ICC ODI World Cup Throwback: 28 வருட கனவு, சிக்ஸருடன் தோனி பினிஷ்! இந்தியா இரண்டாவது உலகக் கோப்பை வென்று 13 ஆண்டு நிறைவு
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Icc Odi World Cup Throwback: 28 வருட கனவு, சிக்ஸருடன் தோனி பினிஷ்! இந்தியா இரண்டாவது உலகக் கோப்பை வென்று 13 ஆண்டு நிறைவு

ICC ODI World Cup Throwback: 28 வருட கனவு, சிக்ஸருடன் தோனி பினிஷ்! இந்தியா இரண்டாவது உலகக் கோப்பை வென்று 13 ஆண்டு நிறைவு

Apr 02, 2024 07:50 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 02, 2024 07:50 PM , IST

  • 2011, ஏப்ரல் 2ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருந்து வருகிறது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா இரண்டாவது முறையாக உலகக் கோப்பை வென்றது. எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை வென்று இன்றுடன் 13 ஆண்டுகள் ஆகிறது

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாளாக தோனி கேப்டன்சியில் இந்திய இரண்டாவது முறையாக உலகக் கோப்பை வென்ற ஏப்ரல் 2ஆம் தேதி உள்ளது. இந்திய கிரிக்கெட்டில் சிறந்த தருணமாக இருந்து வரும் அந்த நாள் பற்றி பிளாஷ்பேக்கை பார்க்கலாம்

(1 / 11)

உலகக் கோப்பை 2011 தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் வங்கதேசம் அணியை பிப்ரவரி 19, 2011இல் எதிர்கொண்டது. முதல் போட்டியே வெற்றியுடன் தொடங்கியது. வீரேந்தர் சேவாக் ஆட்ட நாயகன் விருதை வென்றார்

(2 / 11)

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பேட் செய்து சச்சின் டென்டுல்கர் சதமடித்தார். இந்த போட்டி சமனில் முடிவடைந்தது  

(3 / 11)

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. யுவராஜ் சிங் அரைசதமடித்ததுடன், 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை வென்றார்

(4 / 11)

நெத்லாந்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, 36.3 ஓவரில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

(5 / 11)

தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான போட்டியில் உலகக் கோப்பை 2011 தொடரில் இரண்டாவது சதமடித்தார் சச்சின் டென்டுல்கர்.  பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. உலகக் கோப்பை 2011 தொடரில் இந்தியா தோல்யுற்ற ஒரே போட்டி இதுதான்

(6 / 11)

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் சதமடித்தார். இந்த போட்டியில் இந்தியா 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 

(7 / 11)

ஹாட்ரிக் உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணியின் வெற்றி பயணத்துக்கும், ஆதிக்கத்துக்கும் இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

(8 / 11)

அரையிறுதி போட்டியில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மோதலாக இருந்து வரும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது 

(9 / 11)

"தோனி தனது ஸ்டைலில் பினிஷ் செய்தார். ரசிகர்கள் கூட்டத்தை நோக்கி அற்புதமான ஷாட். 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா உலகக் கோப்பை தூக்கியது" என்று இறுதிப்போட்டியில் சிக்ஸர் அடித்து இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்த தோனி அற்புத ஷாட்டுக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரரும், தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்த்ரி. இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா உலகக் கோப்பை வென்றது

(10 / 11)

மும்பையில் இருக்கும் தாஜ் பேலஸ் ஓட்டலில் இந்திய கிரிக்கெட் அணி அப்போதையை கேப்டனான எம்எஸ் தோனி உலகக் கோப்பையுடன் போட்டோ ஷுட் எடுத்துக்கொண்டார். அவர் இந்தியாவின் நுழைவுவாயிலான கேட்வே ஆஃப் இந்தியா அருகே நின்றவாறு தோனி போஸ் கொடுத்தார்

(11 / 11)

மற்ற கேலரிக்கள்