தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vastu Sasthiram: இந்த திசையில் மட்டும் தப்பித்தவறி கூட பூஜை அறை வெச்சிடாதீங்க!

Vastu Sasthiram: இந்த திசையில் மட்டும் தப்பித்தவறி கூட பூஜை அறை வெச்சிடாதீங்க!

Manigandan K T HT Tamil
Aug 30, 2023 11:48 AM IST

பூஜை அறை வாஸ்து பற்றி தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பூஜை அறை
பூஜை அறை

மேற்கு-தென்மேற்கு பகுதியில் பூஜை அறை இருந்தால் தொழிலில் வில்லங்கள் ஏற்படும்.

தொழிலில் போட்ட முதலீடு காணாமல் போகும். விபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது.

வடமேற்கு பகுதியில் பூஜை அறை வைத்தால் தரைத்தளம் சமமாக இருக்க வேண்டும். இந்தப் பகுதியில் பூஜை அறை இருந்தால் ஏற்றுக் கொள்ளும் தன்மையும், ஒப்புக் கொள்ளும் தன்மையும் அதிகம் இருக்கும்.

தென்மேற்கு பகுதியில் மட்டும் எக்காரணம் கொண்டும் பூஜை ரூம் வரவே கூடாது.

வடமேற்கு, வடகிழக்கில் கூட பூஜை ரூம் வைக்கலாம். அதேநேரம், திசையை மட்டுமே வைத்து வாஸ்துவை முடிவு செய்துவிடக் கூடாது.

உங்கள் வீடு அமைந்துள்ள இடம். பூமி வாட்டம். தரைமட்ட அளவு. வடமேற்கை விட தென்கிழக்கு மேலே இருக்க வேண்டும். வடமேற்கை விட வடகிழக்கு பள்ளமாக இருக்க வேண்டும்.

வடமேற்கு பகுதியில் பூஜை அறை இருக்கும் உங்கள் வீட்டில் திருமணத் தடை ஏற்படாது. வளர்ச்சி என்பது வடமேற்கில் தான் இருக்கிறது. வடகிழக்கை விட வடமேற்கு பள்ளமாக இருக்கும்போது கிழக்கில் இருந்து மேற்கு தாழ்வான பூமியில் நமது வீடு அமையப்பட்டிருக்கிறது என்றால் குழந்தை பேறு பாக்கியம் இல்லாமல் போகுமாம். கோணங்கள் சரியாக இருந்தால் வீட்டில் எல்லாமே சிறப்பாக அமையும்.

தென்மேற்கு பகுதியில் பூஜை ரூம் இல்லாமல் மற்ற பகுதியில் வைத்திருக்கிறோம். ஆனால், நமது வீட்டில் குழந்தைகளின் கல்வி தடைபடுகிறது என்றால், வடகிழக்கு பகுதியை கவனிக்க வேண்டும்.

வடகிழக்கு பகுதி மேடாக இருந்து, வடமேற்கு பகுதி பள்ளமாக இருக்கும்போது கல்வி தடைபடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்