Lord Venus: அஸ்தமனம் ஆகும் சுக்கிர பகவான்.. அந்தரத்தில் தொங்கப்போகும் வாழ்வு.. எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள்
Lord Venus:சுக்கிர பகவானின் அஸ்தமனத்தால் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள் குறித்துக் காண்போம்.

இது போன்ற போட்டோக்கள்
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
Apr 26, 2025 11:26 AMபண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!
Apr 26, 2025 06:30 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன் புதன் சேர்க்கை.. விடாமல் பணமழை கொட்டப் போகும் ராசிகள்
சுக்கிரன் அனைத்து ராசிகளிலும் நன்மைகளைத் தரக்கூடிய கிரகமாக கருதப்படுகிறது. சுக்கிரன் இன்பம், ஆடம்பரம் மற்றும் செழுமையின் கிரகமாகப் பார்க்கப்படுகிறது. சுக்கிர பகவான், மேஷ ராசியில் ஏப்ரல் 28ஆம் தேதி 2024அன்று காலை 7:27 மணிக்கு அஸ்தமிக்க உள்ளது.
சுக்கிர பகவான் அஸ்தமனமாகும்போது, சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களைக் காண்பார்கள். மேஷ ராசியில் சுக்கிர பகவான், எதிர்மறையான நிலையில் இருப்பதால் எந்த ராசிக்காரர்கள் வசதிகளை இழக்கப்போகிறார்கள் என்பதை அறிந்துகொள்வோம்.
ரிஷபம்: சுக்கிர பகவான் அஸ்தமனமாகும்போது, ரிஷப ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். நிதிப் பற்றாக்குறை உங்களுக்கு அதிகரிக்கலாம். உங்கள் குடும்பத்தின் தேவைகளை இந்த காலகட்டத்தில் பூர்த்தி செய்ய முடியாது. ரிஷப ராசியினரின் குடும்பத்தில் யாராவது சிகிச்சைக்காகப் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். உங்கள் வருமான ஆதாரம் குறைவாக மாறும்.
கடகம்: மேஷத்தில் சுக்கிர பகவான் அஸ்தமனம் ஆவதால், கடக ராசிக்காரர்களின் செலவுகள் நிறைய அதிகரிக்கும். குறைந்த வருமானம் மற்றும் அதிக செலவுகள் காரணமாக, நீங்கள் சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம். இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் இல்லாததால் கடன் வாங்க நேரிடும்.
துலாம்: மேஷ ராசியில் சுக்கிர பகவான் அஸ்தமனம் ஆவதால், துலாம் ராசிக்காரர்கள் நிதி விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் என்ன சம்பாதித்தாலும், உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வது கடினம். பணத்தை இழக்க நேரிடும்.
விருச்சிகம்: மேஷ ராசியில் சுக்கிர பகவான் அஸ்தமனம் ஆவதால், விருச்சிக ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் சேமிப்புகளை பண்ண முடியாது. உங்கள் செலவுகளைச் சமாளிக்க நீங்கள் யாரிடமாவது கடன் வாங்க வேண்டியிருக்கும். உங்கள் செலவுகள் அதிகரிக்கக் கூடும். உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. தொழில் செய்பவர்களுக்குப் போட்டியாளர்கள் அதிகரிப்பார்கள். பொறுமையின்மையால் குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே சிக்கல் அதிகரிக்கும்.
மீனம்: மேஷ ராசியில் சுக்கிர பகவான் அஸ்தமனம் ஆவதால், மீன ராசிக்காரர்களுக்கு, வருமானம் குறைவாக இருக்கும் மற்றும் உங்கள் செலவுகள் அதிகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வருமான ஆதாரத்தை அதிகரிக்க தங்களால் முடிந்தவரை முயற்சி செய்வார்கள். இந்த முயற்சிகளில் நீங்கள் குறைவான வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது. திடீர் பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்