MI vs CSK Toss: பேபி மலிங்காவை மும்பைக்கு எதிராக களமிறக்கும் சிஎஸ்கே! வான்கடே மைதானத்தில் ஓங்கி ஒலிக்கும் தோனி குரல்-matheesha pathirana comes back mumbai indians opt to bowl against chennai super kings - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Mi Vs Csk Toss: பேபி மலிங்காவை மும்பைக்கு எதிராக களமிறக்கும் சிஎஸ்கே! வான்கடே மைதானத்தில் ஓங்கி ஒலிக்கும் தோனி குரல்

MI vs CSK Toss: பேபி மலிங்காவை மும்பைக்கு எதிராக களமிறக்கும் சிஎஸ்கே! வான்கடே மைதானத்தில் ஓங்கி ஒலிக்கும் தோனி குரல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 15, 2024 12:22 AM IST

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் மதிஷா பதிரனாஅணிக்கு திரும்பியுள்ளார். கடந்த போட்டியில் விளையாடிய வெற்றி கூட்டணியுடன் மும்பை களமிறங்குகிறது.

டாஸ் நிகழ்வில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா(இடது), சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (வலது)
டாஸ் நிகழ்வில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா(இடது), சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (வலது)

ஐபிஎல் தொடரின் எல்கிளாசிக்கோ என்று அழைக்கப்படும் இரு எதிரி அணிகளின் மோதலாக இந்த போட்டி அமைந்துள்ளது. அத்துடன் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் போட்டியாகவும் உள்ளது.

பாண்ட்யா பவுலிங் தேர்வு

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். மும்பை அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேஷ் தீக்‌ஷனாவுக்கு பதிலாக மதிஷா பதிரனா சேர்க்கப்பட்டுள்ளார். பேபி மலிங்கா என்று அழைக்கப்படும் இவர் இரண்டு போட்டிகளுக்கு பிறகு அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா மட்டுமே ஒரே ஸ்பின்னராக உள்ளார். 

பிட்ச் நிலவரம்

பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியான வான்கடே மைதானம், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் கைகொடுக்கும். அந்த வகையில் இந்த போட்டிக்கான ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களிடம் ரன் வேட்டை இருக்கும் என கணிக்கபு்பட்டுள்ளது. 

எனவே ரசிகர்களுக்கு ரசிகர்களுக்கு அடுத்த சில மணி நேரம் வானவேடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்த இரு அணிகளுக்கு இடையிலான கடைசி 5 போட்டிகளில் சிஎஸ்கே 4, மும்பை இந்தியன்ஸ் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. 

சொந்த மண்ணில் ஹாட்ரிக் வெற்றிக்கான முயற்சி

இந்த சீசனில் முதல் மூன்று போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் தோல்வியை தழுவியது. இதைத்தொடர்ந்து முதல் வெற்றியை உள்ளூர் மைதானமான வான்கடேவில் தான் வென்றது. தொடர்ச்சியாக அங்கு இரண்டு வெற்றிகளை பெற்றிருக்கும் மும்பை இந்தியன்ஸ் ஹாட்ரிக் வெற்றிக்கான முயற்சியில் களமிறங்குகிறது. 

இதுவரை மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ்

மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகள் இதுவரை 36 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி 20 போட்டிகளிலும், சிஎஸ்கே அணி 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சிஎஸ்கேவுக்கு எதிராக இதுவரை மும்பையின் அதிகபட்ச ஸ்கோர் 219 ஆகும், மேலும் மும்பைக்கு எதிராக சென்னையின் அதிகபட்ச ஸ்கோர் 218 ஆகும்

இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் ஷர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, டிம் டேவிட், முகமது நபி, ரோமரியோ ஷெப்பர்டு, ஷ்ரேயாஸ் கோபால், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸி, ஆகாஷ் மட்வால்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்கியா ரகானே, டேரில் மிட்செல், ஷிவம் டூபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி, ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.