தலைக்கு மேல் கத்தி.. சுக்கிரன் சூறையாட்டம்.. முரட்டு அடி வாங்கும் ராசிகள்.. உங்க ராசி என்ன?
Venus: சுக்கிரன் மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவான் ராசியான மீன ராசியில் நுழைந்தார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கியுள்ளது.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் முன்னேற்றவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றக்கூடியவர்கள் நவ கிரகங்கள். இவர்களுடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
May 14, 2025 01:38 PMபணம் மூட்டைகளோடு குபேரன் வருகிறார்.. கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எது உங்க ராசி சொல்லுங்க?
May 14, 2025 10:32 AMதொழில் வளர்ச்சி, பதவி உயர்வு.. தொட்டதெல்லாம் வெற்றி.. குருவின் நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரத்தால் யாருக்கு ஜாக்பாட்!
May 14, 2025 10:05 AMசனி வச்சு செய்யப்போகும் ராசிகள்.. பண மூட்டைகள் கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருந்தா ஜாலிதான்!
May 14, 2025 10:03 AMசனி பகவான் எந்த 3 ராசிகளுக்கு பணத்தை மழையாக பொழிவார் பாருங்க.. ஜாக்பாட் உங்களுக்கா பாருங்க!
May 14, 2025 09:59 AMபரணியில் பணமழை கொட்டும் சூரியன்.. அதிர்ஷ்ட கதவு திறக்கும் ராசிகள்.. பண யோகம் யாருக்கு?
May 14, 2025 06:30 AMகுரு பெயர்ச்சி: கொட்டிக் கொடுக்க வருகிறார் குரு.. பண யோகத்தில் அமரும் ராசிகள்.. அதே ராசிகள் தான்!
சுக்கிரன் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவான் ராசியான மீன ராசியில் நுழைந்தார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தை மிகவும் கவனமாக இருக்க வேண்டும் வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நெருக்கமான உறவினர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடத்தில் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம் ராசி
உங்கள் ராசியில் சுக்கிரன் ஆறாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சூழ்நிலைகளில் இருந்து அவமானங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. காரணம் இல்லாமல் உங்களை சிக்கல்கள் தேடி வரும். வீண் பலியை நீங்கள் சுமக்க வேண்டிய சூழ்நிலை அமையும். அதனால் நீங்கள் அனைத்து காரியங்களிலும் இருந்தும் நீங்கள் சற்று விலகி இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே கவனமாக இருங்கள் உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிக ராசி
உங்கள் ராசிகள் ஐந்தாவது வெற்றி சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் குடும்ப வாழ்க்கை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உறவினர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். ஏப்ரல் 24 ஆம் தேதி வரை உங்களுக்கு சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத செலவுகள் உங்களை வந்து சேரும். உறவினர்களால் உங்களுக்கு சிக்கல்கள் உண்டாகும். நண்பர்களிடத்தில் உங்களுக்கு சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
