தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Asia Cup Ind Vs Pak 2023: ‘உங்க பேட் செம்மயா இருக்குயா..’ பாக்., வீரர்கள் பேட்டை வாங்கி பார்த்த கோலி!

Asia cup IND vs PAK 2023: ‘உங்க பேட் செம்மயா இருக்குயா..’ பாக்., வீரர்கள் பேட்டை வாங்கி பார்த்த கோலி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Sep 02, 2023 11:18 AM IST

India vs Pakistan asia cup match 2023: பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் பேட்டுகளை வாங்கிப் பார்த்த விராட் கோலி, அதன் சிறப்புகள் குறித்து அவர்களிடமே கேட்டறிந்தார்.

இலங்கையில் மைதான பயிற்சியின் போது பாகிஸ்தான் வீரர்களின் பேட்டை வாங்கிப் பார்த்த விராட் கோலி
இலங்கையில் மைதான பயிற்சியின் போது பாகிஸ்தான் வீரர்களின் பேட்டை வாங்கிப் பார்த்த விராட் கோலி

ட்ரெண்டிங் செய்திகள்

இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணி வீரர்களும் அறிவிக்கப்பட உள்ளனர். இந்நிலையில்  போட்டி தொடங்கும் நிமிடத்திற்கு முன்பு வரை இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்றே தெரிகிறது. 

இன்று காலையிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, இந்திய அணி மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். 

சிலர், கலந்துரையாடினர். அவர்களின் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ் மேனான விராட் கோலி, ஒரு படி மேலே போய், பாகிஸ்தான் அணியினருடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். அவர்களின் உபகரணங்களைப் வாங்கிப் பார்த்து அது குறித்து சந்தேகங்களை கேட்டார். 

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் பேட்டுகளை வாங்கிப் பார்த்த விராட் கோலி, அதன் சிறப்புகள் குறித்து அவர்களிடமே கேட்டறிந்தார். மேலும், பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களிடமும் உரையாடினார். விராட் கோலியின் இந்த நட்பு உரையாடல், மைதானத்தில் இருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point