தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Rr Vs Rcb Result: கோலிக்கு பதிலடி தந்த பட்லர்! ஆர்சிபியின் உப்பு சப்பில்லாத ஆட்டம் - ஊதி தள்ளிய ராஜஸ்தான் ராயல்ஸ்

RR vs RCB Result: கோலிக்கு பதிலடி தந்த பட்லர்! ஆர்சிபியின் உப்பு சப்பில்லாத ஆட்டம் - ஊதி தள்ளிய ராஜஸ்தான் ராயல்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 06, 2024 11:30 PM IST

ஆர்சிபி அணிக்கு ஓபனர் விராட் கோலி, கேப்டன் டூ பிளெசிஸ் இணைந்து நல்ல தொடக்கத்தை அளித்தது போன்று, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஓபனர் ஜோஸ் பட்லர், கேப்டன் சஞ்சு சாம்சன் இணைந்து 148 ரன்கள் சேர்த்து அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளனர்.

பந்தை லெக் சைடு திசையில் அடிக்கும் ஜோஸ் பட்லர்
பந்தை லெக் சைடு திசையில் அடிக்கும் ஜோஸ் பட்லர் (ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டியிஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆர்சிபி அணியில் அனுாஜ் ராவத்துக்கு பதிலாக செளரப் செளகான் சேர்க்கப்பட்டார்.

கோலியின் சதத்தால் ஆர்சிபி ரன்குவிப்பு

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. இந்த சீசனின் முதல் சதத்தை அடித்த விராட் கோலி 113 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். இவருக்கு அடுத்தபடியாக கேப்டன் டூ பிளெசிஸ் 44 ரன்கள் எடுத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்களில் ஸ்பின்னர் சஹால் 2 விக்கெட்டுகளை எடுத்தார். நந்த்ரே பர்கர் ஒரு விக்கெட் எடுத்தார். தொடர்ச்சியாக மூன்றாவது போட்டியில் அஸ்வின் விக்கெட் வீழ்த்தவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங்

ஆர்சிபியின் 184 ரன்கள் இலக்கை சேஸ் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது அந்த அணியின் நான்காவது வெற்றியாக அமைந்துள்ளது.

பேட்டிங்கில் பார்ம் இல்லாமல் தவித்து வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடி ஓபனர் ஜோஸ் பட்லர் சதமடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இவருக்கு அடுத்தபடியாக கேப்டன் சஞ்சு சாம்சன் 69 ரன்கள் அடித்தார்.

ஆர்சிபி பவுலர்களில் ரீஸ் டாப்லே 2, யாஷ் தயாள் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இம்பேக் வீரராக களமிறக்கப்பட்ட ஹிமான்ஷு ஷர்மா 2 ஓவரில் 29 ரன்களை வாரி வழங்கினார்.

பட்லர் - சாம்சன் பார்டனர்ஷிப்

ஆட்டத்தின் முதல் ஓவர் இரண்டாவது பந்திலேயே ஓபனிங் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி வெளியேறினார். இவரை தொடர்ந்து வந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், மற்றொரு ஓபனர் பட்லருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஆர்சிபி பவுலர்கள் ஊதி தள்ளிய இவர்கள் ரன்குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் இணைந்து 148 ரன்கள் சேர்த்தனர்.

அரைசதத்தை பூர்த்தி செய்த சாம்சன் 69 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் தனது இன்னிங்கிஸில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களை அடித்தார்.

ஆர்பிக்கு நான்காவது தோல்வி

விளையாடிய 5 போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்திருக்கும் ஆர்சிபி அணி தொடர்ந்து 8வது இடத்தில் இருந்து வருகிறது. நான்கு வெற்றிகளை பெற்றிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

IPL_Entry_Point