Hardik Pandya: ரோஹித்துக்கு டாடா! மும்பை இந்தியன்ஸ் புதிய கேப்டனான ஹர்திக் பாண்ட்யா
பத்து ஆண்டுகளாக ரோஹித் ஷர்மா கேப்டனாக இருந்த நிலையில், தற்போது அவர் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 10 ஆண்டுகள் கேப்டனாக இருந்து வந்த ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டுள்ளார். ரோஹித் ஷர்மா கேப்டனாக இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளார்.
புதிதாக கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ஹர்திக் பாண்ட்யா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2017 முதல் 2021 வரை விளையாடினார். அதன் பின்னர் அவர் கழட்டவிடப்பட்ட நிலையில் புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டதுடன், அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடிய முதல் சீசனிலேயே கோப்பை வென்று சாதனை படைத்தது. இதற்கு அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யாவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து ஐபிஎல் 2024 சீசனை முன்னிட்டு, வீரர்களை ட்ரேட் செய்யும் வேலைகளில் ஒவ்வொரு அணியும் ஈடுபட்டன. அதில் குஜராத் அணியில் இடம்பிடித்திருந்த ஹர்திக் பாண்ட்யாவை, மும்பை இந்தியன்ஸ் ட்ரேடிங் செய்து வாங்கியது.
இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை தந்தது. தற்போது அடுத்த சர்ப்ரைஸ் ஆக அவரை கேப்டனாகவும் ஆக்கியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9