11 Sep 202312:17 PM IST

கோலி அரைசதம்

 கேஎல் ராகுலுடன் இணைந்து சிறப்பாக பேட் செய்து வந்த விராட் கோலி அரைசதம் அடித்துள்ளார். 55 பந்துகளில் அரைசதம் அடித்துள்ள கோலி தனது இன்னிங்ஸில் 4 பவுண்டரிகளை அடித்துள்ளார். இது கோலியின் 66வது அரைசதமாக உள்ளது.

Mon, 11 Sep 202312:12 PM IST

டிரிங்கிஸ் பிரேக் வரை இந்தியா ஆதிக்கம்

ரிசர்வ் நாள் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் பவுலர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் 38 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்துள்ளது. கேஎல் ராகுல் 66, விராட் கோலி 49 ரன்களுடன் களத்தில் உள்ளனர்

Mon, 11 Sep 202311:51 AM IST

கேஎல் ராகுல் அரைசதம்

ரசிர்வ் நாள் போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கோலி - கேஎல் ராகுல் ஜோடி விரைவாக ரன்களை குவித்து வருகின்றனர். கேஎல் ராகுல் 60 பந்துகளுக்கு 50 ரன்கள் எடுத்துள்ளார்.

Mon, 11 Sep 202311:19 AM IST

ரிசர்வ் நாள் போட்டி தொடக்கம்

சுமார் 1 மணி நேரம் 40 நிமிடம் தாமதத்துக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ரிசர்வ் நாள் போட்டி நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. 

Mon, 11 Sep 202311:49 AM IST

ஹரிஸ் ராவுஃப் பங்கேற்கமாட்டார்

ரிசர்வ நாளான இன்றைய போட்டியில் ஹரிஸ் ராவுஃப் பங்கேற்கவில்லை.  தசை பிடிப்பு ஏற்பட்ட நிலையில் எதிர் வரும் போட்டிகளை கருத்தில் கொண்டு ஹரிஸ் ராஃவுப் விளையாடமாட்டார் என பாகிஸ்தான் பவுலிங் பயிற்சியாளர் ஹரிஸ் ராஃவுப் தெரிவித்துள்ளார். 

Mon, 11 Sep 202310:34 AM IST

மைதானத்தில் அம்பயர்கள் ஆய்வு

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மழை நின்றிருக்கும் நிலையில் மைதானத்தில் நிலைமை குறித்து அம்பயர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் சிலரும் மைதனாத்துக்கு வந்துள்ளனர் 

Mon, 11 Sep 202310:21 AM IST

நின்ற சாரல் மழை

சாரல் மழை, ஈரப்பதம் மிக்க மைதானம் காரணமாக போட்டி தொடங்க தாமதமாகி சுமார் 45 நிமிடங்கள் ஆகியிருக்கும் நிலையில் தற்போது மழை முழுவதுமாக நின்றுள்ளது

Mon, 11 Sep 202309:55 AM IST

தொடரும் சாரல் மழை

கொழும்பு ஆர் பிரேமதாசா மைதானத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து  வருவதால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ரிசர்வ நாள் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

திட்டமிட்டபடி 3 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 20 நிமிடம் தாமதமாகியும் நடைபெறாமல் உள்ளது.

Mon, 11 Sep 202309:39 AM IST

போட்டி தொடங்குவதில் தாமதம்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மைதானத்தில் நிலவி வரும் ஈரப்பதம் காரணமாக தாமதமாகியுள்ளது.  இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் ஜெர்சியை அணிந்தவாறு இரு நாட்டு ரசிகர்களும் மைதானத்தில் வருகை புரிந்து போட்டி காண காத்திருக்கின்றனர்.

Mon, 11 Sep 202309:32 AM IST

நின்ற மழை! போட்டி தொடங்க வாய்ப்பு

ரிசர்வ் நாளான இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி மீண்டும் தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்பு கொழும்புவில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், தற்போது நின்றுள்ளது.

இதனால் போட்டி திட்டமிட்டப்படி தொடங்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

Mon, 11 Sep 202308:59 AM IST

இளையராஜா பாடல், சூடான டீ குடிப்பதற்கான நேரம் - அஸ்வின் டுவிட்

இலங்கை பிரேமதாசா மைதானத்தில் இன்றும் மழை தொடர்ந்து வரும் நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து மைதானத்தின் மழை பெய்யும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் இந்திய ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின், “சில இளையராஜா பாடல்களும் கேட்கவும், சூடான டீ குடிப்பதற்கான நேரமாக இருப்பதாக” டுவிட் செய்துள்ளார்.  

Mon, 11 Sep 202308:27 AM IST

கொழும்புவில் தொடரும் மழை 

கொழும்புவில் இன்று காலை முதல் மழை பெய்வதும், வெயில் அடிப்பதுமாக மாறி மாறி இருந்து வருகிறது. மாலை நேரத்தில் 50 முதல் 60 சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் என கூறப்பட்டுள்ளது.

தற்போது போட்டி தொடங்க இன்னும் சில மணி நிமிடங்களே இருக்கும் நிலையில் மீண்டும் மழை பெய்து வருகிறது.

Sun, 10 Sep 202303:33 PM IST

இந்தியா-பாகிஸ்தான் போட்டி நாளை தொடரும்

போட்டி நாளை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Sun, 10 Sep 202303:02 PM IST

9 மணிக்கு போட்டி மீண்டும் தொடங்குகிறது?

9 மணிக்கு போட்டி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sun, 10 Sep 202302:44 PM IST

தொடர்ந்து தாமதம்

ஒரு குறிப்பிட்ட இடத்தில் தண்ணீர் தேங்கியிருப்பதால் அதை காய வைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Sun, 10 Sep 202302:22 PM IST

அடுத்த கள ஆய்வு 8 மணிக்கு..

அடுத்த கள ஆய்வு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

Sun, 10 Sep 202302:00 PM IST

அடுத்த கள ஆய்வு சற்று நேரத்தில்..

சற்று நேரத்தில் மீண்டும் கள ஆய்வு நடைபெறவுள்ளது.

Sun, 10 Sep 202301:35 PM IST

மழை நின்றது

மழை நின்றதை அடுத்து தார்ப்பாயை அகற்றி மைதானத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Sun, 10 Sep 202312:51 PM IST

போட்டி நடக்குமா என்பதில் சந்தேகம்

கருமேகங்கள் கலைந்து வருண பகவான் வழிவிட்டார் என எதிர்பார்த்த நிலையில், மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியது. இதனால், போட்டி நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

Sun, 10 Sep 202312:14 PM IST

'கருமேகங்கள் கலைகின்றன'

நல்ல வெளிச்சம் இருப்பதாகவும், லேசான மழைப் பொழிவு இருப்பதால் மழை நின்றதும் மீண்டும் போட்டி தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sun, 10 Sep 202311:59 AM IST

மழை பொழிவு குறைவு

கருமேகங்கள் கலைந்து தற்போது மழை சற்றே நின்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sun, 10 Sep 202311:24 AM IST

மழையால் ஆட்டம் தற்காலிக நிறுத்தம்

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தின்போது 24.1 வது ஓவரில் மழை வரத் தொடங்கியது. இதையடுத்து, தார்ப்பாயை போட்டு மூடினர்.

Sun, 10 Sep 202311:19 AM IST

ODI இல் 2000 ரன்ஸ்

ஒரு நாள் கிரிக்கெட்டில் 2000 ரன்களை கடந்தார் ராகுல்.

Sun, 10 Sep 202311:14 AM IST

பழைய பார்முக்கு திரும்பும் ராகுல்

கே.எல்.ராகுலும், கோலியும் நிலைத்து நின்று விளையாடி வருகின்றனர்.

Sun, 10 Sep 202310:58 AM IST

கில் விக்கெட்டை எடுத்த ஷஹீன் அஃப்ரிடி

நங்கூரமாக நிலைத்து நின்று விளையாடி வந்த கில் விக்கெட்டை ஷஹீன் அப்ரிடி காலி செய்தார். கில்லும் கேப்டன் ரோகித்தை போன்று கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அப்போது அவர் 58 ரன்கள் எடுத்திருந்தார்.

Sun, 10 Sep 202310:58 AM IST

ரோகித் கேட்ச் ஆகி அவுட்

ஷதாப் கான் பந்தை தூக்கிய அடிக்க முயன்றபோது கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார் கேப்டன் ரோகித் சர்மா. அவர் 49 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருந்தார்.

Sun, 10 Sep 202310:50 AM IST

கேப்டன் ரோஹித் ஷர்மா 50 ஆவது அரை சதம்

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா 50 அரை சதங்களை பூர்த்தி செய்தார்.

Sun, 10 Sep 202310:48 AM IST

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன்கில்!

தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டத் தொடங்கினர். சுப்மன் கில் வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபக்கம் ரோகித் பொறுமையாக விளையாடினாலும் பின்னர் வெளுத்து வாங்கத் தொடங்கியுள்ளார்.

Sun, 10 Sep 202310:41 AM IST

தவறவிட்ட பாகிஸ்தான் வீரர்கள்!

முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இந்தியா 61 ரன்களை குவித்தது. சில அற்புதமாக கேட்ச் வாய்ப்புகளை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டனர். அதுவும் கில் அடித்த ஷாட்கள் தான்.

கில் பவுண்டரிகளை விளாசி அசத்தி வருகிறார். 7.3 வது ஓவரில் ஸ்லிப்பில் கேட்ச் வாய்ப்பு கிடைத்தது.

Sun, 10 Sep 202310:15 AM IST

5 மாதங்களுக்குப் பிறகு அணிக்காக களமிறங்கும் கே.எல்.ராகுல்

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் கே.எல்.ராகுல் இடம்பிடித்துள்ளார். இவர் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு அணிக்காக களமிறங்குகிறார். அதேநேரம், ஸ்ரேயஸ் ஐயர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.

Sun, 10 Sep 202309:50 AM IST

பும்ரா மற்றும் கே.எல்.ராகுல் இந்திய அணியில் சேர்ப்பு

ஆசியக் கோப்பை 2023 சூப்பர் 4 சுற்று: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு

முகமது ஷமி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக பும்ரா மற்றும் கே.எல்.ராகுல் இந்திய அணியில் சேர்ப்பு என கேப்டன் ரோஹித் அறிவித்துள்ளார்.

Sun, 10 Sep 202309:25 AM IST

ஆசிய கோப்பை இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான்

IND vs PAK Asia Cup 2023 live: இலங்கையின் கொழும்புவின் பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று சூப்பர் 4 சுற்றின் 3 ஆவது ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கின்றன. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

Sun, 10 Sep 202309:08 AM IST

இந்தியாவுக்கு உந்து சக்தியாக இருப்பாரா கோலி!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பார். குரூப் சுற்றின் 3-வது ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக தாக்கத்தை ஏற்படுத்த தவறிய கோலிக்கு, நேபாளத்துக்கு எதிரான போட்டியில் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங் செய்தால், கோலி இந்தியாவுக்கு உந்து சக்தியாக இருப்பார்.

Sun, 10 Sep 202308:08 AM IST

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதிவிட்ட ட்விட்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மைதானத்தில் இருந்து ட்வீட் செய்துள்ளது. இந்நிலையில் இரவு 7 மணி வரை மழை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sun, 10 Sep 202308:03 AM IST

பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் ஆட்டம்

IND vs PAK Asia Cup 2023: விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக தனது சிறந்த டி20 இன்னிங்ஸ்களில் சிலவற்றை விளையாடியுள்ளார். மேலும், 2012 ஆசிய கோப்பையில் அவர்களுக்கு எதிராக அவர் எடுத்த 183 ரன்கள் கோஹ்லியின் புகழ்பெற்ற ODI வாழ்க்கையின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. இன்னும், அவரது உயர்ந்த தரத்தை கருத்தில் கொண்டு, அவர் அவர்களுக்கு எதிராக 14 போட்டிகளில் சராசரியாக 45.00 மட்டுமே, தலா இரண்டு சதங்கள் மற்றும் அரை சதங்களுடன் 540 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளுக்கு எதிராக கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் சராசரி 50க்கு மேல் இல்லை

Sun, 10 Sep 202307:05 AM IST

இந்தியாவை அச்சுறுத்த காத்திருக்கும் சஹீன்

IND vs PAK Asia Cup 2023 live:சஹீன் அப்ரிடியின் இடது கை பந்துவீச்சு பல இந்திய வீரர்களை திணறடிக்கும் என நம்பப்படுகிறது. உலகக்கோப்பையில் முதன்முறையாக, இந்தியா - பாகிஸ்தானிடம் தோற்றதற்கு சஹீனின் பந்துவீச்சு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. முழங்கால் காயம் காரணமாக, கடந்த ஆசியப்போட்டியில் பங்கேற்காத சஹீன், தற்போது செம ஃபார்மில் உள்ளார்.

Sun, 10 Sep 202306:56 AM IST

ரிசர்வ் டே-க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்

IND vs PAK Asia Cup 2023 live: இந்திய - பாகிஸ்தான் அணிகள், மோதும் இன்றைய போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது,மழையால் இந்திய - பாகிஸ்தான் அணிகள் பாதிக்கப்பட்டால், இப்போட்டி  அடுத்த நாளுக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முடிவு இலங்கை, வங்கதேச அணிகளைப் பாதிக்கும் என்றும் நெறியற்றது என்றும் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார். அதேபோல், ஒரு போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே கொடுத்துவிட்டு, மற்றபோட்டிகளுக்கு ரிசர்வ் டே கொடுக்காமல் இருப்பதை ஏற்கமுடியாது என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். 

Sun, 10 Sep 202306:39 AM IST

பாகிஸ்தானின் நஷீமும் மெசினும் ஒன்று

IND vs PAK Asia Cup 2023 live:இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக, நஷீம் ஷா என்னும் வேகப்பந்துவீச்சாளர் இருப்பார் எனத் தெரிகிறது. ஏனெனில், இதுவரை, 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்த இளம் பாகிஸ்தான் வீரர், அட்லீஸ்ட் ஒரு விக்கெட்டையாவது ஒவ்வொரு போட்டியிலும் கைப்பற்றத் தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், நஷீம் போன்றவர் எனப்பலரும் வர்ணிக்கின்றனர். 

Sun, 10 Sep 202306:24 AM IST

இந்தியா விளையாடும்போது மழை குறுக்கிட்ட போட்டிகள்

IND vs PAK Asia Cup 2023 live: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில், இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. பந்துவீசவில்லை. அப்போது மழைகுறுக்கிட்டது. இரண்டாவது நேபாளத்திற்கு எதிரான போட்டியில் மழை குறுக்கிட்டது.

Sun, 10 Sep 202306:16 AM IST

பாகிஸ்தான் அணியின் முழு அணி பட்டியல்:

IND vs PAK Asia Cup 2023 live: பாகிஸ்தான் அணியின் முழுவீரர்களின் பட்டியல்: ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் ஆசம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), ஆகா சல்மான், இஃப்த்கர் அஹமது, சதாப் கான், ஃபஹீம் அஷ்ரஃப், சஹீன் அப்ரிதி, நசீம் ஷா, நஷீம் ஷா, ஹரீஸ் ரஃப், சாத் சாகில், முகமது நவாஸ், உஷ்மா மிர், அப்துல்லா ஷஃபிக்,முகமது ஹாரிஸ், ஜூனியர் முகமது வசிம்

Sun, 10 Sep 202307:05 AM IST

முழு இந்திய அணியின் பட்டியல்:

India vs Pakistan Asia Cup Live Score: முழு இந்திய அணியின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராத் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜாஸ்பிரிட் பும்ரா, அக்‌ஷர் படேல், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், பிரிஷித் கிருஷ்ணா, திலக் வர்மா

Sun, 10 Sep 202306:02 AM IST

கொழும்புவில் நீலநிறத்தில் காணப்படும் வானம்

IND vs PAK Asia Cup 2023 live: 90 விழுக்காடு மழை வரும் என வானிலை முன்னறிவிப்பு தெரிவித்தாலும், கொழும்பு நகரில் வானம் நீலநிறத்தில் இதமான வெயிலுடன் காணப்படுகிறது. இது நாள் முழுக்க தொடர்ந்தால், இந்தியா - பாகிஸ்தான் அணிக்கு இடையிலான போட்டிகள், நன்றாக நடக்க வாய்ப்புள்ளது

Sun, 10 Sep 202305:51 AM IST

சவால்களை எதிர்கொள்ள தொடர்ந்து வலியுறுத்துகிறேன் - பாகிஸ்தான் பவுலிங் பயிற்சியாளர்

IND vs PAK Asia Cup 2023 live: பாகிஸ்தான் வீரர்களுக்கான பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கெல், தங்களது வீரர்கள் குறித்து பேசுகையில், ’பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் வேகம், செயல்படும் விதம் அதிகரித்து வருகிறது. நாங்கள் பயிற்சிக்கு முன் கண்பார்வை பரிசோதனை, நல்ல செயல்பாட்டு பரிசோதனை ஆகியவற்றை செய்கிறோம். 5 விதமான சூழல்களில் கடுமையான பயிற்சி எடுப்போம். சவால்களை எதிர்கொள்ள தொடர்ந்து வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்தார்.

Sun, 10 Sep 202305:31 AM IST

'நான் இந்திய அணியில் மீண்டும் விளையாட இருப்பது மிகவும் நம்பிக்கையை அளிக்கிறது’ - கே.எல்.ராகுல்

IND vs PAK Asia Cup 2023 live:  அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கே.எல்.ராகுல் ஆசியக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இன்று களமிறங்கவுள்ளார். 'நான் இந்திய அணியில் மீண்டும் விளையாட இருப்பது மிகவும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருவதாக உணர்கிறேன்’ என கே.எல்.ராகுல் பிசிசிஐக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.  

Sun, 10 Sep 202305:14 AM IST

பாகிஸ்தானுடன் விளையாடும் போட்டியை உலகக்கோப்பை போல் நினைத்து ஆடுவோம் - சுப்மன் கில்

IND vs PAK Asia Cup 2023 live:'எங்களிடம் தெளிவான பார்வை உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் இக்கட்டான சூழ்நிலையில் எவ்வாறு விளையாடவேண்டும் என நன்கு தெரியும். உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதும் அனைத்து வகையான போட்டிகளிலும் நாங்கள் எதிர்கொள்ளும் அதே வகையான அழுத்தம் மற்றும் இறுக்கத்தை ஆசியக்கோப்பை போட்டியிலும் காட்டுவோம்’ என இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். 

Sun, 10 Sep 202304:56 AM IST

இந்திய அணியினர் பாகிஸ்தான் அணியினரை புகழ்கின்றனர்: ஓபனாக திட்டிய பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர்

IND vs PAK Asia Cup 2023 live: முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முஷ்டாக் அஹமது கூறுகையில், 'இந்திய  அணியில் ரோஹித், கோலி ஆகிய நல்ல வீரர்கள் உள்ளனர். ஆனால்,  இந்திய அணியினர் பாகிஸ்தான் அணியினரை அதிகம் புகழ்கின்றனர். இந்திய கிரிக்கெட் வீரர்கள்,சாஹீன், நஷீம் மற்றும் ரஃப் ஆகியோரை அதிகம் புகழ்கின்றனர். இது எங்கள் அணிக்குத்தான் நல்லது’ எனக் கூறியுள்ளார்.  

Sun, 10 Sep 202304:23 AM IST

இந்திய அணி வீரர்களை நிலைகுலையச் செய்ய 4 பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியில் தக்கவைப்பு!

IND vs PAK Asia Cup 2023 live: இந்திய அணியின் டாப் ஆர்டர் முக்கிய வீரர்களான கோலி, சுப்மன் கில், ரோஹித் சர்மா ஆகியோரை பந்துவீச்சு மூலம் தொந்தரவு செய்ய, பாகிஸ்தான் வீரர்களான ஃபஹீம் அஷ்ரப், நஷீம் ஷா, ஷாஹீன் ஷா அப்ரிடி, ஹாரீஸ் ரவுஃப் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். 

Sun, 10 Sep 202303:44 AM IST

நீங்கள் என்ன தேர்வுக்குழுவா? - சாடிய கவாஸ்கர், ஹர்பஜன்

IND vs PAK Asia Cup 2023 live: இந்திய அணி பற்றியும், இந்திய அணியின் வீரர்கள் பற்றியும் தொடர்ந்து விமர்சித்து வரும் முன்னாள் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு சுனில் கவாஸ்கர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.  அதில்‘உங்களுடைய அறிவுரை எங்களுக்குத் தேவையில்லை; நீங்கள் என்ன தேர்வுக்குழுவா?’ என கடுமையாக விமர்சித்துள்ளார். அதை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் ஆமோதித்துள்ளார்.

 

Sun, 10 Sep 202303:18 AM IST

இந்திய அணியின் உத்தேச ஆர்டர்

IND vs PAK Asia Cup 2023 live: டாப் ஆர்டர்: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராத் கோலி

மிடில் ஆர்டர்: ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்)

ஆல் ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல்,

பவுலர்ஸ்: குல்தீப் யாதவ், ஜாஸ்பிரிட் பும்ரா, முகமது சிராஜ்

Sun, 10 Sep 202303:00 AM IST

5ஆவதாக களமிறங்குவது யார்?

IND vs PAK Asia Cup 2023 live: ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும்போட்டியில் யார் 5ஆவதாக களமிறங்குவார் என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ராகுல் சமீபத்தில் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். அவர் எப்போதுமே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில்  5வது நபராக களமிறங்குவார். ஆனால், கிஷான் இந்தாண்டு டாப் ஆர்டரில் களமிறங்கி 4 அரை சதங்களை விளாசியுள்ளார். அவர் 19 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, பேட்டிங் சராசரி 48.50ஆக வைத்துள்ளார். கடந்த லீக் சுற்று ஆட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக 5ஆவது வீரராக களமிறங்கி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 82 ரன்கள் எடுத்துள்ளார். இதனால், இஷானுக்கு 5வது வீரராக களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. 

 

 

 

 

Sun, 10 Sep 202302:35 AM IST

பவுலிங்கில் இந்திய அணியில் யார் யார் இறக்கப்படலாம்?

IND vs PAK Asia Cup 2023 live:  வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தந்தை ஆன பிறகு, பங்கேற்கும் ஆட்டம் என்பதால் மகிழ்ச்சியுடன் களம் இறங்குவார். இது அணிக்குச் சாதகமான சூழலை உருவாக்கும். சுழல் பந்துவீச்சில் ஜடேஜா, குல்தீப் ஆகியோர் களம் இறங்கவுள்ளதால், அக்சர் படேலுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். 

Sun, 10 Sep 202302:11 AM IST

இந்தியாவுக்கு எதிராக களம்காணும் பாகிஸ்தான் அணியின் உத்தேச பட்டியல்!

IND vs PAK Asia Cup 2023 live: ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும்போட்டியில், பாகிஸ்தான் அணியின் உத்தேச பட்டியல்: பஹர் ஜமான், இமாம் உல்-ஹக், பாபர் ஆசம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஆஹா சல்மான், இப்திகர் அகமது, ஷதப் கான், பஹீம் அஷரப், ஷாகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப்.

 

Sun, 10 Sep 202302:07 AM IST

களம்காணும் இந்திய அணியின் உத்தேச பட்டியல்

IND vs PAK Asia Cup 2023 live: ஆசியக்கோப்பை கிரிக்கெட்போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும்போட்டியில், இந்திய அணியின் உத்தேச பட்டியல்: சுப்மன் கில், ரோகித் சர்மா (கேப்டன்), விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

 

Sun, 10 Sep 202301:54 AM IST

நாங்கள் பாகிஸ்தானுடன் அதிகம் விளையாண்டது கிடையாது; பழைய ஆட்டம் நெருக்கடியாகத்தான் இருந்தது - சுப்மன் கில்

IND vs PAK Asia Cup 2023 live: இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து பேசுகையில், ‘மற்ற அணிகளுக்கு இடையே போட்டியில் விளையாடுவதுபோன்று, நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகம் விளையாடுவது கிடையாது. அவர்களின் வேகப்பந்து வீச்சு சிறப்பாகவுள்ளது. ஷாகீன் ஷா பந்தை அதிகம் சுவிங் செய்யக்கூடியவர். நஷீம் ஷா அதிகவேகத்தில் பந்துவீசுபவர். அடிக்கடி விளையாடாதபோது, அது சற்றுவித்தியாசமாகத்தான் இருக்கும்.  பாகிஸ்தானுடனான கடந்த லீக் போட்டி நெருக்கடியாகத்தான் இருந்தது’ என்றார். 

Sun, 10 Sep 202301:45 AM IST

‘எங்களுக்கே வெற்றிவாய்ப்பு’ - பாகிஸ்தான் கேப்டன் சவால்

IND vs PAK Asia Cup 2023 live: இப்போட்டி குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம், ‘கடந்த ஜூலை மாதம் முதல், இலங்கையில் லங்கா பிரீமியர், ஆப்கன் தொடர் ஆகியவற்றை இலங்கையின் மைதானங்களில் விளையாடியுள்ளோம். அதனால், இலங்கையின் மைதானங்களில் எங்களுக்கு கூடுதல் அனுபவமுண்டு. எனவே, எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்’ எனத் தெரிவித்துள்ளார். 

Sun, 10 Sep 202301:20 AM IST

நாடு திரும்பிய சஞ்சு சாம்சன்

IND vs PAK Asia Cup 2023 live: கே.எல்.ராகுல் இல்லாததால், மாற்றுவிக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ராகுல் அணிக்கு திரும்பிவிட்டார். இதனால், சஞ்சு சாம்சனின் பணி ராகுலிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சஞ்சு சாம்சன் வீடு திரும்பினார். 

Sun, 10 Sep 202301:16 AM IST

இறுதிப்போட்டிக்குள் நுழையும் நடைமுறை என்ன?

IND vs PAK Asia Cup 2023 live: 6 அணிகள் பங்கேற்ற ஆசியக்கோப்பை போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் சூப்பர் 4-க்குத் தகுதிபெற்றுவிட்டன. இதில் ஒவ்வொரு அணியும் பிற அணிகளுடன் ஒருமுறையாவது மோதவேண்டும். இதன் இறுதியில் வெற்றி மற்றும் புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், இறுதிப்போட்டியில் விளையாடும்.

Sun, 10 Sep 202301:11 AM IST

இதற்கு முன் யார் அதிக முறை ஜெயித்தது?

IND vs PAK Asia Cup 2023 live: இந்திய - பாகிஸ்தான் அணிகள் இதுவரை, ஆசியக்கோப்பை போட்டிகளில் 14 முறை மோதியுள்ளன. அதில் 7-ல் இந்தியாவும், 5 போட்டிகளில் பாகிஸ்தானும் வென்று உள்ளன. இரண்டுபோட்டிகளுக்கு முடிவுகள் இல்லை.

Sun, 10 Sep 202312:59 AM IST

மழை பெய்தால் மேட்சில் என்ன நடக்கும்?

IND vs PAK Asia Cup 2023 live: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் இன்றைய கிரிக்கெட் போட்டியில், ஒருவேளை மழை பெய்தால் போட்டி நாளை(செப்டம்பர் 11) தள்ளிவைக்கப்படும். இன்றைய போட்டியைக்காண, டிக்கெட் எடுத்த ரசிகர்கள் திரும்பவும் டிக்கெட் எடுக்காமல்,  கொழும்பின் பிரேமதாஸா ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியைக் கண்டுகளிக்கலாம்.

Sun, 10 Sep 202312:56 AM IST

90 விழுக்காடு மழைபெய்ய வாய்ப்பு

IND vs PAK Asia Cup 2023 live: இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் மோதும் இன்றைய கிரிக்கெட் போட்டியில், கொழும்பு நகரில் 90 விழுக்காடு மழைபெய்ய வாய்ப்புள்ளது என வானிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

Sat, 09 Sep 202303:39 PM IST

எத்தனை மணிக்கு போட்டி தொடங்கும்?

IND vs PAK Asia Cup 2023 live: சரியாக மதியம் 3 மணிக்கு இந்திய நேரப்படி போட்டி தொடங்கும். 

Sat, 09 Sep 202303:39 PM IST

எங்கு போட்டி நடைபெறும்?

IND vs PAK Asia Cup 2023 live: இலங்கை கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று போட்டி சரியாக 3 மணிக்கு நடக்கிறது. 

Sat, 09 Sep 202303:39 PM IST

இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்

IND vs PAK Asia Cup 2023 live: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்று இன்று நடக்கிறது.