தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vinayakar Luck: விநாயக சதுர்த்தி.. யாருக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகுது?

Vinayakar Luck: விநாயக சதுர்த்தி.. யாருக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகுது?

Aarthi V HT Tamil
Sep 17, 2023 11:00 AM IST

விநாயக சதுர்த்தி நாளில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கும் மிகவும் மங்களகரமானதாக இருக்கப் போகிறது.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி

மேஷம்

விநாயக சதுர்த்தியன்று இந்த ராசியினருக்கு வியாபாரத்தில் லாபகரமாக இருக்கும். உத்தியோகத்தில் ஆதாயம், பண ஆதாயம் உண்டு. வருமானம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

சிம்மம்

விநாயக சதுர்த்தியன்று எதிரிகளின் சதி தோல்வியடையும். பணியில் இருந்த தடைகள் நீங்கி வெற்றி கிட்டும். புதிய திட்டங்களை கை கூடி வரும். பணம் பற்றாக்குறையாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

துலாம்

விநாயக சதுர்த்தி அன்று உங்களின் மன உறுதி பலமாக இருக்கும். உங்கள் நம்பிக்கை வலுவாக இருக்கும். அன்றைய தினம் உங்கள் மனதைத் திருப்திப்படுத்தும் மற்றும் மகிழ்ச்சியைத் தரும் செயலை செய்தால் அது வெற்றி பெறும்.

கன்னி

பொருளாதாரத்தில் வெற்றி கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்து கை கூடும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும்.

தனுசு

நிதி ரீதியாக மிகவும் லாபம், மரியாதை அதிகரிக்கும். பல துறைகளில் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன. தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்