MI vs RCB Live Score: பும்ராவின் 5 விக்கெட்டும், தினேஷ் கார்த்திக் 4 சிக்ஸர்களும்! ஆராவரத்தில் மூழ்கிய வான்கடே மைதானம்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Mi Vs Rcb Live Score: பும்ராவின் 5 விக்கெட்டும், தினேஷ் கார்த்திக் 4 சிக்ஸர்களும்! ஆராவரத்தில் மூழ்கிய வான்கடே மைதானம்

MI vs RCB Live Score: பும்ராவின் 5 விக்கெட்டும், தினேஷ் கார்த்திக் 4 சிக்ஸர்களும்! ஆராவரத்தில் மூழ்கிய வான்கடே மைதானம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 11, 2024 10:14 PM IST

பேட்டிங்கில் நல்ல பார்மில் இருந்து வரும் தினேஷ் கார்த்திக் அதிரடியான பினிஷிங்கை ஆர்சிபிக்கு கொடுத்தார். மிடில் ஓவர்களில் கேப்டன் டூ பிளெசிஸ், ராஜத் பட்டிதார் இணைந்து 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜஸ்ப்ரீத் பும்ரா (இடது), பந்தை பவுண்டரிக்கு விரட்டும் தினேஷ் கார்த்திக் (வலது)
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜஸ்ப்ரீத் பும்ரா (இடது), பந்தை பவுண்டரிக்கு விரட்டும் தினேஷ் கார்த்திக் (வலது)

மும்பை இந்தியன்ஸ் அணியில் பியூஷ் சாவ்லாவுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் கோபால் சேர்க்கப்பட்டுள்ளார். ஆர்சிபி அணியில் கேமரூன் க்ரீனுக்கு பதிலாக வில் ஜாக்ஸ் முதல் முறையாக ஐபிஎல் போட்டிகளில் களமிறங்குகிறார். அத்துடன் செளரவ் செளகான், மயங்க் டாகர் ஆகியோருக்கு பதிலாக மகிபால் லோரோர், விஜய்குமார் வைஷாக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மும்பை பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது.

ஆர்சிபி அணியின் கேப்டனும், ஓபனருமான டூ பிளெசிஸ் அதிகபட்சமாக 61 ரன்கள் அடித்தார். இவருக்கு அடுத்தபடியாக அதிரடியாக பேட் செய்த தினேஷ் கார்த்திக் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார். ராஜத் பட்டிதார் 50 ரன்கள் எடுத்தார். இவர்கள் மூன்று பேரை தவிர மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டானார்கள்

மும்பை இந்தியன்ஸ் பவுலர்களில் ஜஸ்ப்ரீத் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜெரால்ட் கோட்ஸி, ஆகாஷ் மத்வால், ஷ்ரேயாஸ் கேபால் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

கோலி ஏமாற்றம்

ஆர்பிசி அணியில் நல்ல பார்மில் இருந்து வரும் விராட் கோலி, மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் 3 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இவரை தொடர்ந்து பேட் செய்ய வந்த அறிமுக வீரரான வில் ஜாக்ஸ் 8 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதனால் 3.4 ஓவரில் 23 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி தடுமாறியது

டூ பிளெசிஸ் - ராஜத் பட்டிதார் பார்ட்னர்ஷிப்

இதைத்தொடர்ந்து அணியின் கேப்டனும் ஓபனிங் பேட்ஸ்மேனுமான டூ பிளெசிஸ், புதிய பேட்ஸ்மேனாக களமிறங்கிய ராஜத் பட்டிதார் ஆகியோர் விக்கெட் சரிவை தடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் இணைந்து கிடைக்கும் வாய்ப்புகளை பவுண்டரி, சிக்ஸர்களாக மாற்றினர்.

டூ பிளெசிஸ் இந்த சீசனின் முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து அதிரடியாக பேட் செய்து வந்த பட்டிதாரும் அரைசதமடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு இவர்கள் 82 ரன்கள் சேர்த்தனர்.

50 ரன்கள் அடித்த பட்டிதார் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 26 பந்துகளை மட்டும் எதிர்கொண்ட பட்டிதார் தனது இன்னிங்ஸில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளை அடித்தார்.

மேக்வெல் மூன்றாவது டக்

இந்த சீசன் இதுவரை தனது அதிரடி வேட்டையை வெளிக்காட்டாமல் சொதப்பி வரும் கிளென் மேக்ஸ்வெல் டக் அவுட்டனார். இந்த சீசனில் மூன்றாவது முறையாக அவர் டக் அவுட்டாகியுள்ளார். சிறப்பாக பேட் செய்து வந்து கேப்டன் டூ பிளெசிஸ் 61 ரன்களில் பும்ராவிடம் வீழ்ந்தார்.

தினேஷ் கார்த்திக் அதிரடி பினிஷ்

முக்கிய விக்கெட்டுகள் காலியாக களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக் தனது பாணியில் அதிரடியை கையில் எடுத்தார். மறு முனையில் மகிபால் லோம்ரோர் 0, இம்பேக்ட் வீரராக பேட் செய்ய வந்த செளரவ் செளகான் 9, விஜய்குமார் வைஷாக் 0 என அடுத்தடுத்தடுத்து அவுட்டானார்கள்.

ஆனால் தினேஷ் கார்த்திக் ஒற்றை ஆளாக பவுண்டரி, சிக்ஸர்களை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியை அடித்து மிரட்டிய அவர் அரைசதத்தையும் பூர்த்தி செய்தார்.

23 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்களை அடித்தார்.

பும்ரா 5 விக்கெட்

ஆர்சிபி பேட்டிங் வரிசை காலி செய்த பும்ரா கோலி, டூ பிளெசிஸ் உள்பட ஆர்சிபி முக்கிய விக்கெட்டுகளை தூக்கினார். 4 ஓவர்களில் வெறும் 21 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.