தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Asia Cup 2023: காயம், கொரோனா அச்சுறுத்தல்! நான்கு வீரர்களின் நிலைமையால் இலங்கை அணிக்கு சிக்கல்

Asia Cup 2023: காயம், கொரோனா அச்சுறுத்தல்! நான்கு வீரர்களின் நிலைமையால் இலங்கை அணிக்கு சிக்கல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 26, 2023 10:36 AM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், இரண்டு பவுலர்கள், இரண்டு பேட்ஸ்மேன்கள் என நான்கு முக்கிய வீரர்கள் அணியில் இடம்பிடிப்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது

இலங்கை கிரிக்கெட் அணி (கோப்புபடம்)
இலங்கை கிரிக்கெட் அணி (கோப்புபடம்)

ட்ரெண்டிங் செய்திகள்

இவர்கள் மூவரும் இலங்கை அணியின் முக்கிய வீரர்களாக உள்ளனர். மிஸ்ட்ரி ஸிபின்னரான ஹசரங்கா பவுலிங் ஆல்ரவுண்டராகவும், குசல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டா ஆகியோர் பேட்ஸ்மேன்களாகவும் உள்ளனர். உலகக் கோப்பை தகுதி சுற்று தொடரில் சிறப்பாக பவுலிங் செய்து ஹசரங்கா 7 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளார். இந்த தொடரில் ஹசரங்காவின் சராசரி 12.90ஆக இருந்தது.

அந்த வகையில் அணியின் மிகவும் முக்கியமான ஸ்பின்னராக இருந்து வரும் ஹசரங்காவுக்கு பயிற்சியின்போது தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆய்வு செய்த பின்னரே அவரது காயத்தின் தன்மை குறித்து தெரியவரும் என கூறப்படுகிறது. அத்துடன் காயம் காரணமாக அவர் ஆசிய கோப்பை தொடரில் குறைந்தது இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிகிறது.

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் குசால் பெராரே, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் குணமடைவதை பொறுத்து அவர்கள் அணியில் விளையாடுவது பற்றி முடிவு செய்யப்படும். ஏற்கனவே தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் சமீரா, ஆசிய கோப்பை தொடரை விளையாட மாட்டார் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு வீரர்களுக்கு காயம், இருவருக்கு கொரோனா தொற்று என நான்கு முக்கிய வீரர்கள் விளையாடுவது குறித்து கேள்வி எழுந்திருப்பது இலங்கை அணிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய கிரிக்கெட் கோப்பையில் பங்கேற்கும் அணிகளில் இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மட்டும் இன்னும் அறிவிக்கப்படாமலேயே உள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஆகஸ்ட் 31ஆம் தேதி பல்லேகலேவில் நடைபெறவுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9  

IPL_Entry_Point