தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Cwc 2023: உலகக் கோப்பை அணியில் அஸ்வினுக்கு இடம்! அப்போ 3டி வீரர் யார்? ட்ரோல் செய்ப்படும் முன்னாள் தேர்வுகுழு தலைவர் அணி

CWC 2023: உலகக் கோப்பை அணியில் அஸ்வினுக்கு இடம்! அப்போ 3டி வீரர் யார்? ட்ரோல் செய்ப்படும் முன்னாள் தேர்வுகுழு தலைவர் அணி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 27, 2023 10:56 AM IST

உலகக் கோப்பை தொடருக்கான எம்எஸ்கே பிரசாத் தேர்வு செய்திருக்கும் அணியில் ரவிசந்திரன் அஸ்வின் பிரதான ஸ்பின்னராக இடம்பிடித்துள்ளார். அதேசமயம் அணியின் 3டி வீரர் யார் என்பது குறித்து பலரும் கேள்வியை எழுப்பி ட்ரோல் செய்து வருகின்றனர்.

உலகக் கோப்பை தொடருக்கான தனது அணியில் அஸ்வினை தேர்வு செய்த எம்எஸ்கே பிரசாத்
உலகக் கோப்பை தொடருக்கான தனது அணியில் அஸ்வினை தேர்வு செய்த எம்எஸ்கே பிரசாத் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த அணிகள் பெரும்பாலும் தற்போது இந்திய அணியில் விளையாடி வரும் வீரர்களில் ஒரு சில மாற்றங்களை மட்டும் மேற்கொண்டதாக உள்ளது. இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தேர்வு செய்திருக்கும் அணியில் சர்ப்ரைசாக வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.

அத்துடன் ரசிகர்களின் விருப்ப தேர்வாகவும், நல்ல பார்மில் இருந்து வரும் பேட்ஸ்மேனான சஞ்ச சாம்சனுக்கு இடமில்லை. எம்எஸ்கே பிரசாத் தேர்வு செய்திருக்கும் அணியில் தற்போது ஆசிய கோப்பையில் இடம்பெற்றிருக்கும் அணியிலிருந்து முக்கிய வீரர்கள் அனைவரும் இடம்பிடித்துள்ளனர்.

எம்எஸ்கே பிரசாத் அணியின் விவரம் பின்வருமாறு: ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வில், யஸ்வேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், இஷான் கிஷன்

ஆசிய கோப்பை தொடருக்கான அணி அறிவிப்பின் போது சஹால் சேர்க்கப்படாதது குறித்த கேள்விக்கு, "அணி தேர்வில் ஆப் ஸ்பின்னர்கள் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது பெயரும் பரிசீலனை செய்யப்பட்டது.

அணியில் யாருக்கும் கதவு மூடப்பட்டுவிடவில்லை. யார் வேண்டுமென்றாலும் எப்போதும் அணிக்கு வரலாம். உலகக் கோப்பை போட்டிக்கு யுஸ்வேந்திர சாஹல் தேவைப்பட்டால், அவரை எப்படி சேர்த்து கொள்வது என்பதை பார்ப்போம், அஸ்வின், வாஷிங்டன் விஷயத்திலும் இது பொருந்தும்." என இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் அஸ்வினை பிரதான ஸ்பின்னராக உலகக் கோப்பை அணியில் சேர்த்துள்ளார் எம்எஸ்கே பிரசாத். இது ஒரு புறம் இருக்க அணியில் 3டி வீரர் யார் என பிரசாத் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் தேர்வுக்குழு தலைவராக இருந்தவர் எம்எஸ்கே பிரசாத். அப்போது அணியின் நான்காவது பேட்ஸ்மேன் லிஸ்டில் அம்பத்தி ராயுடு சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் டுவிஸ்டார் தமிழ்நாட்டை சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கர் சேர்க்கப்பட்டார். அவர் அணியில் சேர்க்கப்பட்டதற்கு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதும், 3டி (பேட்டிங், பவுலிங், பீல்டிங்) வீரராகவும் அவர் இருப்பதாக காரணம் கூறினார் எம்எஸ்கே பிரசாத்.

இதையடுத்து அவர் தற்போது தேர்வு செய்திருக்கும் அணியில் அஸ்வின் தேர்வு சர்ப்ரைசாக இருப்பதுடன், 3டி வீரர் யார் என்பது குறித்து குழப்பமாக இருப்பதாக ரசிகர்கள் கேள்வி எழுப்பி அங்கலாய்த்து வருகின்றனர்.

இந்திய டெஸ்ட் அணியில் பிரதான பவுலராக இருந்து வரும் அஸ்வின், கடைசியாக கடந்த 2022இல் தென்ஆப்பகிக்காவுக்கு எதிரான ஒரு போட்டியில் விளையாடியுள்ளார். இதன் பின்னர் 18 மாதங்களுக்கு மேலாக அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடவில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point