தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ganesh Chaturthi: விநாயகர் சிலை எந்த நேரத்தில் வாங்க வேண்டும்? வழிபட வேண்டிய நேரம் என்ன?

Ganesh Chaturthi: விநாயகர் சிலை எந்த நேரத்தில் வாங்க வேண்டும்? வழிபட வேண்டிய நேரம் என்ன?

Aarthi V HT Tamil
Sep 17, 2023 12:00 PM IST

விநாயகர் சதுர்த்தி நாளில் விநாயகர் சிலை எந்த நேரத்தில் வாங்கி வீட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பார்க்கலாம்.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி நாளை ( செப்டம்பர் 18 ) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்க போகிறது. அவர்களின் வீடு செல்வச் செழிப்பால் நிறைந்திருக்கும். அந்த ராசிக்காரர்கள் என பார்க்கலாம்.

பலருக்கு விநாயக சதுர்த்தி வீட்டில் எந்த நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும். எப்போது விநாயகர் வாங்கி வர வேண்டும் என பல சந்தேகம் இருக்கும். இதனிடையே விநாயக சதுர்த்தி வீட்டில் வழிபடும் செய்ய வேண்டிய நேரம் பற்றி பார்க்கலாம்.

செப்டம்பர் 18 ஆம் தேதி திங்கட்கிழமை என்பதால் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் உள்ளது. அதனால் காலை 6.00 - 7.30 மணிக்குள் அல்லது 9 மணிக்கு மேல் விநாயகர் சிலையை வீட்டிற்கு வாங்கி வருவது நல்லது. 

சதுர்த்தி திதி பகல் 12 மணிக்கு தொடங்குகிறது. எனவே விநாயகர் சதுர்த்தி பூஜையை பகல் 12 மணி முதல் 01.30 வரையிலான நேரத்தில் வழிபாடு செய்யலாம். அப்படி செய்ய முடியவில்லை என்றால் மாலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் எப்போது வேண்டுமானாலும் வழிபாடு செய்து கொள்ளலாம். 

விநாயகர் சதுர்த்தி நாளன்று நாம் மனதார கேட்கும் விஷயங்களை விநாயகர் செய்து கொடுப்பார் என்பது ஜதீகம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்