தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Sachithra Senanayake: இலங்கை முன்னாள் வீரர் வெளிநாடு செல்ல தடை! ஏன் தெரியுமா?

Sachithra Senanayake: இலங்கை முன்னாள் வீரர் வெளிநாடு செல்ல தடை! ஏன் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 16, 2023 11:59 AM IST

சூதாட்ட சர்ச்சையில் சிக்கியிருக்கும் இலங்கை அணி முன்னாள் வீரர் சசித்ர சேனநாயகே வெளிநாடு செல்ல தடை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் வீரர்
இலங்கை அணியின் முன்னாள் வீரர்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து 2020ஆம் ஆண்டில் லங்கா பிரீமியர் லீக் தொடரில் தொலைப்பேசி மூலம் மேட்ச் பிக்ஸிங் ஈடுபட்டதாக சேனநாயகே மீது புகார் எழுந்தது. அத்துடன் மேலும் இரண்டு வீரர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்து அவர் முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டு சேனநாயகே 3 மாதம் வெளிநாடு செல்ல தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு குடியேற்றம் மற்றும் குடியமர்வு பிரிவு பொதுக் கட்டுப்பாட்டாளர் துறைக்கு அனுப்பபட்டது. இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவு கிடைத்துள்ளதாக இலங்கை அட்டர்னி ஜெனரல் பிரிவு தெரிவித்துள்ளது. சேனநாயகே மீது சிறப்பு விசாரணைக்குழு அறிக்கையின் பேரில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு அட்டர்னி ஜெனரல் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point