தோஷம் பெற்ற துர்கா தேவி.. நிவர்த்தி செய்த சிவபெருமான்.. அருள்பாலிக்கும் கைலாசநாதர்.. தெரிந்து கொள்வோம் வாங்க!
Kailasanathar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் தஞ்சாவூர் மாவட்டம் அம்மங்குடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். இது அம்மன்குடி துர்கா தேவி திருக்கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. கைலாசநாதர் மூலவராக இருந்தாலும் துர்கா தேவியே பிரதான கடவுளாக வணங்கப்பட்டு வருகிறார்.
Kailasanathar: இந்த உலகத்தில் மிக நீண்ட வரலாற்றை கொண்டவர் சிவபெருமான். பல தெய்வங்கள் கோயில் கொண்டு இங்கு காட்சி கொடுத்து வருகின்றனர். பல மதங்களில் பல தெய்வ வழிபாடும் இங்கு நடந்து வருகின்றன. பல நாடுகளில் பல்வேறு விதமான மதங்கள் கடைபிடிக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் பல்வேறு விதமான மதங்கள் பல தெய்வ வழிபாடுகளை அடிப்படையாகக் கொண்டு இருந்து வருகின்றன. சில நாடுகள் கிறிஸ்துவ மதத்தையும் சில நாடுகள் இஸ்லாமிய மதத்தையும், சில நாடுகளில் இந்து மதத்தையும் பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர்.
ஒவ்வொரு கடவுளும் தனித்துவமான பிரதிநிதித்துவத்தை கொண்டு வழிபாடுகள் செய்யப்பட்டாலும் உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். உலகம் முழுவதும் இவருக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மனித உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து சிவபெருமானை மட்டுமே வாழ்க்கையாக நினைத்து வழிபாடு செய்யும் எத்தனையோ பக்தர்கள் இங்கு வாழ்ந்து மறைந்து உள்ளனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்த மன்னர்கள் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். எந்த செயலை தொடங்கும் சிவபெருமானின் அனுமதி பெற்று தொடங்கக்கூடிய வழக்கத்தை இவர்கள் வைத்து வந்துள்ளனர்.
அதனை பெருமைப்படுத்தும் விதமாகவே மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்து வந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக வானத்தை தொட்டபடி நிற்கின்றன. இப்படிப்பட்ட கட்டிடக்கலை எப்படி முடியும் என தொழில்நுட்பத்திற்கு சவாலாக பல கோயில்கள் இருந்து வருகின்றன.
சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு சோழர்களின் மாபெரும் மன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் தஞ்சாவூர் மாவட்டம் அம்மங்குடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். இது அம்மன்குடி துர்கா தேவி திருக்கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. கைலாசநாதர் மூலவராக இருந்தாலும் துர்கா தேவியே பிரதான கடவுளாக வணங்கப்பட்டு வருகிறார்.
தல பெருமை
இந்த திருக்கோவிலில் இருக்கக்கூடிய விநாயகர் பெருமானின் சிற்பம் ஆனது சாலக்கிரமத்தில் செய்யப்பட்டது ஆகும். இது காலை நேரத்தில் பச்சை நிறமாகவும், மதிய நேரத்தில் நீல நிறமாகவும், மீண்டும் மாலை நேரத்தில் பச்சை நிறமாகவும் தனது தன்மையை மாற்றக்கூடியது ஆகும்.
தன்னூல் சிவபெருமானை அடக்கி துர்கா தேவி அம்மன் காட்சி கொடுக்கின்ற காரணத்தினால் அவரே பிரதான கடவுளாக வணங்கப்பட்டு வருகிறார். இந்த கோயிலில் வழிபட்டால் திருமண தோஷம், குழந்தையின்மை நாகதோஷம் உள்ளிட்டவைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
தல வரலாறு
பெரும் கோபம் கொண்டு துர்க்கை அம்மன் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தார். அதனால் அவர் தோஷம் பெற்றார். அது தோஷத்தை போக்குவதற்காக சிவபெருமானை எண்ணி பூலோகத்தில் உள்ள தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து தவமிருந்தார். அங்கே ஒரு விநாயகர் மற்றும் சிவலிங்கத்தை ஸ்தாபித்து தியானம் செய்ய தொடங்கினார்.
தொடர்ந்து துர்க்கை அம்மன் 12 ஆண்டுகள் தவம் செய்தார். அவருடைய 94 மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் அவர் முன்பு தோன்றி தோஷத்தை நீக்கினார். அதன்பிறகு இந்த இடத்திலேயே தங்கி இங்கு உன்னை தரிசிக்க வருபவர்களுக்கு சகலதோஷத்தையும் நீக்கி அருள் புரிய வேண்டும் என சிவபெருமான் கூறினார்.
அதன்படி துர்கா தேவி தவமிருந்து இடத்திலேயே அமர்ந்தார். அதன் காரணமாக அவர் தவம் செய்த இடம் தபோவனம் என அழைக்கப்பட்டது. துர்கா தேவியின் பாவத்தை போக்கிய தீர்த்தம் பாவ விமோசன தீர்த்தம் என அழைக்கப்பட்டது. அம்மன் குடியிருக்க தேர்ந்தெடுத்த இடம் என்கின்ற காரணத்தினால் இந்த ஊருக்கு அம்மன்குடி என்று பெயர் வைக்கப்பட்டது. காலப்போக்கில் அம்மங்குடி என அருவியது.