3 Rasis: ஐப்பசி பெளர்ணமியில் நிகழும் சந்திர கிரகணம்.. வெற்றியை ருசிக்கப்போகும் 3 ராசிகள்
ஐப்பசி பெளர்ணமியில் நிகழும் சந்திர கிரகணத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து காண்போம்.
சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும் ஒரு வருடத்தில் தலா இரண்டு முறையாவது நடந்துவிடும். அதன்படி, இரண்டு முறை சூரிய கிரகணம் நடந்து முடிந்துவிட்டது. ஒரு முறை சந்திரகிரகணம் நடந்துவிட்டது. இந்நிலையில் இந்த வருடத்தின் கடைசி சந்திர கிரகணம் வரும் அக்டோபர் 28ஆம் தேதி நடக்க இருக்கிறது.
இந்த வருடம் வரும் சந்திர கிரகணம், ஐப்பசி மாத பெளர்ணமியில் நடக்கிறது. இது ஒரு அபூர்வ நிகழ்வாகும். அதுவும் 30 ஆண்டுகளுக்குப் பின், ஐப்பசி பெளர்ணமியில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இதன் தாக்கத்தால் சில ராசியினர் தொழில் முன்னேற்றம் பெற்று, பணத்தை கூடுதலாக சம்பாதிப்பர்.
அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்துப் பார்ப்போம்.
ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு இந்த சந்திர கிரகணத்தின்போது நீண்டநாட்களாக கைகூடாமல் இருந்த பணிகள் நிறைவேறும். திருமணத் தடை நீங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒருதலைக்காதல், இருதலைக்காதலாக மாறும். தொழில் முனைவோர் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வங்கிக் கணக்கில் சேமிப்பினை அதிகப்படுத்துவீர்கள்.
மிதுனம்: இந்த ராசியினருக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த மன அழுத்தம் வரும் அக்டோபர் 28ஆம் தேதி சந்திர கிரகணத்திற்குப்பின் குறையும். வீட்டுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் சூழல் ஏற்படும். இத்தனை உங்களைத் தவறாக நினைத்தவர்கள்கூட வந்து பேசுவார்கள். தொழில் முனைவோர் நல்ல லாபத்தைப் பெறுவோர்.
கடகம்: இந்த ராசியினருக்கு சந்திர கிரகணமானது அதிரிபுதிரி லாபத்தைப் பெறுவீர்கள். பணியிடமாற்றம் செய்ய நினைத்தால் இந்த காலகட்டத்தில் முயற்சித்தால் பலன் கிடைக்கும். நீண்டநாட்களாக திருமணம் ஆகாத கடக ராசியினர், இதன்பின் திருமணம் செய்துகொள்ளும் யோகம் வாய்த்துள்ளது. பண விவகாரத்தில் கடன் சுமை நீங்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்