சிவனை வேண்டிக் கொண்ட நீலகண்ட நாயனார்.. காட்சி கொடுத்த சிவபெருமான்.. பெயர் பெற்ற நீலகண்டேஸ்வரர்
Neelakandeswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நீலகண்டேஸ்வரர் எனவும் தாயார் மங்களாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Neelakandeswarar: இந்த உலகத்தையே ஆட்டிப்படைக்க கூடிய கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். கடவுள்களுக்கு எல்லாம் கடவுளாக திகழ்ந்து வருவதாக இந்து மதம் கூறுகிறது. சிவபெருமான் மதத்தை கடந்து அனைத்து மக்களுக்குமான கடவுளாக திகழ்ந்து வருகின்றார்.
உலகம் முழுவதும் கோயில் கொண்டு சிவபெருமான் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்கின்றார். எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பல பக்தர்கள் அனைத்தையும் துறந்து விட்டு தங்கள் வாழ்க்கையை சிவபெருமானுக்காக அர்ப்பணித்து வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கு காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வணங்கியதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
மன்னர்கள் காலம் தொடங்கிய பிறகு அனைத்து மன்னர்களும் சிவபெருமானை குலதெய்வமாக வழங்கி வந்துள்ளனர். மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் சிவபெருமானை வழிபடுவதில் போட்டி போட்டுக் கொண்டு கோயில்கள் கட்டி தங்களது பக்தியை வெளிப்படுத்தி உள்ளனர். கலைநயத்தோடு பல கோயில்களை கட்டி அதில் மூலவராக சிவபெருமானை நிறுத்தி வைத்து சென்றுள்ளனர். தனக்கென உருவம் இல்லாமல் சிவபெருமான் லிங்க திருமேனியாக காட்சி கொடுத்து வருகிறார். இன்றும் பல கோயில்கள் வானுயர்ந்து அதற்கு சாட்சியாக வாழ்ந்து வருகின்றன.
மாபெரும் சோழ மன்னனாக விளங்கி வந்த ராஜராஜ சோழன் கட்டி வைத்துச் சென்ற தஞ்சை பெருவுடையார் கோயில் அதற்கு சான்றாக திகழ்ந்து வருகிறது. சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் கம்பீரமாக வானுயர்ந்து காணப்படுகின்றன. சில கோயில்கள் எப்படி கட்டப்பட்டது என பல ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்கள் எத்தனையோ நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன. அந்த வரிசையில் இருக்கக்கூடிய சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நீலகண்டேஸ்வரர் எனவும் தாயார் மங்களாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் மேற்கு முகமாக காட்சி கொடுத்து வருகிறார் அதுவே மிகவும் தனி சிறப்பாக கூறப்படுகிறது. தாயார் மங்களாம்பிகை கிழக்கு நோக்கி காட்சி கொடுத்த வருகிறார். இந்த கோயிலில் வந்து வழிபட்டால் நமது கேட்டது கேட்டபடி கிடைக்கும் என கூறப்படுகிறது. சிவன் அடியார்கள் அதிகம் வந்து செல்லும் கோயில்களில் ஒன்றாக இந்த திருக்கோயில் விளங்கி வருகிறது.
தல வரலாறு
63 நாயன்மார்களுள் ஒருவராக திகழ்ந்து வந்தவர் திருநீலகண்ட நாயனார். இவர் ஒருமுறை திருவாரூரில் இருக்கக்கூடிய கோயிலுக்கு வந்து தியாகராஜரை வழிபட்டுள்ளார். அப்போது பங்குனி உத்திர திருநாளில் தரிசனம் பெற்றார் நீலகண்ட நாயனார்.
அந்த சமயம் இந்த கோயிலிலேயே நான் ஒரு கோயில் எழுப்ப வேண்டும் அதற்கு உண்டான அருளை தாங்கள் எனக்கு தர வேண்டும் என தனது மனதில் நீலகண்ட நாயனார் சிவபெருமானிடம் வேண்டியுள்ளார். நீலகண்ட நாயனார் வேண்டிய படியே சிவபெருமான் மேற்கு திசையை நோக்கி அருள் பாலித்தார். அப்படியே நீலகண்ட நாயனார் சிவபெருமானுக்கு கோயில் அமைத்து வழிபட்டார்.
மேற்கு முகமாக சிவபெருமானை திருநீலகண்ட நாயனார் வழிபட்ட கோயில்தான் இந்த நீலகண்டேஸ்வரர் கோயில். திருநீலகண்ட நாயனார் வழிபட்டதன் காரணமாக இங்கு வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நீலகண்டேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.
தொடர்புடையை செய்திகள்