Vadakanchi Varatharajar: ராஜராஜசோழன் கட்டிய பெருமாள் கோயில்!
மன்னர் ராஜராஜசோழன் இங்கு பெருமாள் கோயில் ஒன்றைக் கட்டி அதற்கு வரதராஜ பெருமாள் கோயில் என்று பெயர் சூட்டினார்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூரில் அமைந்துள்ளது அருள்மிகு வட காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில். இங்கு வசிக்கும் மக்கள் அக்காலத்தில் சிவனையும், பெருமாளையும் தரிசிக்க காஞ்சிபுரம் செல்ல வேண்டி இருந்தது.
இதனால் பரத்வாஜ் முனிவரின் விடுதலை ஏற்று பெருமான் இங்கு காட்சி தந்தார். இதனை அறிந்த மன்னர் ராஜராஜசோழன் இங்கு பெருமாள் கோயில் ஒன்றைக் கட்டி அதற்கு வரதராஜ பெருமாள் கோயில் என்று பெயர் சூட்டினார் என்பது இதன் தல வரலாறு.
இக்கோயிலின் மூலவர் மற்றும் உற்சவராக வரதராஜ பெருமாளும், தாயாராக விருந்தேவி தாயாரும் உள்ளனர். தல விருட்சமாக மகிழமரம் உள்ளது. வரதராஜ பெருமாள் கோயிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் தோற்றப்பொலிவுடன் காட்சி தருகிறது.
பெருமாளுக்கு வலது புறம் பெருந்தேவி தாயாரும், இடது புறமாக ஆண்டாளும் உள்ளனர். சக்கரத்து ஆழ்வார், நரசிம்மர், அனுமார் உள்ளிட்ட சன்னதிகள் கோயிலுக்குள் அமைந்துள்ளது. முன் மண்டபத்தில் தசாவதார காட்சி சிற்பங்களும் அஷ்டலட்சுமி சிற்பங்களும் அமைக்கப்பட்டு இருக்கிறது.
வைகாசி விசாகம், பிரமோற்சவ விழா தேரோட்டம், கருட சேவை, புரட்டாசி வெள்ளி போன்றவை இங்கு முக்கிய திருவிழாவாக உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேர்வோடும் நாளன்று மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோயிலிலும் தேரோடுவது வழக்கம்.
இந்த வழக்கம் தொண்டு தொட்டு தேர ரோட்டத்தின் போது பெருமாளுக்கும், சிவனுக்கும் ஒரே தேரை பயன்படுத்துகின்றனர். இக்கோயிலில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமண தடை நீங்கும் என்றும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏகாம்பரநாதர் கோயிலில் காலை 7 முதல் 12 மணி வரை அதே போல் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். சென்னையில் இருந்து ரயில் மார்க்கமாக மீஞ்சூர் ரயில் நிலையத்திலிருந்தும், பேருந்து வழியாகவும் சென்று வட காஞ்சி ஏகாம்பரநாதரை தரிசிக்கலாம்.