துண்டு துண்டாக சிதறிய பார்வதி தேவி.. சுயம்பு லிங்கமாக காளத்தீஸ்வரர்.. ஜன்னல் வழியாக வழிபடும் நந்தி
Kalatheeswarar: பழமையான கோயில்கள் எத்தனையோ நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருள்மிகு காலத்தீஸ்வரர் திருக்கோயில்.
Kalatheeswarar: உலகம் முழுவதும் மிகப் பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். இந்தியாவில் எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. ஆதிகாலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் குறைந்தபாடு கிடையாது.
மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே சிவபெருமானை பல உயிரினங்கள் வழிபட்டுள்ளதாக புராணங்களில் கூறப்படுகின்றன. அதற்குப் பிறகு மனிதர்கள் சிவபெருமானை வழிபட்டு வந்துள்ளனர். மன்னர்கள் ஆட்சி காலம் தொடங்கிய பிறகு மன்னர்கள் குலதெய்வமாக சிவபெருமானை வணங்கி வந்துள்ளனர்.
இந்தியாவின் தெற்கு பகுதியை ஆண்டு வந்த சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். மண்ணுக்காக போரிட்டு வந்தாலும் மறுபுறம் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை வானுயர்ந்து வரலாற்று சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது. எத்தனையோ கோயில்கள் அவர்களின் பக்தியை வெளிப்படுத்தி வருகிறது.
மிகப்பெரிய சோழ மன்னன் ஆக திகழ்ந்து வந்த ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை கொடுத்து வரும் கோயிலாக திகழ்ந்து வருகின்றது. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக நின்று வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் பாண்டியர்கள் கட்டி தங்களது பக்தியை வெளிப்படுத்தி சென்றுள்ளனர். இதுபோல மன்னர்கள் தாங்கள் சென்ற இடத்தில் எல்லாம் சிவபெருமானை வழிபட்டு அங்கே கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு பழமையான கோயில்கள் எத்தனையோ நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருள்மிகு காலத்தீஸ்வரர் திருக்கோயில்.
தல சிறப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு ராகு மற்றும் கேது இருவரும் ஓர் இரவு இந்த கோயிலில் தங்கி சிவபெருமானை வழிபட்டதாக கூறப்படுகிறது. அதனை பறைசாற்றும் விதமாக இந்த கோயிலில் ராகு மற்றும் கேது இருவரும் ஒருவரின் பின் ஒருவர் நின்ற காலத்தில் காட்சி கொடுத்த வருகின்றனர்.
இந்த திருக்கோயிலில் நவகிரகங்கள் ஒரே இடத்தில் இல்லாமல் தனித்தனியாக காட்சி கொடுப்பது மிகப்பெரிய சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திருக்கோயிலில் சனிக்கிழமை தோறும் சர்ப தோஷ நிவர்த்தி பூஜை நடைபெறுகின்றது. இந்த பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் சர்ப்ப தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.
தல சிறப்பு
பார்வதி தேவி சிவபெருமானை மதிக்காமல் அவருடைய தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்குச் சென்றார். அப்போது பார்வதி தேவி அவருடைய தந்தை தட்சனால் அவமானப்படுத்தப்பட்டார். இதனால் தனது உயிரை தியாகம் செய்தார் பார்வதி தேவி.
இதில் மிக உச்ச கோபம் அடைந்த சிவபெருமான் தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பி தட்சணின் யாகத்தை அழித்தார். அதற்குப் பிறகு சிவபெருமான் பார்வதி தேவியின் உடலை எடுத்து உன் மத்த நடனம் ஆடினார்.
உச்ச கோபத்தில் சிவபெருமான் நடனம் ஆடிய காரணத்தினால் பார்வதி தேவியின் உடல் அங்கங்கள் பூமியில் பல இடங்களில் சிதறி விழுந்தன. அந்த அனைத்து இடங்களும் சக்தி பீடங்களாக மாறின. அதன் பின்னர் சிவபெருமான் பூமிக்கு வந்து யோகம் மேற்கொள்ள முடிவு செய்தார்.
அதற்கு தகுந்த இடத்தை பார்ப்பதற்காக தனது கழுத்தில் இருந்து நாகத்தை அனுப்பி வைத்தார். அந்த நாகம் ஐந்து இடங்களை அடையாளம் காட்டியது. அதில் முதலிடம் தான் காளஹஸ்தி. இரண்டாவது இடமாக கூறப்படுவது தற்போது இருக்கும் காட்டாங்குளத்தூர். இந்த கோயிலில் தான் சிவபெருமான் காளத்தீஸ்வரர் காட்சி கொடுத்து வருகிறார்.
இந்த திருக்கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக காட்சி கொடுத்து வருகிறார். மேலும் அதிக சக்தி கொண்ட லிங்க திருமேனியாக சிவபெருமான் காட்சி கொடுக்கின்ற காரணத்தினால் நந்தி தேவர் இவரை நேராக பார்க்க மாட்டார். சுவரில் ஒரு துளை விட்டு அந்த துவாரத்தின் வழியாக சிவபெருமானை நந்தி தேவர் இந்த கோயிலில் தரிசனம் செய்து வருகிறார்.