Guru Peyarchi 2024 Swathi: எதிர்பாராத பணவரவும், அதிர்ஷ்டமும் உண்டு! ஸ்வாதி நட்சத்தினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்
ஸ்வாதி நட்சத்திரம் நான்கு பாதங்களும் துலாம் ராசியில் அமைந்துள்ளது. எதிர்வரும் குரு பெயர்ச்சியால் ஸ்வாதி நட்சத்தினர் பெறப்போகும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக கன்னி, ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரத்தையும் பார்வையிடுகிறார். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நான்கு மாத காலங்களில் குரு வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
ஸ்வாதி நட்சத்திரம் நான்கு பாதங்களும் துலாம் ராசியில் அமைந்துள்ளது. எதிர்வரும் குரு பெயர்ச்சி ஸ்வாதி நட்சத்தினருக்கு எதிர்பாராத வரவுகளை கொடுக்கும் என கூறப்படுகிறது.
குரு பெயர்ச்சியால் சித்திரை நட்சத்தினர் பெறும் பலன்கள்
ஸ்வாதி நட்சத்திரம் ராகு பகவான் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக உள்ளீர்கள். கடந்த காலத்தில் குருபகவானால் சுமாரான பலன்களை தான் பெற்றீர்கள். பல்வேறு விஷயங்களில் தோல்வியை மட்டும் சந்தித்து வந்த நீங்கள் வெற்றிகளை பெறும் காலமாக குரு பெயர்ச்சி அமைகிறது.
குரு திசையில் இருப்பவர்கள் (26 வயது வரை) தடைகளுக்கு பின் ஆதாயம் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள். வேலை தேடுவோர் முயற்சிக்கு பின் பலனை அடைவீர்கள். மணவாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையும். ஒரு சிலருக்கு திருமண தடை ஏற்படவும் செய்யலாம்.
சனி திசையில் இருப்பவர்கள் (45 வயது வரை) நல்ல மாற்றங்களை பெறும் காலமாக இருக்கும். வேலை வாய்ப்பு இருந்த தொந்தரவு, சுய தொழிலில் இருந்து வந்த கடன் பிரச்னை நீங்கும். சுப விரயங்கள் அதிகமாக நிகழும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு. திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன் அமையும்.
புதன் திசையில் இருப்பவர்களுக்கு (62 வயது வரை) பொருளாதார வரவு பெறும் காலமாக அமையும். மன அழுத்தங்கள் நீங்கும். வீட்டுக்கு தேவையான சுப செலவுகள் செய்வீர்கள். தேவைப்படுவோருக்கு பண உதவி செய்வீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.
கேது திசையில் நடக்கும் நபர்களுக்கு (69 வயது வரை) கடன் பிரச்னை அகலும். பிள்ளைகளின் தேவைகள் பூர்த்தி செய்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடு மேற்கொள்வீர்கள்.
சுக்கிர திசையில் இருப்பவர்கள் (89 வயது வரை) உடல் ரீதியாக இருந்து வந்த பிரச்னை விலகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு. சேமிப்புகளை உயர்த்துவீர்கள். நல்ல மாற்றங்களும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும்.
பொதுபலன்கள்
சொத்து விஷயத்தில் இருந்த தடை நீங்கி தீர்வு கிடைக்கும் காலமாக உள்ளது, ஏதோ ஒரு வகையில் எதிர்பாராத பணவரவு கிடைக்கும். நீண்ட காலமாக இருந்து வந்த கடன்களை அடைப்பீர்கள். பண வரவுக்கான வாய்ப்பு பல வகைகளில் இருக்கும்.
மனகுழப்பத்தை விடுத்து எடுத்த காரியத்தில் முழு முயற்சியில் ஈடுபடுங்கள். மற்றவர்களின் ஆலோசனை கேட்பதை தவிருங்கள். குறிப்பாக உறவினர்களிடம் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக உள்ளது. மனஸ்தாபங்கள் ஏற்பட சூழல் உருவாகலாம்.
புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயாரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குழந்தைகளுக்கு வேண்டியதை செய்வீர்கள்.
தொழில் செய்பவர்களுக்கு நல்ல ஏற்றமும், முன்னேற்றமும் உண்டு. முதலீடு செய்வதற்கு ஏற்ப வருமானத்தை பெறுவீர்கள். எதிரிகள் உங்களை வீழ்த்த வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுங்கள்.
வேலையில் இருப்பவர்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது. வேலையில் கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் நற்பலன்களை பெறுவீர்கள். புதிய வேலை தேடுவோருக்கு கிடைக்கும்.
துர்க்கை அம்மனை வழிபடுவதால் பெயர்ச்சியில் கிடைக்க வேண்டிய நற்பலன்களை அனைத்தையும் பெறுவீர்கள்.
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்