தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Thudaiyur Temple: தீராத நோய் பாதிப்பு நீங்கும் விஷ மங்கலேஷ்வர் திருத்தலம் !

Thudaiyur Temple: தீராத நோய் பாதிப்பு நீங்கும் விஷ மங்கலேஷ்வர் திருத்தலம் !

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 21, 2023 12:14 PM IST

அனைத்து விதமான நரம்பு நோய்களை தண்டுவடம் மூளை சம்பந்தமானமானே நோய்கள் மற்றும் மருத்துவ படிப்பு மாணவர்கள், தொழில் செய்பவர்கள் இங்கு வந்து வணங்குவது நோய் தீர்க்கும் என்ற நம்பப்படுகிறது.

துடையூர்
துடையூர்

திருச்சிராப்பள்ளி - முசிறி - நாமக்கல் - சேலம் சாலையில் திருச்சிராப்பள்ளியிலிருந்து 10வது கி.மீல் துடையூர் உள்ளது.

100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இந்த துடையூர் திருத்தலம். இந்த கோயிலில் விஷ மங்கலேஷ்வரர் மூலவராகவும் அம்மன் மங்கல நாயகியும் அருள் பாலிக்கின்றனர். இந்த கோயிலில் வில்வமரம், மா, பன்னீர் மரங்கள் தல விருட்சங்களாக அமைந்துள்ளது. இங்கு அய்யன் வாய்க்கால் , கொள்ளிட நதி மங்கல தீர்த்தமாக உள்ளது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த திருத்தலத்தில் வட திசையில் அய்யன் வாய்க்காலும், தென் திரையில் கொள்ளிட நதியும் பாய்கிறது. வாய்க்காலை பாலம் வழியாக கடந்து கோயிலுக்கு சென்றால் முன்னால் சாமி சன்னதியின் எதிர்புறம் நந்தி பகவான் மற்றும் பலி பீடம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு உள்ளே கோபுரம் அருகில் ஒரு புறம் மனைவியருடன் சூரியபகவான் காட்சி தருகிறார். மறுபுறம் கோயிலின் காவல் தெய்வமான பைரவர் உள்ளார்.

கருவறையில் லிங்க ரூபத்தில் மூலவர் காட்சி தருகிறார். அருகில் தனி சன்னதில் அம்மன் காட்சி தருகிறார். கோயில் சுற்று பிரகாரத்தில் சரஸ்வதி தேவி தாமரை பீடத்தில் காட்சி தருகிறார். மேலும் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், பிரம்மா லட்சுமி நாராயணர் சிவ துர்க்கை சண்டிகேஷ்வரர் தெய்வங்கள் உள்ளனர். இங்கு தட்சிணா மூர்த்தி திகி சண்டளா என்ற வீணையை தாங்கி இருப்பது விஷேசமான ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த திகி சண்டளா வீணையை சிவ குரு பகவான் அன்றி வேறு யாராலும் பூட்டவும் மீட்டவும் முடியாது என்ற நம்பிக்கை உள்ளது.

பொதுவாக திகி சண்டளா என்னும் அற்புத வீணையால் இசைக்கப்படும் இசையால் நரம்பு தண்டுவடம் மற்றும் மூளையில் எந்த பிரச்சனை இருந்தாலும் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து விதமான நரம்பு நோய்களை தண்டுவடம் மூளை சம்பந்தமானமானே நோய்கள் மற்றும் மருத்துவ படிப்பு மாணவர்கள், தொழில் செய்பவர்கள் இங்கு வந்து வணங்குவது நோய் தீர்க்கும் என்ற நம்பப்படுகிறது.

அதிலும் செவ்வாய் கிழமைகளில் இந்த ஆலையத்தில் தரிசனம் செய்வது விஷேசமாக பார்க்கப்படுகிறது.

இந்த தலத்தில் வாத கல் முனி என்ற விஷேச மூர்த்தி தேவ கற்பக்கல் வடிவில் அருள் பாலிக்கிறார். இந்த தெய்வம் பக்க வாதம் உள்ளிட்ட நோய்களை வாத நோய்களை நீக்க அருள் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. பொதுவாக செவ்வாய், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் இந்த வாதக்கல் முனிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்