தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024 Chithirai: நண்பர்களால் மகிழ்ச்சி, பணப்புழக்கம் கையில் இருக்கும் - சித்திரை நட்சத்தினருக்கான பலன்கள்

Guru Peyarchi 2024 Chithirai: நண்பர்களால் மகிழ்ச்சி, பணப்புழக்கம் கையில் இருக்கும் - சித்திரை நட்சத்தினருக்கான பலன்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 24, 2024 11:00 PM IST

சித்திரை நட்சத்திரம் முதல் இரண்டு பாதங்கள் கன்னி ராசியிலும், மூன்று மற்றும் நான்காவது பாதம் துலாம் ராசியிலும் உள்ளது. எதிர்வரும் குரு பெயர்ச்சியால் சித்திரை நட்சத்தினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

குரு பெயர்ச்சியால் சித்திரை நட்சத்தினர் பெறும் நன்மைகள்
குரு பெயர்ச்சியால் சித்திரை நட்சத்தினர் பெறும் நன்மைகள்

குரு பெயர்ச்சியால் சித்திரை நட்சத்தினர் பெறும் பலன்கள்

சித்திரை நட்சத்திரம் கன்னி, துலாம் ராசியில் இடம்பிடித்துள்ளது. சித்திரை நட்சத்தினர் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருக்கிறீர்கள். இந்த பெயர்ச்சியில் தெய்வ அனுகூலம் கிடைக்கும்.

பொருளாதார நிலையயை பொறுத்தவரை வருமானம் போதிய அளவில் இருக்கும். எனவே பணம், தனம் கையில் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். நம்பிக்கைக்கு உரியவர்களால் நன்மை பெறுவீர்கள். நண்பர்களால் மகிழ்ச்சி கிடைக்கும். உறவினர்கள் கைகொடுப்பார்கள்.

கிரக நிலைகள் சாதகமான நிலையில் இருப்பதால் துணிச்சலாக நீங்கள் செய்யும் காரியம் அனுகூலம் அடையும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் வெற்றியை பெறுவீர்கள். எதிர்பாராத பயணங்கள் அமையும்.

இடமாற்றம் உண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலையில் கவனமாக இல்லாவிட்டால் வெளியேற்றப்படும் சூழலும் உள்ளது. உங்கள் உழைப்பால் மற்றவர்கள் லாபம் அடைந்தாலும் செய்யும் வேலையில் முழு ஈடுபாடுடன் இருக்க வேண்டும். கடன் இருப்பவர்களுக்கு குறைவதற்கான சூழல் உருவாகும்.

திருமணம் தள்ளிபோனவர்களுக்கு இந்த காலகட்டத்தில் வரன்கள் அமையும். உடல் நல பாதிப்பு, நாள்பட்ட நோய் பாதிப்பில் இருப்பவர்கள் குணமடைவார்கள்.

மேற்படிப்பு படிக்க விரும்பியோருக்கு விரும்பிய படிப்பு கிடைக்கும். தொழில் செய்வோருக்கு பெரிய பிரச்னைகள் எதுவும் வராது. எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்