மன்னர் கனவில் தோன்றிய சிவபெருமான்.. கோயிலில் அமர்ந்த ஜலகண்டேஸ்வரர்.. கங்கை நதி கிணற்றில் இருக்கும் தலம்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மன்னர் கனவில் தோன்றிய சிவபெருமான்.. கோயிலில் அமர்ந்த ஜலகண்டேஸ்வரர்.. கங்கை நதி கிணற்றில் இருக்கும் தலம்

மன்னர் கனவில் தோன்றிய சிவபெருமான்.. கோயிலில் அமர்ந்த ஜலகண்டேஸ்வரர்.. கங்கை நதி கிணற்றில் இருக்கும் தலம்

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 01, 2024 06:00 AM IST

Jalakandeswarar: பாண்டிய மன்னர்கள் கட்டிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலும் மதுரை மாவட்டத்தின் களஞ்சியமாக திகழ்ந்து வருகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் வேலூர் மாவட்டம் அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில்.

மன்னர் கனவில் தோன்றிய சிவபெருமான்.. கோயிலில் அமர்ந்த ஜலகண்டேஸ்வரர்.. கங்கை நதி கிணற்றில் இருக்கும் தலம்
மன்னர் கனவில் தோன்றிய சிவபெருமான்.. கோயிலில் அமர்ந்த ஜலகண்டேஸ்வரர்.. கங்கை நதி கிணற்றில் இருக்கும் தலம்

தனக்கென ஒரு உருவம் இல்லாமல் லிங்க திருமேனியாக உலகம் எங்கும் சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார். மனைவிக்கு சரிசமமான இடத்தை உடலில் கொடுத்து ஆணும் பெண்ணும் சமம் என உணர்த்தியவர் சிவபெருமான்.

இந்தியாவில் இருந்து சென்ற மக்கள் அனைத்து நாடுகளிலும் கோயில்களில் எழுப்பி சிவபெருமானுக்கு வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். தற்போதைய காலம் மட்டுமல்லாது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல மன்னர்கள் பல நாடுகளுக்குச் சென்று சிவபெருமானுக்கு கோயில் எழுப்பி வழிபாடுகள் நடத்தி வந்துள்ளனர்.

மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. மன்னர்கள் காலம் தொடங்கிய பிறகு மண்ணுக்காக பல போர்களை செய்தாலும் அனைத்து மன்னர்களும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.

குறிப்பாக இந்தியாவில் இருக்கக்கூடிய பக்தர்கள் தங்களது வாழ்க்கையை சிவபெருமானுக்காக அர்ப்பணித்து துறவியாக வாழ்ந்து வருவதை நாம் காணலாம். அப்படி மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் சிவபெருமானுக்கு இந்தியாவில் இருந்து வருகிறது. திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு இந்தியாவில் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

யோக நிலையில் இருக்கக்கூடிய சித்தர் தான் சிவபெருமான் என ஒருபுறம் மக்கள் கூறுகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்த மன்னர்கள் வானுயர்ந்த பல கோயில்களை கட்டி சிவபெருமானை போற்றி வாழ்ந்துள்ளனர். அப்படிப்பட்ட கோயில்கள் எத்தனையோ நமது தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன.

அவர்கள் கட்டிய கோயில்கள் இன்றும் வரலாற்றின் சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகிறது. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சில கோயில்கள் எப்படி கட்டி இருப்பார்கள் என பல ஆராய்ச்சியாளர்கள் வியப்பில் ஆழ்ந்து உள்ளனர்.

இதுபோல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வரலாற்றை எடுத்துக் கூறும் கோயில்கள் எத்தனையோ உள்ளன. சோழ மன்னர்களின் மாமன்னாகத் திகழ்ந்து வந்த ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் இன்று வரை அதற்கு சான்றாக இருந்து வருகிறது.

பாண்டிய மன்னர்கள் கட்டிய மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலும் மதுரை மாவட்டத்தின் களஞ்சியமாக திகழ்ந்து வருகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் வேலூர் மாவட்டம் அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில்.

தல சிறப்பு

இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் ஜலகண்டேஸ்வரர் எனவும் தாயார் அகிலாண்டேஸ்வரி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர். இந்த கோயிலின் தீர்த்தமாக கங்கா பாலாறு மற்றும் தாமரை புஷ்கரணி விளங்கி வருகிறது. தலவிருச்சமாக வன்னி மரம் திகழ்ந்து வருகிறது.

குறிப்பாக சைவம் மற்றும் வைணவம் இந்த இரண்டு சமயங்களும் ஒன்றுதான் என நிரூபிக்கும் கோயிலாக இந்த கோயில் திகழ்ந்து வருகிறது. இந்த கோயிலில் சிவபெருமான் பத்ம விமானத்தின் கீழ் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அதற்குப் பின்னால் இருக்கும் சன்னதியில் திருப்பதி கோயிலில் இருக்கக்கூடிய அமைப்பின் வெங்கடேச பெருமாள் காட்சிப்படுத்து வருகிறார்.

நாகதோஷம் உள்ளவர்கள் இந்த கோயிலில் வந்து வழிபட்டால் அவர்களுக்கு விரைவில் அந்த தோஷம் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த கோயிலில் இருக்கக்கூடிய அம்பாள் அகிலாண்டேஸ்வரி சன்னதியில் அணையா நவசக்தி தீபம் எரிந்து வருகிறது. தீபத்தின் வாயிலாக அம்மன் அருள் பாலித்து வருவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

இந்த கோயிலில் கிணறு வடிவத்தில் கங்கை நதி இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அருகே கங்கா பாலா ஈஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார். இந்த விக்ரகம் இந்த கிணற்றில் கிடைக்கப் பட்டதாக கூறப்படுகிறது. கங்கை நதியே இங்கு பொங்கி வருவதாக தல வரலாற்றில் கூறப்படுகிறது.

இந்த கோயிலில் வந்து பக்தர்கள் வழிபட்டால் காசி விசுவநாதர் கோயிலில் வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. நான்கு சீடர்களுடன் தட்சிணாமூர்த்தி உற்சவராக இங்கு காட்சி கொடுத்து வருகிறார்.

தல வரலாறு

இந்த கோயிலில் இருக்கக்கூடிய லிங்கத்தை சப்தரிஷுகளில் ஒருவரான அத்திரு முனிவர் ஸ்தாபித்து வழிபட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் இந்த இந்த லிங்கத்தைச் சுற்றி வேலை மற காடு உருவாகியுள்ளது அதன் பின்னர் லிங்கத்தை புற்று மூடிவிட்டது. அதற்குப் பிறகு அந்த பகுதியை ஆண்ட சிற்றரசரான பூமி என்பவர் கனவில் சிவபெருமான் தோன்றியுள்ளார்.

தான் இருக்கும் இடத்தை அவருக்கு சுட்டி காட்டி உள்ளார். மன்னரும் தூக்கத்திலிருந்து எழுந்து உடனே அங்கு சென்று பார்த்த பொழுது லிங்கம் இருந்துள்ளது. சிவபெருமானின் ஆணைப்படி அங்கே ஒரு கோயிலை எழுப்பி உள்ளார். அதுதான் தற்போது இருக்கக்கூடிய ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில். தற்போதும் இங்கு இருக்கக்கூடிய சிவலிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாக பக்தர்கள் நம்பி வருகின்றனர்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்