Vaikunda Ekadasi: அசுரர்கள் கேட்ட வரம்.. சொர்க்கவாசல் திறந்த மகாவிஷ்ணு
வைகுண்ட ஏகாதசி திருநாளில் புராண வரலாறு குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மனிதர்களுக்கு ஒரு ஆண்டு கணக்கானது தேவர்களுக்கு ஒரு நாள் கணக்காகும். அதன்படி தேவர்களின் விடியற்காலை நேரமாக மார்கழி மாதம் கணக்கிடப்படுகிறது. இந்த மார்கழி மாதம் மகாவிஷ்ணு விழித்தெழும் காலமாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த மாதத்தில் வரும் ஏகாதசி தினமானது தனி சிறப்பாக போற்றப்படுகிறது.
இந்த மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் எழுந்து திருப்பாவை பாடி மகாவிஷ்ணுவை வழிபட்டால் சொர்க்கலோகத்தில் இடம் கிடைக்கும் என கூறப்படுகின்றது. வைகுண்ட ஏகாதசி திருநாளில் விழித்திருந்து உணவருந்தாமல் மகாவிஷ்ணுவை வழிபட்டால் திறந்திருக்கும் சொர்க்கவாசல் வழியாகச் சென்று மகா விஷ்ணுவின் பாதத்தை அடையலாம் என கூறப்படுகிறது.
சொர்க்கவாசல் கதை
படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மதேவருக்கு தான் என்ற அகந்தை உருவானது. அதனை ஒடுக்க நினைத்த மகாவிஷ்ணு தனது காதுகளில் இருந்து மது மற்றும் கைடபவர்கள் என்ற இரண்டு அசுரர்களை வெளிப்படுத்தினார்.
அவர்கள் இருவரும் மகாவிஷ்ணுவை அழிக்க சென்று விட்டனர். உடனே இருவரையும் மகாவிஷ்ணு தடுத்தார். பிரம்மாவை விட்டு விடும்படி கூறினார். அதற்காக நீங்கள் கேட்கும் வரத்தை நான் கொடுக்கிறேன் எனும் மகாவிஷ்ணு கூறினார். அந்த இரண்டு அசுரர்களும் உங்களுக்கு வேண்டுமானால் நாங்கள் வரம் தருகிறோம் எனக்கு கூறினார்கள்.
உடனே மகாவிஷ்ணு உங்கள் இருவரையும் நான் வதம் செய்யும் வரம் வேண்டும் என கேட்டார். தாங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக மகாவிஷ்ணு கேட்ட வரத்தை அசுரர்கள் கொடுத்தனர். ஆனால் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் ஒரு விண்ணப்பம் வைத்தனர்.
அவர்கள் நீங்கள் எங்களோடு ஒரு மாதம் யுத்தம் செய்ய வேண்டும். அதற்கு பிறகு எங்களை வதம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். அப்படியே ஆகட்டும் என மகாவிஷ்ணு கூறினார். அவர்கள் கேட்டபடியே விஷ்ணு பகவான் யுத்தம் செய்து அவர்களை வீழ்த்தினார்.
அப்போது இரண்டு அசுரர்களும் தங்களுடைய பரமபதத்தில் நாங்கள் எப்போதும் வாசம் செய்ய வேண்டும் என வரம் கேட்டனர். உடனே மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி தினத்தன்று பரமபத வடக்கு புற வாசலை திறந்து அசுரர்களை தன்னோடு பரமபதத்தில் மகாவிஷ்ணு சேர்த்துக்கொண்டார்.
அதன் பின்னர் அந்த அசுரர்கள் பரமாத்மாவே மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி தினத்தன்று உங்கள் ஆலயம் நோக்கி வரக்கூடிய பக்தர்களுக்கும் இதே அனுக்கிரகத்தை வழங்க வேண்டும் என கேட்டனர். மேலும் நீங்கள் வீற்றிருக்கும் கோயில்களில் சொர்க்கவாசல் வழியாக வருபவர்களுக்கு மோட்சம் கொடுக்க வேண்டும் எங்களுக்கு கிடைத்த அதே வரம் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என வரம் கேட்டனர்.
நீங்கள் கேட்ட வரம் உங்களுக்கு கிடைக்கட்டும் என மகாவிஷ்ணு வரத்தை அருளினார். அதன் காரணமாக சொர்க்கவாசல் திறக்கப்படும் நாளில் பெருமாளை வழிபட்டு சொர்க்கவாசல் வழியாக வரும் பக்தர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9