Sukran Luck: கட்டுமஸ்தான கட்டழகு; காமத்தில் உச்சம் தொட வைக்கும் களத்திர காரகன்! - சொல்லி அடிக்கும் கில்லி பவர் யாருக்கு?
சுக்கிரன் விவேகமும், வேகமும் கொண்டவராக இருக்கிறார். எல்லா கிரகங்களும் மறைந்தால் அதனுடைய சக்தியானது குறையும். ஆனால் சுக்கிரன் மறைந்தால் அதனுடைய சக்தியானது அதிகரிக்கும். அவர் உலக ரகசியங்கள் அனைத்தையுமே அறிந்தவர

ஜாதகத்தில் சுக்கிரனின் சக்தி என்ன? காமத்தில் அவனது பங்கு எத்தகையது என்பது குறித்து ஜோதிடர் கஜேந்திரன் ஒன் டு ஒன் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Mar 19, 2025 06:01 PMகேது பெயர்ச்சி: பணக்கார இடத்தை பிடிக்கப் போகும் ராசிகள் இவர்கள்தானா?.. கடின உழைப்பு தேவை.. கவலைப்படாத ராசிகள்
Mar 19, 2025 05:53 PMருச்சக யோகம்: பணமழை கொட்டும்.. விருச்சக ராசியில் நுழையும் செவ்வாய்.. செல்வ ராசிகள் பட்டியலில் நீங்கள் உண்டா?
Mar 19, 2025 01:34 PMஒரே நாளில் சனிப்பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணம்.. இந்த 3 ராசிக்கு பாதிப்பு.. உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள்!
Mar 19, 2025 11:37 AMஅதிர்ஷ்ட ராசிகள் : நான்கு கிரகங்களின் சேர்க்கை.. மூன்று ராசிக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகுது.. அந்தஸ்து, கௌரவம் உயரும்!
Mar 19, 2025 10:04 AMபிசாசு யோகம்: தரித்திர யோகத்தில் மாட்டிக் கொண்ட ராசிகள்.. ராகு சனி உருவாக்கிய பிசாசு யோகம்.. எது உங்க ராசி?
Mar 19, 2025 09:25 AMகேது பெயர்ச்சி 2025 : சிம்ம ராசியில் பிரவேசிக்கும் கேது.. எந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட் .. பண மழை நனையும் யோகம் உங்களுக்கா
இது குறித்து அவர் பேசும் போது, “ எந்த உயிரினமாக இருந்தாலும், அது தனியாக இருந்தால், எந்தவித பயனும் கிடையாது. ஒரு இடத்தில் பாசிட்டிவும், நெகட்டிவும் சேர்ந்தால்தான் புது உயிரானது உருவாகும்.
பெண்ணால் ஆணுக்கு மகிழ்ச்சி; ஆணால் பெண்ணுக்கு மகிழ்ச்சி. இது எல்லா உயிரினங்களுக்கும் பொது. காமம் தொடர்பான எல்லா விதமான மகிழ்ச்சியையும் கொடுக்கக்கூடியது சுக்கிரன்தான். சுக்கிரன் இல்லாவிடில், இந்த உலகத்தில் இனப்பெருக்கம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது. மகிழ்ச்சி என்ற ஒன்றும் இருக்காது.
அதனால் தான் சுக்கிரனை களத்திர காரகன் என்று சொல்கிறார்கள். சுக்கிரன் திருமணத்தை தீர்மானிக்கக்கூடிய ஒரு கிரகமாகும். யாராலும் குணப்படுத்த முடியாத ஒரு பிரச்சினையை குணப்படுத்தும் வல்லமை , யாராலும் வெல்ல முடியாத ஒரு மனிதர், யாராலும் தெரிந்து கொள்ள முடியாத முடியாத ஒரு ரகசியம் உள்ளிட்டவற்றை குறிப்பது சுக்கிரன் ஆவார்.
சுக்கிரன் விவேகமும், வேகமும் கொண்டவராக இருக்கிறார். எல்லா கிரகங்களும் மறைந்தால் அதனுடைய சக்தியானது குறையும். ஆனால் சுக்கிரன் மறைந்தால் அதனுடைய சக்தியானது அதிகரிக்கும். அவர் உலக ரகசியங்கள் அனைத்தையுமே அறிந்தவர்.
சுக்கிரனுடைய சக்தி மட்டும் ஒருவருக்கு இருந்தால், அவர் எல்லாவிதமான தடைகளையும் உடைத்து வெற்றியை கைவசப்படுத்திவிடுவார். அந்த நபர் எந்த மாதிரியான சூழ்நிலையாக இருந்தாலும், அதில் மகிழ்ச்சியாக இருந்து கொள்வார்.
அவருக்கும் நெருக்கடிகள் வரும். ஆனால் பெரும்பான்மையான நேரங்களில் அவர் மகிழ்ச்சியாகவே இருப்பார். தியானத்தின் வழியாகவும், காமத்தின் வழியாகவும் இறைவனை அடைய முடியும் என்று கூறுகிறார்கள்.
தியானத்தில் உச்சகட்டத்தை அடையும் பொழுதும், காமத்தில் உச்சக்கட்டத்தை அடையும் பொழுதும், கடவுளை அடைய முடியும் என்கிறார்கள். இதில் காமத்தின் வழியாக இறைவனை அடைய வழிகாட்டுபவர் சுக்கிர பகவான்.
சுக்கிரனின் அடையாளமாக பார்க்கப்படுவது அழகு. சுக்கிரன் வலுவாக இருந்தாலே, அவர்களிடம் அழகு மிகுந்து காணப்படும். சுக்கிரபகவான் கலைக்கு சொந்தக்காரன்.
கலை சம்பந்தமான ஏதாவது ஒரு விஷயத்தில், ஒரு நபர் சாதித்துக் கொண்டிருக்கிறார் என்றால், அவருக்கு சுக்கிரனின் சக்தி அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். பாலின சம்பந்தமான நோய்களை உருவாக்குவதும் இந்த சுக்கிரன்தான். சுக்கிரனின் நிறம் வெள்ளையாகும். அந்த கிரகம் நீரை குறிக்கக்கூடிய கிரகம்.” என்று பேசினார்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்