தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Kohli:‘’அவர் சொன்னதை சொல்லமுடியாது; அந்த அறிவுரை இனிப்பானது'' - விராட் கோலியின் அட்வைஸ் பற்றி பேசிய பாக்.கேப்டன் பாபர்

Kohli:‘’அவர் சொன்னதை சொல்லமுடியாது; அந்த அறிவுரை இனிப்பானது'' - விராட் கோலியின் அட்வைஸ் பற்றி பேசிய பாக்.கேப்டன் பாபர்

Marimuthu M HT Tamil
Apr 08, 2024 08:39 PM IST

Kohli: விராட் கோலி, தனது நுண்ணறிவை செழுமைப்படுத்த உதவினார் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார்.

களத்திற்கு வெளியேயும் நல்ல நட்புறவைப் பராமரிக்கும் பாபர் அசாம்(இடது) மற்றும் விராட் கோலி
களத்திற்கு வெளியேயும் நல்ல நட்புறவைப் பராமரிக்கும் பாபர் அசாம்(இடது) மற்றும் விராட் கோலி (ICC)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கிரிக்கெட் போட்டியில் சரியான உறவு இல்லாதபோதும், 2022ஆம் ஆண்டில், இந்திய நட்சத்திர வீரர் கோலியும் பாகிஸ்தான் கேப்டனுமான பாபரும் கடந்த காலங்களில் ஒருவருக்கொருவர் அதிகம் மனம்விட்டுப் பேசியுள்ளனர்.

2023ஆம் ஆண்டில் ஒருநாள் உலகக் கோப்பைக்காக பாபர் இந்தியா சென்றபோது, அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த, குழு போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்திய பின்னர், விராட் கோலியுடன் பாபம் அசாம் உரையாடினார். கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்த பிறகு, இரண்டு நட்சத்திர பேட்ஸ்மேன்கள் அரட்டையடிப்பதை பலர் காண முடிந்தது. மேலும், விராட் கோலியும் பாபருக்கு, தன் கையெழுத்திட்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை பரிசளித்தார்.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அசாம், கோலியுடன் நடத்திய அரட்டையை பாபர் அசாம் வெளியில் இதுவரை சொல்லவில்லை. ஆனால், முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியின் நுண்ணறிவு தனக்கு உதவியாக இருந்ததால் அது பயனுள்ளதாக இருந்தது என்று தற்போது வெளிப்படையாகக் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம், ஜால்மி டிவிக்கு அளித்த பேட்டியில், "விராட் கோலியும் நானும் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடும்போதெல்லாம், நான் எப்போதும் அவருடன் பேச முயற்சிப்பேன். நான் எப்போதும் அவரிடம் சில கேள்விகளைக் கேட்பேன். அவர் எனக்கு வேண்டிய பதில்களைத் தருவார். அவர் மட்டுமல்ல, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும்போதுகூட ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேன் வில்லியம்சனுடனும் நான் நிறைய பேசுவேன். நான் விராட் கோலியுடன் ஒரு நல்ல அரட்டையடித்தேன். எங்களுக்கு பேச நிறைய விஷயங்கள் இருந்தன. அதை நான் இங்கே பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால், அது எனக்கு கிரிக்கெட்டில் நல்ல பலனை தந்தது" என்று பாபர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். 

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை, பாபர் அசாம் கேப்டனாக இருந்து வழிநடத்தினார். அப்போது பாகிஸ்தான் அணி, ரசிகர்களிடமிருந்து நல்ல ஆதரவைப் பெற்றது.

அதையும் நினைவு கூர்ந்து பேசிய பாபர்,"அது ஒரு வித்தியாசமான அதிர்வு. இந்தியாவில் நாங்கள் விளையாடும்போது, அரங்கம் முழுவதும் நீல நிறத்தில் காட்சியளித்தது. இந்தியாவில் விளையாடுவதால் இந்தியர்களுக்கு ஆதரவு அதிகம் இருந்தது என நினைத்தேன். ஆனால், எல்லா இடங்களிலும், எங்களுக்கு விதிவிலக்கான ஆதரவும் கிடைத்தது" என்று பாபர் மேலும் கூறினார்.

ஐ.சி.சி உலகக்கோப்பைப் போட்டியின்போது, பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவில் கிடைத்த பெரிய ஆதரவை தான் எதிர்பார்க்கவில்லை என்றும், அது ஒரு வித்தியாசமான அனுபவம் என்றும்; 29 வயது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அதனை ஒப்புக்கொண்டார்.

மேலும்,"இந்தியாவிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை. எனது முதல் இந்தியப் பயணத்தின் கிடைத்த மறக்கமுடியாத அனுபவம் அதுவாகும். நாடுகளைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்திய மக்கள் எங்களுக்கு மிகவும் அன்பைக் கொடுத்தனர். அவர்கள் நாங்கள் ஆடிய கிரிக்கெட்டை வெகுவாகப் பாராட்டினர்"என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறினார்.

IPL_Entry_Point