தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Sign People Who Are Going To Get Good From Lord Shani

Shani Rasis: சனிபகவானின் அருள் நிறைந்த ராசிகள் இவர்கள் தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 10, 2024 10:20 AM IST

சனி பகவானால் நல்லது பெற போகும் ராசிக்காரர்களை காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

கர்மநாயகனாக விளக்கக்கூடிய சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் பாரபட்சம் இல்லாமல் இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.

சனிபகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் தான் இருப்பார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அப்படி சனிக்கு எப்போதும் பிடித்த ராசிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

சந்திர பகவானை அதிபதியாகக் கொண்டவர்கள் நீங்கள். சந்திர பகவான் மற்ற கிரகங்களை நட்பு கிரகமாக நினைப்பார். ஆனால் மற்ற கிரகங்கள் சந்திர பகவானை எதிரியாக பார்ப்பார்கள். இருப்பினும் சனி பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். கடின உழைப்பு உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் இருக்கும். பணவரவில் குறை இருக்காது.

துலாம் ராசி

 

சனி பகவான் உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை கொடுப்பார். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வாழ்க்கையில் உயர்நிலை பெறுவீர்கள் வெற்றி எதிர்பாராத நேரத்தில் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டத்திற்கு எந்த குறையும் இருக்காது.

மகர ராசி

 

சனிபகவான் உங்கள் ராசியின் அதிபதியாக விளக்கி வருகிறார். தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். சரிபகவானின் சிறப்பு அருள் உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும் என கூறப்படுகிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். கடின உழைப்பு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்று தரும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் உண்டாகும் என கூறப்படுகிறது.

கும்ப ராசி

 

சனிபகவான் உங்கள் ராசியில் பயணம் செய்து வருகின்றார். உங்களின் அதிபதியாக அவர் விளங்குகிறார். வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு சனி பகவானின் அருள் கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நினைத்த நேரத்தில் வருமானம் இருக்கும். வாய்ப்புகள் உங்களுக்கு அமையும்.

ரிஷப ராசி

 

சுக்கிர பகவானின் சொந்த ராசியாக நீங்கள் உள்ளீர்கள். சனிபகவான் உங்களுக்கு ஒருபோதும் துன்பத்தை கொடுப்பது கிடையாது. இக்கட்டான சூழ்நிலைகளில் சனி பகவான் உங்களை காப்பாற்றுவார். கஷ்டங்கள் ஏற்பட்டாலும் சனி பகவானின் தாக்கம் உங்களுக்கு பெரிதாக இருக்காது. உங்களை காப்பாற்றுவதற்காகவே இவர் முழு வேலையும் செய்வார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.