தமிழ் செய்திகள்  /  Cricket  /  Hardhik Pandya And Rohit Sharma Reunites With Hug In Mumbai Indians Practice Session

Rohit and Pandya: கண்கள் பணிந்தன! இதயங்கள் இணைந்தன - வலைப்பயிற்சியில் ரோகித் - பாண்ட்யா கட்டிப்படி வைத்தியம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 21, 2024 04:00 AM IST

மும்பை இந்தியன்ஸ் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை அறிவித்த பிறகு ரோகித் ஷர்மாவுடன் அவர் பேசமலேயே இருந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அணியின் வலைப்பயிற்சியின் போது இருவரும் கட்டிபித்து அன்பை வெளிப்படுத்திய எமோஷனல் தருணம் அரங்கேறியுள்ளது.

வலைப்பயிற்சியின் போது கட்டியணைத்து கொண்ட ஹர்திக் பாண்ட்யா - ரோகித் ஷர்மா
வலைப்பயிற்சியின் போது கட்டியணைத்து கொண்ட ஹர்திக் பாண்ட்யா - ரோகித் ஷர்மா

ட்ரெண்டிங் செய்திகள்

ஐபிஎல் 2024 சீசனில் புதிய கேப்டன்

மும்பை இந்தியன்ஸ் கடைசியாக 2020 சீசனில் கோப்பை வென்றது. அதன் பிறகு மூன்று சீசன்களாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதில் 2021, 2022 சீசனில் ப்ளேஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை.

இந்த சூழ்நிலையில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மும்பை அணிக்கு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வந்த அவர் டிரேடிங் முறையில் மும்பை அணியினரால் வாங்கப்பட்டார்.

அத்துடன் கடந்த டிசம்பரில் நடந்த மினி ஏலத்திலும் சில புதிய வீரர்கள் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். மினி ஏலம் முடிந்த பிறகு மும்பை இந்தியன்ஸ் புதிய கேப்டன் குறித்து அணி நிர்வாகத்தால் அதிகாராப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அப்போது அணியின் கேப்டனாக 2014 சீசன் முதல் கேப்டனாக இருந்து வரும் ரோகித் ஷர்மா, ஓபனிங் பேட்ஸ்மேனாக அணியில் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டது.

ரோகித் - ஹர்திக் பாண்ட்யா இடையே பேச்சு வார்த்தை இல்லை?

இந்த கேப்டன் மாற்றம் குறித்த அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ரோகித் ஷர்மா - ஹர்திக் பாண்ட்யா இடையே பேச்சு வார்த்தை இல்லை என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை 50 ஓவர் தொடரின்போது காலில் காயமடைந்த பாண்ட்யா, தொடர்ந்து ஐந்து மாதங்களுக்கும் மேலாக சர்வதேச போட்டிகள் எதுவும் விளையாடவில்லை.

தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணமாகி, முழு பிட்னஸ் ஆகியிருக்கும் பாண்ட்யா கடந்த சில நாள்களுக்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார்.

இதன் பின்னர் தீவிர வலைப்பயிற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார். தற்போது இந்திய அணி கேப்டன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்திருக்கும் நிலையில் புதிய கேப்டன் பாண்ட்யாவை சந்தித்து கட்டியனைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டார்.

இதன்மூலம் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்ததாக வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவர்களின் இந்த சந்திப்பு எமோஷனல் மிக்க தருணமாக அமைந்திருந்தது.

இவர்களின் சந்திப்பு விடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

 

ரோகித் கேப்டன்சியில் தொடங்கிய ஹர்திக் பாண்ட்யா

இளம் வீரரான ஹர்திக் பாண்ட்யா தனது ஐபிஎல் கேரியரை மும்பை இந்தியன்ஸ் அணியில் 2015 சீசனில் ரோகித் ஷர்மா கேப்டன்சியில் தான் தொடங்கினார். இந்த சீசனில் தான் முதல் முறையாக ரோகித் ஷர்மா ஐபிஎல் கோப்பை வென்றார்.

அத்துடன் அவர் வென்று நான்கு சீசன்களிலும் ஹர்திக் பாண்ட்யா, மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய ஆல்ரவுண்டராக இருந்து வந்தார்.

2022 சீசனில் நடந்த மெகா ஏலத்தின் போது விடுவிக்கப்பட்ட பாண்ட்யாவை, அப்போது புதிய அணியாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் ஏலம் எடுத்தது. பின்னர் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட பாண்ட்யா முதல் சீசனிலேயே அணியை சாம்பியன் ஆக்கினார்.

இதன் பின்னர் கடந்த 2023 சீசனில் குஜராத் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார். இப்போது ஹர்திக் கேப்டன்சியில் முதல் முறையாக ரோகித் விளையாட இருக்கிறார்.

 

IPL_Entry_Point