Bumrah Meets Dhoni: தோல்வி இரண்டாவது பட்சம்; தல தோனிதான் எங்களுக்கு முதல்பட்சம் - ரசிகராக பும்ரா செய்த செயல்!-bumrah enters csk dressing room with special request for dhoni after mis defeat - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Bumrah Meets Dhoni: தோல்வி இரண்டாவது பட்சம்; தல தோனிதான் எங்களுக்கு முதல்பட்சம் - ரசிகராக பும்ரா செய்த செயல்!

Bumrah Meets Dhoni: தோல்வி இரண்டாவது பட்சம்; தல தோனிதான் எங்களுக்கு முதல்பட்சம் - ரசிகராக பும்ரா செய்த செயல்!

Marimuthu M HT Tamil
Apr 15, 2024 02:51 PM IST

Bumrah Meets Dhoni: மும்பை இந்தியன்ஸ் அணி, சி.எஸ்கேவுக்கு எதிராக விளையாடி தோல்வியுற்றாலும் அந்த அணி வீரர் பும்ரா, தோனியை தனியாக சந்தித்து படம் எடுத்துக் கொண்டார்.

போட்டிக்குப் பிறகு எம்.எஸ். தோனி (இடது) மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருக்கும் காட்சி!
போட்டிக்குப் பிறகு எம்.எஸ். தோனி (இடது) மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருக்கும் காட்சி! (Screengrab)

 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே கொடுத்த பும்ரா, எல்லா இடங்களிலும் ஆக்ரோஷமாக இருந்தார்.  இந்த சந்திப்பு தொடர்பாக பும்ரா பின்னர் தனது இன்ஸ்டாகிராமில் எழுதியிருப்பதாவது, "இவ்வளவு காலத்திற்குப் பிறகு மஹேந்திர சிங் தோனி அண்ணனை சந்தித்தேன். அவருடன் புகைப்படம் எடுத்தது என் வாழ்வின் நல்ல தருணம்’’என எழுதியுள்ளார். 

ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில்தான் சிஎஸ்கே ஜாம்பவான் தோனி, அவுட்டாகி வெளியேறியதால், துரதிர்ஷ்டவசமாக தோனிக்கு பந்துவீசும் வாய்ப்பு பும்ராவுக்கு கிடைக்கவில்லை. 

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, தோனி தலைமையிலான இந்திய அணியின்கீழ் தான், பும்ரா இந்தியாவுக்காக தனது முதல் சர்வதேச போட்டியை விளையாடினார். 2016 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, இந்தியாவின் வெற்றி பெற வைக்க, தனது முதல் படிகளை எடுத்து வைத்தார். ஒட்டுமொத்தமாக, பும்ரா 15 ஐபிஎல் போட்டிகளில் மூன்று முறை தோனியை நேரடியாக ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

ஐபிஎல் 2024, அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளர்களின் பட்டியலில் பும்ரா வேகமாக முன்னேறி வருகிறார். 10 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா, தற்போது தனது இந்திய அணி வீரர் யுஸ்வேந்திர சாஹலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார். 

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் பும்ரா மட்டுமே. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இரண்டு ஆட்டங்களில் விக்கெட் வீழ்த்தப்படுவதற்கு முன்பு, குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் பும்ரா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 14 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 

ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடியபோது கூட, பும்ரா 36 ரன்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2024-ல் பும்ரா மேஜிக் ஒர்க் அவுட் ஆகி, மும்பை இந்தியன்ஸ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அதில் அவர் 22 ரன்களைக் கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உடன் விளையாடுகையில் 21 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

ஆச்சரியம் என்னவென்றால், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக இரண்டு ஆட்டங்களைத் தவிர பும்ரா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பந்துவீச்சைத் தொடங்கவில்லை. ஹர்திக் பாண்டியா, பந்து வீசாத போதெல்லாம் மட்டுமே பும்ரா பந்துவீசினார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிய நேற்றைய ஆட்டத்தில், பவர்பிளேயில் மும்பை இந்தியன்ஸ் அணி அடித்து நொறுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆட்டத்திலும், பும்ரா பந்துவீசுகையில் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர். 

 டெல்லி அணிக்கு எதிராக 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்தது முந்தைய தோனியின் பொன்னான பழைய நாட்களை நினைவுபடுத்தியது என்றால், நேற்றிரவு நான்கு பந்துகளில் 20 ரன்கள் எடுத்தது தோனியை ஸ்பெஷல் என்று அழைக்க வைக்கும். 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தோல்வியை தழுவியது.

இருந்தாலும், ஒரு ரசிகராக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு சென்ற பும்ரா, தோனியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.