தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  India Vs Pakistan Asia Cup 2023: மைதானத்தில் தொழுகை நடத்திய பாக்., அணியினர்!

India vs Pakistan Asia Cup 2023: மைதானத்தில் தொழுகை நடத்திய பாக்., அணியினர்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Sep 02, 2023 11:04 AM IST

Pakistan Team: பாகிஸ்தான் வீரர்களின் தொழுகையின் போது, அவர்களுக்கு தொந்தரவு செய்யாத வகையில் மைதானத்தில் இருந்த மற்றவர்கள் அமைதி காத்தனர்.

இலங்கை மைதானத்தில் பயிற்சியின் போது தொழுகையில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள்
இலங்கை மைதானத்தில் பயிற்சியின் போது தொழுகையில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

நேற்றிலிருந்தே இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இன்று போட்டிக்கான இறுதிகட்ட பயிற்சியில் இரு அணி வீரர்களும் ஈடுபட்டனர். அப்போது, பாகிஸ்தான் அணி வீரர்கள், தொழுகை நேரத்தில் மைதானத்தில் இருந்த படி தொழுகை செய்தனர். 

அணியின் வீரர்கள் மட்டுமின்றி, நிர்வாகிகளும் அந்த தொழுகையில் பங்கேற்றனர். பாகிஸ்தான் வீரர்களின் தொழுகையின் போது, அவர்களுக்கு தொந்தரவு செய்யாத வகையில் மைதானத்தில் இருந்த மற்றவர்கள் அமைதி காத்தனர். 

தங்களின் தொழுகை முடிந்த பின், வழக்கமான பணிகளை கவனித்த பாகிஸ்தான் வீரர்கள், தீவிர பயற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணிக்கு எதிராக விளையாடும் 11 வீரர்கள் பெயரை நேற்றை அறிவித்த பாகிஸ்தான் அணி, இன்று அந்த 11 பேருக்கு தீவிர பயற்சி அளித்து வந்தது. 

இந்திய அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி எடுத்து வந்தனர். குறிப்பாக வீராட் கோலி, ஆக்ரோஷமான பயிற்சியில் ஈடுபட்டார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point