Friday Temple: நவ கைலாய தலம்.. அருளைக் கொட்டும் கைலாசநாதர்.. தோஷம் போக்கும் சனி..
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Friday Temple: நவ கைலாய தலம்.. அருளைக் கொட்டும் கைலாசநாதர்.. தோஷம் போக்கும் சனி..

Friday Temple: நவ கைலாய தலம்.. அருளைக் கொட்டும் கைலாசநாதர்.. தோஷம் போக்கும் சனி..

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 06, 2024 06:00 AM IST

Friday Temple: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் கைலாசநாதர் எனவும் தாயார் சிவகாமி தேவி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

Friday Temple: நவ கைலாய தலம்.. அருளைக் கொட்டும் கைலாசநாதர்.. தோஷம் போக்கும் சனி..
Friday Temple: நவ கைலாய தலம்.. அருளைக் கொட்டும் கைலாசநாதர்.. தோஷம் போக்கும் சனி..

மனிதன் தோன்றுவதற்கு முன்பாகவே உலகத்தில் இருந்த உயிரினங்கள் அனைத்தும் சிவபெருமானையும் வணங்கியுள்ளதாக புராணங்களில் கூறப்படுகின்றன அப்படிப்பட்ட புராணங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு விதமான கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக இந்த உலகத்தையே ஆண்ட மன்னர்களும் சிவபெருமானை குல தெய்வமாக வணங்கி வந்துள்ளனர். இந்தியாவின் தெற்கு பகுதியை ஆண்டு வந்த சோழர்களும் பாண்டியர்களும் மண்ணுக்காக ஒருபுறம் போரிட்டு வந்தாலும் மறுபுறம் தங்களது தீவிர பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை தாங்கள் தங்கிய இடமெல்லாம் நிறுவி சென்றுள்ளனர்.

அப்படிப்பட்ட கோயில்கள் இன்று வரை காலத்தால் அழிக்க முடியாமல் கம்பீரமாக நின்று வருகின்றன. பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை வரலாற்று சரித்திர குறியீடாக திகழ்ந்த வருகின்றன.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் கைலாசநாதர் எனவும் தாயார் சிவகாமி தேவி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.

தல சிறப்பு

இந்த திருக்கோயில் நவகைலாயங்களில் ஆறாவது திருக்கோயிலாக திகழ்ந்து வருகிறது இது சனி பகவானின் திருக்கோயில் ஆகும் இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய கொடி மரமானது கன்னியாகுமரியில் இருக்கும் பகவதி அம்மன் திருக்கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்டது.

குறிப்பாக ஒரே ஊரில் நவகைலாயமும் நவதிருப்பதியும் சேர்ந்து அமைந்துள்ளது மிகப்பெரிய விசேஷமாக கருதப்படுகிறது. இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய பூதநாதர் சிலையானது ஒரே மரத்தால் செய்யப்பட்டதாகும் அது மேலும் சிறப்பாகும்.

குறிப்பாக குமரகுருபரர் குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள் ஊமையாக பிறந்து திருச்செந்தூரில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமானின் அருளால் பேசும் சக்தியை பெற்றவர். அவர் குமரகுருபரர் பிறந்த ஊர் இதுதான்.

சனி பகவான்

இந்த திருக்கோயிலில் சனி பகவானுக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சனிபகவானால் தோஷங்கள் ஏற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் கோயிலில் வீற்றிருக்கக்கூடிய கைலாசநாதர் இருக்கும் சனி பகவானுக்கும் விசேஷ பூஜை செய்து வேண்டிக் கொண்டால் சனி பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்திலிருந்தும் நிவர்த்தி அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக விளங்கி வருகிறது. குறிப்பாக சனி பெயர்ச்சியின் போது பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் இங்கு வந்து வழிபட்டால் சனிபகவானின் உக்கிரம் குறையும் என்பது ஐதீகமாகும்.

இந்த திருக்கோயிலில் ஒரே மரத்தால் செய்யப்பட்ட பூதநாதர் சிலை அமைந்துள்ளது. இவரே இந்த திருக்கோயிலில் மிகவும் விசேஷமாகும். சித்திரை திருவிழா நடக்கும் பொழுது இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய பூதநாதருக்கே முதல் மரியாதை கொடுக்கப்படுகின்றது. அதற்குப் பிறகு சிவபெருமானுக்கு வழிபாடுகள் நடத்தப்படுகின்றது.

தல வரலாறு

அகத்தியரின் சிஷ்யராக விளங்கி வந்த உரோமபசர் முனிவர் மிதக்கப்பட்ட மலர்களில் ஆறாவது மலர் கரை ஒதுங்கியது அந்த கோயில்தான் தற்போது கைலாசநாதர் கோயிலாக வீற்றிருக்கின்றது. இந்த இடத்தில் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு அதன் பிறகு அவருக்கு கைலாசநாதர் என பெயர் விடப்பட்டது.

சனிபகவானின் அம்சமாக இங்கு கைலாசநாதர் திரு காட்சி கொடுத்து வருகிறார். மேலும் சிவகாமி அம்பாளோடு காட்சி கொடுத்து வருகிறார். இங்கு வீச்சி இருக்கக்கூடிய நந்தி பெருமானை சுற்றி 108 விளக்குகள் அமைந்துள்ளன. அந்த விளக்குகளை இயற்றி பக்தர்கள் வழிபட்டால் அவர்களுடைய வாழ்க்கையில் ஐஸ்வர்யம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அற்புத வேலைபாடுகளுடன் கூடிய அழகிய சிற்பங்கள் இந்த காணப்படுகின்றன நவகை திருக்கோயில்களில் இது ஆறாவது கோயில். நடராஜர் இங்கு சந்தன சபாபதி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றார்.

Whats_app_banner